பிஞ்சிலே பழுக்க வைக்கப்பட்ட ஆயிஷா!


 Grooming என்பதை 'பிஞ்சிலே பழுக்க வைத்தல்' என்று மொழிபெயர்க்கலாம். 'குறிப்பாக ஒரு இணைய அரட்டை அறை வழியாக, ஒரு சந்திப்பிற்கு ஒரு குழந்தையைத் தயார்படுத்தும் ஒரு பெடோஃபைலின் நடவடிக்கை.' என்று ஒரு வரைவிலக்கணம் சொல்கின்றது.


Grooming என்பதற்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும் 'பிஞ்சிலே பழுக்க வைத்தல்' என்பது சிறார்களை பாலியல் தேவைக்காகப் பயன்படுத்துவதற்காக தயார் செய்வதைக் குறிக்கும், இது இன்று சட்டத்தின் முன் மோசமான குற்றமாகவும் உள்ளது. 


அனைவருக்கும் வழிகாட்டி, அழகிய முன்மாதிரி என்று சொல்லப்படும் முஹம்மது நபி தனது 53 வயதில் 6 வயதுக் குழந்தை ஆயிஷாவை அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் திருமணம் செய்து கொள்கொன்றார். தனக்கு சீதனம் கிடைக்கும் வரை 3 வருடங்கள் காத்திருக்கின்றார். ( வாசிக்க : http://www.allahvin.com/2022/06/dowry.html ) இந்த இடைப்பட்ட காலத்தில் குழந்தை ஆயிஷா குரூமிங் இற்கு உள்ளாக்கப் படுகின்றார்.


"என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக எனது தாயார் என்னை கொழுக்க வைக்க நாடினார்கள். ஆனால் அவர்கள் விரும்பியது எதுவும் பலனளிக்கவில்லை, எதுவரையெனில் வெள்ளரிக்காயைப் பேரீச்சம் பழத்துடன் சேர்த்து எனக்கு உண்ணத் தரும் வரையில், அதன் பின்னர் எனது உடல் கொழுத்தது" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(நூல்: அபூதாவூத் 28:3894)