சிந்திக்கச் சொன்னது குற்றமா? சிறையும், கொலையும்தான் இஸ்லாத்தின் பதிலா?

(உள்ளே செல்வதற்கு முன் : ஆக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'இஸ்லாமியவாதிகள்' எனும் சொல்லானது சாதாரண முஸ்லிம்களை, இஸ்லாமியர்களைக் குறிக்காது என்பதைக் கவனிக்க.) 

சிந்திக்கச் சொன்னவன் குற்றவாளியாக்கப்பட்டு சிறையிலே அடைக்கப் பட்டு இருக்கின்றான்
, கொலை செய்யப்படுகின்றான், கொலை வெறியோடு துரத்தப் படுகின்றான், அதே நேரம் வன்முறையையும், பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும், ஜிஹாதையும் ஆதரிக்கின்றவர்கள் எல்லாம் “சிறுபான்மை” அனுதாப வேஷம் போட்டும் (Victim Card ப்ளே பண்ணியும்) இஸ்லாமோபோபியா என்று பூச்சாண்டி காட்டியும் நடுநிலையாளர்களினதும், முற்போக்காளர்களினதும், குரலை நசுக்க தந்திரமாக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.இந்து மதத்தையும் சனாதனத்தையும் விமர்சித்த பெரியார் மண்தான் தமிழகம். பெரியார் வழிவந்த திராவிட ஆட்சி நடக்கும் தமிழகத்தில் இன்றும் இந்து மதமும்
, சனாதனமும், பார்ப்பனியமும் விமர்சிக்கப்படுகின்றன, ஆனால் தமிழகத்தில் இன்று இஸ்லாத்தை கேள்வி கேட்க முடியாத, விமர்சிக்க முடியாத நிலையை இஸ்லாமியவாதிகள் மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு ஏற்படுத்தி இருக்கின்றார்கள் என்றால், இஸ்லாமியவாதிகள் தமிழகத்தை இஸ்லாமிய மத அடிப்படைவாத மண்ணாக, தாலிபானிய பூமியாக மாற்றி வருகின்றார்களா என்று கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை. 'சிறுபான்மை' என்கின்ற போலி அநிதாப முகமூடிக்கு, தக்கியாவிற்கு பலிக்கடா ஆகி தமிழக அரசு மெளனமாக இருந்தால் தமிழக மண் தலிபானிய மண்ணாகவே மாற்றப்பட்டு விடும். உதாரணம் தேவை என்றால் சற்றுப் பக்கத்தில் இருக்கும் மாலைதீவின் வரலாற்றைப் படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறியதற்காக தோழர் பாரூக் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்படுகின்றார்
, இஸ்லாம் மதத்தை விமர்சித்ததற்காக தோழர் அனீஷ் திட்டமிடப்பட்ட ரீதியில் கைதுசெய்யப்படுகின்றார், இவை கோயம்புத்தூரில் நடந்தேறி இருக்கின்றன. தாலிபானிய மண்ணின் கந்தகாரில் நடக்க வேண்டியவை எல்லாம் தமிழக மண்ணின் கோயம்புத்தூரில் நடக்கின்றன என்றால் இஸ்லாமியவாதிகள் திட்டமிட்டு தமிழக மண்ணை தாலிபானிய மண்ணாக மாற்றி வருகின்றார்களா என்கின்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியாது. ஒருபுறம் இந்துத்துவா ஊடுருவலின் சவாலை எதிர்கொள்ளும் தமிழகம், இன்னொரு புறத்தில் இஸ்லாமியவாதிகளின் அதிக்கத்திற்கு அடிபணிய வைக்கப்பட்டுள்ளதா? தமிழகத்திற்குப் பக்கத்தில் இருக்கும் கேரளாவில் முன்னாள் முஸ்லிம்களுக்கான 
பதிவு செய்யப்பட்ட அமைப்பு இருக்கின்றது, அவர்கள் பகிரங்கமாக இஸ்லாமிய விமரசனத்தை முன்வைத்து முஸ்லிம்களை சிந்திக்கத் தூண்டி வருகின்றார்கள், ஆனால் இதனை தமிழகத்தில் செய்ய முடியவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள முற்போக்குவாதிகள், தாம் என்ன செய்துகொண்டு இருக்கின்றோம் என்பதைக் குறித்து சிந்திக்க கடமைப் பட்டுள்ளார்கள், மேலும் தாம் இஸ்லாமியவாதிகளின் வலையில் சிக்கிவிட்டோமா என்பதை அவர்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலை உருவாகிவிட்டது.


தமிழக மண் தமிழக மண்ணாக
, பெரியாரிய மண்ணாக, ஜனநாயக மண்ணாக, கருத்துச் சுதந்திரம் உள்ள மண்ணாக இருக்க வேண்டும் என்றால் தமிழக அரசும், முற்போக்கு சக்திகளும், பகுத்தறிவு சிந்தனையாளர்களும் இஸ்லாமியவாதிகளின் சதிவலையில் இருந்து வெளிவர வேண்டும், அந்தச் சதி வலையை அறுத்தெறிய வேண்டும், அதன் மூலமே அனைவருக்கும் கருத்துச் சுதந்திரமும், முஸ்லிம்களுக்கு அறிவியல், வாழ்வியல் விடுதலைக்கான வழியும் கிடைக்கும்.

சாதாரண முஸ்லிம்கள் வேறு
, இஸ்லாமியவாதிகளும், ஜிஹாதிகளும் வேறு என்கின்ற உண்மையை தெளிவாகப் புரிந்துகொள்வதில், உரத்துச் சொல்வதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இஸ்லாமியவாதிகள் பற்றியும், அவர்களின் சதித் திட்டங்கள் பற்றியும், அவர்கள் எவ்வாறு அப்பாவி முஸ்லிம்களை பலிக்கடா ஆக்கி தமது இலக்கை நோக்கி செல்கின்றார்கள் என்பது பற்றியும் அறிந்துகொள்ள : http://www.allahvin.com/2021/11/Islamist.htmlஇஸ்லாத்தை விட்டு வெளியேறியதற்காகவும், இஸ்லாத்தை ஆக்கபூர்வமாக விமர்சிப்பதற்காகவும், முஸ்லிம்களை சிந்திக்கத் தூண்டுவதற்காகவும் எத்தனை கொலைகள்
, கொலை முயற்சிகள், வன்முறைகள், தாக்குதல்கள் நடந்துவிட்டன. அண்மைக் காலத்தில் நடந்த அத்தகைய வன்முறைகள் பற்றி ஆதாரபூர்வமாக அறிந்துகொள்ள https://persecution.exmuslims.org/


பாரூக் படுகொலையாகட்டும், அனீஷ் கைதாகட்டும், என்மீதான கொலை முயற்சிகள் ஆகட்டும், இன்னும் உலகம் பூராவும் இதே வகையில் நடைபெறும் வன்முறைகள் ஆகட்டும் இவை அனைத்துமே இஸ்லாத்தை யாரும் விமர்சிக்கக் கூடாது, யாரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடத் துணியக் கூடாது, யாரும் இஸ்லாத்தை கேள்வி கேட்டு விடக் கூடாது, யாரும் முஸ்லிம்களை சிந்திக்கத் தூண்டி விடக் கூடாது ஆகிய நோக்கங்களுக்காக இஸ்லாமியவாதிகளால் மேற்கொள்ளப் படுபவை ஆகும்.

பாரூக் படுகொலை பற்றிய ஆவணப்படம் :
https://youtu.be/eSfrATHKYps
என் மீதான கொலை முயற்சிகள் பற்றிய சிறு தொகுப்பு :
http://www.allahvin.com/2021/08/three.html


யாரும் இஸ்லாத்தை விமர்சிக்கக் கூடாது என்பதற்காகவும்
, யாரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறத் துணியக் கூடாது என்பதற்காகவும் இஸ்லாமியவாதிகள் பல்வேறு முயற்சிகளை செய்கின்றார்கள். கொலை செய்ய முடியுமான இடங்களில் அவர்கள் கொலை செய்கின்றார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள்: அவர்கள் இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச் பேசுவார்கள். அவர்கள், வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எய்த) அம்பு (அதன் உடலுக்குள் பாய்ந்து மறுபுறமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அவர்களின் இறை நம்பிக்கை(யும் மார்க்க விசுவாசமும் அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயம் வரை) செல்லாது. அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அது மறுமையில் (மரணத்தின் பின்னர்) நற்பலனாக அமையும்’
(ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் 3611)

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களைக் கொலை செய்வது கூட முஹம்மது நபியின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப் படுகின்றது. இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொலை செய்வது தொடர்பில் பல வழிகாட்டுதல்கள் இஸ்லாமிய கிரந்தங்களில் போதிக்கப்பட்டு உள்ளன. தம்மைக் கொலை செய் என்று இஸ்லாம் போதிப்பதைக் கூட கேள்வி கேட்க, விமர்சிக்க முடியாத நிலைக்குள் முன்னாள் முஸ்லிம்களை இஸ்லாமியவாதிகள் தள்ளுவதுடன், அதற்காக முற்போக்குச் சக்திகளையும் கூட்டணி சேர்த்துக் கொள்ள முயல்கின்றார்கள். யாராவது ஒரு முன்னாள் முஸ்லிமோ அல்லது சில வேளைகளில் கிறிஸ்தவர்களோ இஸ்லாமிய மத விமர்சனத்தை முன்வைத்து விட்டால் அவர்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்துவது
, வசை மாரி பொழிவது, தொலைபேசி இலக்கத்தைத் தா, வீட்டு முகவரியைத் தா, உன்னை உயிரோடு விடமாட்டேன் என்றெல்லாம் அச்சுறுத்துவது போன்றவை தமிழகம் உட்பட எல்லா இடங்களிலுமே நடைபெற்றே வருகின்றன. தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள தோழர் அனீஷ் கூட கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இதே விதமாக இஸ்லாமியவாதி ஒருவனின் அச்சுறுத்தலுக்கு உள்ளனர். இரண்டு நாட்களில் அனீஷை உள்ளே தள்ளுவேன் என்று அச்சுறுத்திய இஸ்லாமியவாதி ஒருவன் அனீஷ் கைது செய்யப்பட விடயம் பகிரங்கத்திற்கு வருவதற்கு முன்னரே ‘நான் தான் அனீஷை உள்ளே தள்ளினேன், உயிர் இருக்கும் வரை என்னை மறக்க மாட்டான்’ என்ற ரீதியில் போஸ்ட் போட்டதும், Moh Thar என்ற பெயரில் கிளப்ஹவுஸில் இருக்கும் முஹம்மது தாரிக் எனும் இஸ்லாமியவாதி ‘அனீஷுக்கு என்ன நடந்தது என்று தெரியுமா, இஸ்லாத்தை விமர்சித்தால் உனக்கும் இப்படித்தான் செய்வோம்’ என்று ஒரு கிறிஸ்தவரை அச்சுறுத்தியதும் அண்மைய உதாரணங்கள் ஆகும்.இஸ்லாமிய மத விமர்சனம் முன்வைப்பவர்களை வன்முறை, அச்சுறுத்தல் மூலம் மெளனிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் வேறு வகையான தந்திரங்களை இஸ்லாமியவாதிகள் மேற்கொள்கின்றார்கள். 'இஸ்லாமோபோபியா' என்று பூச்சாண்டி காட்டுவது
, 'சிறுபான்மை' என்று அனுதாப வேஷம் போடுவது ஆகியவை அவர்களின் முக்கியமான தந்திரங்கள் ஆகும். முஸ்லிம்கள் தொடர்பான வீண் பீதி உருவாக்கப் படுவதை எப்படி இஸ்லாமோபோபியா என்று சொல்ல முடியும்? அதனை முஸ்லிமோபோபியா என்று சொல்வதுதானே சரி என்பது சிந்திக்கும் பொழுது புரியும், என்றாலும் முஸ்லிம்களை பலிக்கடா ஆக்கி இஸ்லாத்தின் பயங்கர திட்டங்களை செயற்படுத்துவதுதான் இஸ்லாமியவாதிகளின் இலட்சியம் என்பதால் மக்களை பலிக்கடா ஆக்கி மதத்தைப் பாதுகாக்கவே இஸ்லாமோபோபியா எனும் பதத்தை மக்கள் மையப் படுத்துகின்றார்கள் என்பதை அறிய ஏற்கனவே மேலே இணைப்பு வழங்கப்பட்டுள்ள இஸ்லாமியவாதிகள் குறித்த ஆக்கத்தை மீண்டுமொரு தடவை வாசித்துப் பாருங்கள்.

‘சிறுபான்மை’ அனுதாப வேஷம் போடுவது இஸ்லாமியவாதிகளின் இன்னொரு தந்திரமாக உள்ளது. இஸ்லாத்தில் இருந்து வெளியேறி இஸ்லாமிய விமர்சனம் செய்பவர்கள் பொதுவாக மதத்தை விமர்சிக்கின்றார்களே தவிர
, மக்களை விமர்சிப்பதோ, தாக்குவதோ இல்லை. இஸ்லாத்தில் இருந்து வெளியேறி எந்த மத்ததையும் பின்பற்றாமல் வாழ்பவர்களில் மிக அதிகமானவர்கள் தங்களை பகிரங்கமாக அடையாளப் படுத்திக் கொள்ளக் கூட முடியாத அச்சுறுத்தலான சூழ்நிலையில் வாழ்கின்றார்கள், அவர்கள் தான் உண்மையிலேயே மிக மிகச் சிறுபான்மையினராக உள்ளனர். எனினும் அந்த உண்மையை அப்படியே மறைத்துவிட்டு, உலகின் மிகப் பெரிய மதங்களில் இரண்டாவது மிகப்பெரிய மதத்தை, அதுவும் இன்னும் சில வருடங்களில் உலகின் மிகப் பெரும் மதமாக மாறிவிடப் போவதாக சொல்லப்படும் மதத்தை ஆக்கபூர்வமாக விமர்சிப்பதை, கேள்வி கேட்பதை தடுப்பதற்காக ‘சிறுபான்மை’ என்று சொல்லி அனுதாப அலைதேடும் வேஷம் போடுகின்றார்கள் என்றால் இது குறித்தும் முற்போக்கு சக்திகள் மிகுந்த எச்சரிக்கையோடும், விழிப்போடும் இருக்க வேண்டும்.


பார்ப்பனியத்தால் சிறை பிடிக்கப்பட்டு இருக்கும் இந்துக்களை விடுதலை செய்வதற்கு பெரியார் இந்து மத விமர்சனம் மேற்கொண்டது போன்றே
, இஸ்லாமியவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை விடுதலை செய்வதற்காக இஸ்லாமிய மத விமர்சனம் தொடர்ந்தும் முன்வைக்கப்டல் வேண்டும், அதற்கான கருத்துச் சுதந்திரம் ஜனநாயக சூழலில் பாதுக்கப்பட வேண்டும். இஸ்லாத்தினாலும், இஸ்லாமியவாதிகளினாலும் அடக்கி ஒடுக்கப்படும் முஸ்லிம்களுக்குள் இருக்கும் ஆண் அல்லாத ஏனைய அனைத்துப் பாலினத்தாரும், சிறுவர்களும் விடுதலையை அனுபவிக்க வேண்டியவர்கள், அவர்கள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழக் கூடிய சூழல் உருவாக்கப்படல் வேண்டும்.


குறிப்பு :
இஸ்லாமியவாதிகள் என்பது முஸ்லிம்களைக் (அதாவது தமிழகத்தில் இஸ்லாமியர்களைக்) குறிக்காது, இஸ்லாமியவாதிகள் என்பது ஆங்கிலத்தில் Islamists என்று பயன்படுத்தப் படுகின்றது. இஸ்லாமியவாதிகள் என்பவர்கள் சாதாரண முஸ்லிம்கள் (இஸ்லாமியர்கள்) அல்ல. இஸ்லாமியவாதிகள், முஸ்லிம்கள் பற்றிய தெளிவு தேவை என்றால் இந்த இணைப்பில் உள்ள ஆக்கத்தை இன்னொரு தடவை வாசியுங்கள் : http://www.allahvin.com/2021/11/Islamist.html


-றிஷ்வின் இஸ்மத்
 08.01.2022