முஸ்லிம்களை பலிக்கடா ஆக்குதல் - இஸ்லாமியவாதியின் சதி அம்பலம்

இஸ்லாமியவாதிகள் தமது திட்டங்களை அடைந்து கொள்வதற்காக திட்டமிட்ட ரீதியில் முஸ்லிம் சமூத்தை எவ்வாறு பலிக்கடா ஆக்குகின்றார்கள் என்பது குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதி ( http://www.allahvin.com/2021/11/Islamist.html ) இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில் அதனை உண்மைப்படுத்தும் இந்த விடயத்தை அம்பலப் படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

இடதுசாரிகள் மற்றும் முற்போக்குவாதிகளின் ஆதரவைப் பெற்ற, தன்னை ஒரு முற்போக்குவாதியாகக் காட்டிக்கொள்ளும் ஒரு இஸ்லாமியவாதியின் பெண் வெறுப்பு மற்றும் LGBTQIA+ பிரிவினருக்கு எதிரான கருத்துக்களை ஆதாரமாக முன் வைத்து அவரது சுய ரூபத்தை சில வார முன்னர் பகிரங்கப்படுத்தி இருந்தேன்.


1.
https://www.facebook.com/rishvin/posts/10227464960432827
2.
https://www.facebook.com/rishvin/posts/10227470298886285கிழிந்து போன தனது முகமூடியின் ஓட்டைகளை மறைத்து இடதுசாரிகள்
, முற்போக்காளர்களிடம் தனக்கு ஏற்பட்ட பின்னடவை சரி செய்வதற்காக பெறுமதியற்ற ஒரு விடயத்தை பதிவாக்கி, தான் தீவிரவாதத்தை எதிர்க்கின்ற ஒருவர் எனும் போலியான தோற்றப்பாட்டை உருவாக்க முயன்று இருக்கின்றார். ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் பாசறையில் ஷரியா சட்டம் கற்ற அவர் உண்மையான தீவிரவாதத்தை எதிர்க்கின்ற ஒருவராக இருந்தால், ஜமாத்தே இஸ்லாமியின் தீவிரவாத செயற்பாடுகள், போதனைகள், திட்டங்கள் குறித்த உண்மைகளை பகிரங்கப்படுத்தி அவரால் எழுதி இருக்க முடியும், அதனை அவர் ஒரு போதும் அப்படிச் செய்ததில்லை.எனினும் சம்மந்தமே இல்லாத ஒரு சிறு விடயத்தை எடுத்து பெரிதுபடுத்தி பதிவு எழுதியுள்ளதுடன், பதிவில் “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்று முதலில் பயன்படுத்தி இருந்தாலும், அந்த பிரயோகம் அவரது இஸ்லாமியவாத திட்டத்திற்கு பொருத்தமானதாக இல்லாததால் பதினைந்து நிமிட நேரத்தில் பதிவில் திருத்தம் செய்து அதனை “முஸ்லிம் பயங்கரவாதம்” என்று மாற்றியுள்ளார். ஒரு மொழி பெயர்ப்பாளரான இவர் நன்கு திட்டமிட்டே இந்த மாற்றத்தை செய்துள்ளார். https://www.facebook.com/ramzy.razeek.5/posts/5065119460184751


இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது இஸ்லாமியவதிகளுடனும்
, ஜிஹாதிகளுடனும் மட்டுமே தொடர்பு படுவதால் அதில் மாற்றம் செய்து, மொத்த முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் என்று சித்தரித்து முஸ்லிம்கள் மீது பயங்கரவாதத்தை திணிப்பதாகவே அவரது பதிவு மாற்றப் பட்டு இருக்கின்றது. இதற்கு நிகரான செயல் ஒன்றையே ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் ‘இலங்கையில் எல்லா முஸ்லிம்களும் இஸ்லாமிய தேசம் பற்றிப் பேசுவார்கள் என்று குறிப்பிட்டதன் மூலம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இஸ்லாமியவாதிகள் தமது இலக்கில் மிகவும் தெளிவாகவும்
, குறியாகவும் இருக்கின்றார்கள், அதனை அடைவதற்காக அவர்கள் முஸ்லிம் சமூகம் உட்பட யாரை வேண்டுமானாலும், எதனை வேண்டுமானாலும் பலி கொடுக்க தயாராகவே இருக்கின்றார்கள். ஆகவே இஸ்லாமியவாதிகள், ஜிஹாதிகள் குறித்து முஸ்லிம்கள், இடதுசாரிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மற்றும் ஏனைய பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


Warning : The Islamist may try to play the victim card to divert the subject.


 - றிஷ்வின் இஸ்மத்
   11.11.2021