ஆயிஷாவுக்கு 6 இலிருந்து 9 – முஹம்மது நபி காத்திருந்தது இதற்குத் தானா?


 6 வயது சிறுமியான ஆயிஷாவைத் திருமணம் செய்த முஹம்மது நபி, குர்ஆனின் 65:4 இன் படி சிறுமியுடன் உடனடியாக உடலுறவு கொள்ளாமல் சிறுமி ஆயிஷாவுக்கு 9 வயதாகும் வரை காத்திருந்தது ஏன் என்பது தொடர்பாக முஸ்லிம் அல்லாதவர்களால் கேள்விகள் எழுப்பப் படுவதையும், வழமை போலவே இஸ்லாமிய வக்கலாத்துவாங்கிகள் நாக் கூசாமல் பொய்களைச் சொல்லி ‘சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை’ நியாயப் படுத்த முனைவதையும், முஹம்மது நபியை நல்லவராகக் காட்ட முயல்வதையும் காணலாம்.


‘ஆயிஷாவை 6 வயதில் திருமணம் செய்து இருந்தாலும்
, ஆயிஷா பருவமடைவதற்காகவே முஹம்மது நபி காத்திருந்து 9 வயதில் சிறுமி ஆயிஷாவுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார்’ என்று ஒரு பொய்யை இஸ்லாமிய வக்கலாத்து வாங்கிகள் உலவ விட்டுள்ளனர்.


பருவமடையாத சிறுமிகளுடன் உடலுறவு கொள்ளலாம் என்கின்ற இஸ்லாத்தின் அனுமதியை குர்ஆனின் 65:4 மற்றும்
33:49 வசனங்கள் வெளிப்படுத்துகின்றன, இந்த கேவலமான விடயத்தை தப்ஸீர் அல்ஜலாலைன் உட்பட பல தப்ஸீர்கள் உறுதி செய்கின்றன. முஹம்மது நபி 6 வயது ஆயிஷாவைத் திருமணம் செய்தது, 9 வயதில் பருவமடையாத அந்த சிறுமியுடன் உடலுறவு கொண்டு அவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது, முஹம்மது நபியின் பேத்தி உம்மு குல்தும் எனும் 5 வயது சிறுமியை இரண்டாவது கலீபா உமர் திருமணம் செய்தது என்று இந்தக் கேவலத்திற்கு இஸ்லாத்தில் பல உதாரணங்கள் உள்ளன. இப்படி இருக்க, 6 வயதில் ஆயிஷாவுடன் திருமணம் நடந்தும் உடலுறவு கொள்ள 56 வயதான முஹம்மது நபி 3 வருடங்கள் காத்திருந்தார் என்கின்ற விடயத்திற்கு ‘ஆயிஷா பருவமடையும் வரை முஹம்மது நபி காத்திருந்தார்’ என்கின்ற பொய்யான விளக்கம் வழங்கப் படுகின்றது.

“ஸ்வீட் சாப்பிடுங்க
, மாமா நான் வயசுக்கு வந்துட்டேன்” என்று ஆயிஷா வந்து முஹம்மதிடம் சொன்னதை எதோ பக்கத்தில் நின்று பார்த்தது போன்று பொய்களைச் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.



தன்னை விட 47  வருடங்கள் சிறியவளான  6  வயதுக் குழந்தையான ஆயிஷாவைத் தனது 53 ஆவது வயதில் திருமணம் செய்த முஹம்மது நபி மூன்று வருடங்களின் பின் 9 வயதில் ஆயிஷா ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருந்த பொழுது தனது 56 ஆவது வயதில் அந்தக் குழந்தையைப் பாலியல் உறவுக்கு உள்ளாக்குகி அதிர்ச்சி அடைய வைக்கின்றார்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார் "நபி(ஸல்) அவர்கள் என்னை ஆறு வயதில் மணந்தார்கள். பின்னர் ஒன்பது வயதில் தாம்பத்திய உறவைத் தொடங்கிய போது என் தாயார் (உம்மு ரூமான்) என்னிடம் வந்து என்னை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் என்னிடம் வந்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள்."

(ஸஹீஹுல் புகாரி : 5160)


இஸ்லாமிய வக்கலத்துவாங்கிகளின் பொய்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு, முஹம்மது நபி சிறுமியுடன் பாலியல் உறவு கொள்வதற்காக மூன்று வருடங்கள் காத்திருந்தது எதற்காக என்பதை இஸ்லாமிய மூலாதாரத்தில் இருந்தே பார்த்துவிடுவோம்.

 

ومكثنا أياما في منزل ابى بكر، ثم قال ابو بكر: يا رسول الله ما يمنعك ان تبنى باهلك؟

قال رسول الله: الصداق، فاعطاه ابو بكر الصداق اثنى عشر أوقية ونشا، فبعث رسول الله ص إلينا وبنى بي رسول الله ص في بيتى، هذا الذى انا فيه، وهو الذى توفى فيه رسول الله ص، وجعل رسول الله لنفسه بابا في المسجد، وجاه باب عائشة.

وقال: وبنى رسول الله ص بسوده في احد تلك البيوت التي الى جنبي، فكان رسول الله ص يكون عندها، وتوفيت سنه ثمان وخمسين في شهر رمضان.

 

‘அபூபக்கர் நபியிடம் "இறைத்தூதரே தாங்கள் உங்கள் மனைவி (என் மகள்) ஆயிஷாவோடு இணைந்து தாம்பத்ய வாழ்க்கை நடத்தாமல் இருப்பதற்கு எது தடையாக இருக்கிறது?" என்று கேட்டார். அதற்கு நபி “பெண் மணக்கொடை (சதக்)” என பதிலளித்தார். அபூபக்கர் பன்னிரண்டரை அவுன்ஸ் தங்கத்தை நபிக்கு மணக்கொடையாக அளித்தார். அதற்கு பின்னரே நபி என்னோடு என்னுடைய வீட்டில் தாம்பத்ய வாழ்க்கையை தொடங்கினார். அதே வீட்டில் தான் அவர் மரணமடைந்தார்’. இதை ஆயிஷா அறிவிக்கிறார்.
(அல் தபரி
, பாகம் 31 பக்கங்கள் 2440
,2441)

பன்னிரண்டரை அவுன்ஸ் தங்கம் என்பது இன்றைய கணக்கில் சொல்வதானால் 44.25 சவரன் (பவுன்) தங்கம் ஆகும். குர்ஆனின் 33:49 மற்றும் 65:4 வசனங்கள் அடிப்படையில் பருவமடையாத குழந்தைகளுடன் உடலுறவு (இன்றைய பார்வையில் ‘பாலியல் வன்புணர்வு’) செய்ய அனுமதி இருக்கின்ற போதும்
, முஹம்மது நபி அவர்கள் 6 வயதுக் குழந்தை ஆயிஷாவுடன் உடலுறவு கொள்ளாமல் காத்திருந்தது ஆயிஷாவின் தந்தையிடமிருந்து வரதட்சணையைப் பெற்றுக் கொள்வதற்காகவே ஆகும்.

44.25 சவரன் (பவுன்) தங்கத்திற்காகவே முஹம்மது நபி காத்திருந்தார் என்பதே இஸ்லாமிய மூலாதாரத்தில் உள்ள உண்மை ஆகும். ‘ஆயிஷா பருவமடைவதற்காகவே முஹம்மது நபி (கவுண்டமணி காமடியில் போல) காத்திருந்தார்’ என்பதெல்லாம் இஸ்லாமிய வக்காலத்துவாங்கிகள் உருவாக்கிய சுத்தமான பொய்யாகும்.


முஸ்லிம்களுக்கு உண்மையான முஹம்மது நபியைத் தெரியாது
, சிந்திக்கக் கூடிய, அறிவு, நேர்மை கொண்ட யாரும் முஹம்மது நபியைப் பற்றித் தெரிந்துகொண்டே அவரைப் பின்பற்ற மாட்டார்கள் என்பதைப் பல தடவைகள் குறிப்பிட்டு இருக்கின்றேன். சாதரணமாக எந்த முஸ்லிமைக் கேட்டாலும் வரதட்சணை வாங்குவது ஹராம் (தடை செய்யப்பட்டது) என்றுதான் கூறுவார்கள், ஆனால் முஹம்மது நபியே வரதட்சணை வாங்கித்தான் திருமணம் செய்தார் என்கின்ற விடயம் 99.99% முஸ்லிம்களுக்கே தெரியாமல் இருக்கும். இதனால் தான் முஸ்லிம்கள் சுய சிந்தனையுடன் குர்ஆன், ஹதீஸ் படிக்க வேண்டும் என்று அடிக்கடி ஊக்கப் படுத்துகின்றேன்.


முஹம்மது நபி எக்காலத்திற்கும் பின்பற்றப்பட பொருத்தமான மிகச்சிறந்த முன்மாதிரி என்று இஸ்லாம் சொல்கின்றது
, குர்ஆன் அதனை 33:21 இல் உறுதி செய்கின்றது, முஸ்லிம்கள் இதனை நம்ப வைக்கப் பட்டுள்ளனர், அதன் காரணமாகவே திருமணத்திற்கான குறைந்த பட்ச வயதை நிர்ணயிப்பது, பலதாரமணத்தைத் தடை செய்வது போன்ற பல விடயங்களை முஸ்லிம்கள் பல நாடுகளில் எதிர்க்கின்றனர், அத்துடன் இன்றைக்கும் குழந்தைகளை வயதான ஆண்கள் திருமணம் செய்வது மற்றும் பலதாரமணம் என்பன முஸ்லிம்களுக்கு மத்தியில் எதோ ஒரு வகையில் ‘இஸ்லாத்தின் படி சரியான செயல்’ என்று நடைமுறையில் உள்ளன, ஆகவே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த விடயத்தை பேசித்தான் ஆக வேண்டியுள்ளது.

 

குறிப்பு : ஒரு பேச்சிற்காக ‘ஆயிஷா பருவமடைந்துதான் இருந்தார்’ என்று வைத்துக் கொண்டாலுமே கூட ‘எக்காலத்திற்கும் பின்பற்றப்பட பொருத்தமான அழகிய முன்மாதிரி’ என்ற அறிமுகத்தின் படி பார்த்தால் முஹம்மது நபி செய்தது மாபெரும் தவறு என்பதில் சந்தேகமே இல்லை. சிந்திக்கக் கூடிய, சுய அறிவுள்ள எவருமே ஒரு சிறுவர் துஷ்பிரயோகியை, சிறார் மீது பாலியல் நாட்டம் கொண்டவரை (pedophile) அழகிய முன்மாதிரி என்று பின்பற்ற மாட்டார்கள்.

முஹம்மது நபிக்கு சிறுமிகள் மீது மட்டுமல்ல
, பால்குடிப் பருவத்தில் இருந்த குழந்தைகள் மீதும் கூட இச்சை இருந்தது என்பதற்கு இஸ்லாமிய மூலாதரங்களிலேயே சான்றுகள் உள்ளன.

 

 أن رسول الله صلى الله عليه وسلم رأى أم حبيبة بنت عباس وهي فوق الفطيم قالت فقال لئن بلغت بنية العباس هذه وأنا حي لأتزوجنها

பால்குடி வயதில் (الفطيم) இருந்த அப்பாஸின் மகள் உம்ஹபீபாவை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பார்த்த பொழுது "இவள் வளரும் பொழுது நான் உயிருடன் இருந்தால் இவளைத் திருமணம் செய்து கொள்வேன்" என்று கூறினார்கள்.

(முஸ்னத் அஹ்மத் : 26870, அல் முஜம் அல் கபீர் : 25/92, 238, முஸ்னத் அபி யாஅலா : 7075)

இது மட்டுமல்ல, தளவழ்ந்து கொண்டு இருந்த உம்முல் ஃபதல் என்கின்ற குழந்தை மீதும் அல்லாஹ்வின் தூதருக்கு இச்சை வந்திருக்கின்றது.

தவழ்ந்து கொண்டிருந்த உம்முல் -ஃபதல் என்ற குழந்தையை கண்ட நபி கூறினார்
, “இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால், இவளைத் திருமணம் செய்வேன்”. ஆனால் அவள் வளரும்முன் அவர் (நபி) இறந்து விட்டார். (இப்னு இஷாக் : பக்கம் 311)


இஸ்லாமிய வக்காலத்து வாங்கிகளின் பொய்களை நம்பி ஏமாறாதீர்கள்
, முஸ்லிம்களே சிந்தியுங்கள், முஹம்மது நபி பின்பற்றப் படத் தகுதியானவரா என்பதற்கு நேர்மையாக விடை தேடுங்கள்.

-றிஷ்வின் இஸ்மத்
 
10.06.2022