இஸ்லாமிய ஆதாரம் : பருவமடையாத சிறுமி ஆயிஷாவுடன் உடலுறவு கொண்ட முஹம்மது நபி!

 

"முஹம்மது நபி 'உஸ்வதுல் ஹஸனா' எனும் அழகிய முன்மாதிரி கொண்ட எக்காலத்திலும் பின்பற்றப்பட தகுதியானவர்" என்று இஸ்லாமும், இஸ்லாமியவாதிகளும் சொல்வதன் படியும், அவ்வாறே அப்பாவி முஸ்லிம்கள் நம்பவைக்கப் பட்டுள்ளதன் படியும் பார்த்தால், இன்றைய காலத்தில் முஹம்மது நபி சிறுவர் துஷ்பிரயோகம் செய்த ஒருவராகக் கருதப்படுவார் என்பதை இஸ்லாமிய வக்காலத்து வாங்கிகள் புரிந்து கொள்ளாமல் இல்லை. முஹம்மது நபி தொடர்பில் இஸ்லாமிய மூலாதாரங்களில் உள்ளவற்றை உள்ளபடியே புரிந்து, 'இவர் எவ்விதத்திலும் பின்பற்றப்படப் பொருத்தமற்றவர்' என்று முஹம்மது நபியை நிராகரிக்கும் அளவுக்கு நேர்மையற்ற இஸ்லாமிய வக்காலத்துவாங்கிகள், முஹம்மது நபி தொடர்பில் பல்வேறு பொய்களை தாமாக உருவாக்கி பாதிப்பை சரிக்கட்டும் முயற்சி (Damage Control) செய்து, அப்பாவி முஸ்லிம்களையும், மற்ற மனிதர்களையும் ஏமாற்றுவதில் மிகத் திறமையாக ஈடுபட்டு வருகின்றனர், என்றாலும் அவர்களால் எத்தனை காலம் தான் ஏமாற்ற முடியும்?


முஹம்மது நபி தொடர்பான இஸ்லாமிய வக்காலத்துவாங்கிகளின் முக்கியமான பொய்களில் ஒன்றுதான் 'முஹம்மது நபி பாலியல் உறவுக்கு உள்ளாக்கி அதிர்ச்சி கொடுத்த பொழுது 9 வயது ஆயிஷா பருவமடைந்து இருந்தார்' என்பதாகும். இஸ்லாமிய வக்காலத்துவாங்கிகளின் விரல்களையே எடுத்து அவர்களின் கண்ணில் குத்துவது போன்று இஸ்லாமிய நூல்களில் இருந்தே இந்தப் பொய்யை இப்பொழுது தோலுரிப்போம்.


ஆயிஷாவை 6 வயதில் திருமணம் செய்தும் 9 வயதாகும் வரை முஹம்மது நபி காத்திருந்தது ஆயிஷா பருவமடைவதற்காக அல்ல, ஆயிஷாவின் தந்தையிடமிருந்து 44.25 சவரன் (பவுன்) தங்கம் வரதட்சணை வாங்குவதற்காகவே என்பதை முறையான இஸ்லாமிய ஆதாரத்துடன் (http://www.allahvin.com/2022/06/dowry.html) ஏற்கனவே பார்த்தோம், இப்பொழுது 9 வயதில் முஹம்மது நபியால் அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்படும் பொழுது ஆயிஷா பருவமடைந்தே இருக்கவில்லை என்பதற்கான ஆதரத்தையும் இஸ்லாமிய ஆதாரத்தில் இருந்தே பார்ப்போம்.  


தனக்கு 53 வயதாக இருக்கும் பொழுது முஹம்மது நபி அவர்கள் தன்னை விட 47  வருடங்கள் சிறியவளான  6  வயதுக் குழந்தையான ஆயிஷா அவர்களைத் திருமணம் செய்து இருந்தார். ஆயிஷா 9 வயதில் இருந்த பொழுது 56 வயதான முஹம்மது நபி அந்தக் குழந்தையை பாலியல் உறவுக்கு உள்ளாக்குகின்றார்.


عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تَزَوَّجَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَتَتْنِي أُمِّي فَأَدْخَلَتْنِي الدَّارَ، فَلَمْ يَرُعْنِي إِلاَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ضُحًى‏.‏

ஆயிஷா(ரலி) அறிவித்தார் "நபி(ஸல்) அவர்கள் என்னை (ஆறு வயதில்) மணந்தார்கள். பின்னர் (ஒன்பது வயதில் தாம்பத்திய உறவைத் தொடங்கியபோது) என் தாயார் (உம்மு ரூமான்) என்னிடம் வந்து என்னை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் தான் என்னிடம் வந்து என்னை அதிர்ச்சிக் குள்ளாக்கினார்கள்."
(ஸஹீஹுல் புகாரி : 5160)


“என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்கள்” என்பது, 56 வயதான முஹம்மது நபி அந்தக் குழந்தையை பாலியல் உறவிற்கு உள்ளாக்கிய பொழுது குழந்தைக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைக் குறிக்கின்றது. 9 வயதில் முஹம்மது நபியால் பாலியல் உறவுக்கு உள்ளாக்கப்படும் பொழுது ஆயிஷா பருவமடைந்து இருந்ததற்கான தெளிவான, நேரடியான ஆதாரங்கள் எதுவும் இஸ்லாமிய மூலாதார நூற்களில் இல்லை, மாறாக இருக்கின்ற ஆதாரங்கள் ஆயிஷா பருவமடைந்து இருக்கவில்லை என்பதையே உறுதி செய்கின்றன


ஆயிஷா  (ரலி)  அறிவித்தார்:
“நான் (சிறுமியாக இருந்தேபாது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் பயந்து கொண்டு திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்)அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் சேர்ந்து விளையாடுவார்கள்.
(சஹீஹுல் புகாரி : 6130)


இஸ்லாத்தில் பொம்மைகள் வைத்து விளையாடுவது, சிலைகள் செய்வது, வீட்டிற்குள் நாய் வளர்ப்பது என்பவை தடை செய்யப்பட்டவை. ஆனால் முஹம்மது நபியின் மனைவியான ஆயிஷாவே பொம்மைகளை வைத்து விளையாடி இருக்கின்றார்கள் எனும் பொழுது அதற்கான காரணத்தை இஸ்லாத்தில் இருந்தே பார்க்கும் பொழுது இஸ்லாமிய வக்காலத்து வாங்கிகளின் பொய் சுக்குநூறாக உடைந்து போகின்றது.
 

"பொம்மைகள் வைத்து விளையாடுவது தடை செய்யப்பட்டது. ஆனால் ஆயிஷாவிற்காக, அவர் சின்னப் பெண்ணாக இருந்ததாலும், பருவமடையாதவர் என்பதாலும் அச்சமயம் பொம்மைகள் வைத்து விளையாட அனுமதிக்கப்பட்டிருந்தார்." (ஃபத்ஹ் அல் பாரி பாகம் 13, பக்கம் 143)


இஸ்லாமிய சட்டப்படி பருவமடையாத சிறுவர் சிறுமிகளுக்கு நன்மை, தீமை, பாவங்களின் கணக்குப் பதியப் படுவதில்லை, அதனால் தான் பருவமடையாத ஆயிஷாவும், அவர் தோழிகளும் பொம்மைகளை வைத்து விளையாட அனுமதிக்கப் பட்டு இருந்தனர்.


ஃபத்ஹ் அல் பாரி கிதாபில் ஆயிஷா பருவமடையாத சிறுமியாக இருந்தார், அப்பொழுதுதான் முஹம்மது நபியால் உடலுறவுக்கு உள்ளாக்கப்பட்டு அதிர்ச்சிக்கு ஆளானார் என்பதற்கான ஆதாரம் தெளிவாக இருக்கும் பொழுது இனிமேலும் பொய்களைச் சொல்லிக் கொண்டு இருப்பதில் பயனில்லை என்பதை இஸ்லாமிய வக்காலத்துவாங்கிகள் புரிந்துகொள்ள வேண்டும்.


மேலும் குர்ஆனின் 33:49 மற்றும் 65:4 வசனங்கள் பருவமடையாத சிறுமிகளுடன் உடலுறவு கொள்வதை அனுமதித்து உள்ளன. அல் ஜலாலைன், இப்ன் அல் கதீர் போன்ற முன்னனி தப்ஸீர்கள் இதனை உறுதி செய்கின்றன. ஆக, 6 வயது ஆயிஷாவை திருமணம் செய்த பொழுதே முஹம்மது நபி பாலியல் உறவுக்கு உள்ளாக்காத காரணம் வரதட்சணை கிடைக்காமை மட்டுமே.


"இறைத்தூதரே தாங்கள் உங்கள் மனைவி (என் மகள்) ஆயிஷாவோடு இணைந்து தாம்பத்ய வாழ்க்கை நடத்தாமல் இருப்பதற்கு எது தடையாக இருக்கிறது?" என்று கேட்டார். அதற்கு நபி.. “பெண் மணக்கொடை (சதக்)” என பதிலளித்தார். அபூபக்கர் பன்னிரண்டரை அவுன்ஸ் தங்கத்தை நபிக்கு மணக்கொடையாக அளித்தார். அதற்கு பின்னரே நபி என்னோடு என்னுடைய வீட்டில் தாம்பத்ய வாழ்க்கையை தொடங்கினார். அதே வீட்டில் தான் அவர் மரணமடைந்தார்.  இதை ஆயிஷா அறிவிக்கிறார்.
(அல் தபரி, பாகம் 31 பக்கங்கள் 2440, 2441)


'நக்குற நாய்க்கு சொக்கென்ன, சிவலிங்கமென்ன' என்பது போல இஸ்லாத்தின் அல்லாஹ்வுக்கோ, இறைதூதருக்கோ சிறுமி பருவமடைந்து இருந்தாரா, இல்லையா என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதை இஸ்லாமிய மூலாதார, விளக்க நூல்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். 6 வயதில் ஆயிஷாவைத் திருமணம் செய்த அன்றே ஆயிஷாவின் தந்தையிடமிருந்து 44.25 சவரன் (பவுன்) தங்கம் சீதனமாகக் கிடைத்து இருந்திருந்தால் அன்றைக்கே முஹம்மது நபி ஆயிஷாவை பாலியல் உறவுக்கு உள்ளாக்கி இருப்பார் என்று புரிந்து கொள்ளலாம். 


முஹம்மது நபி இன்றைக்கும் பின்பற்றப்படத் தகுதியான அழகிய முன்மாதிரி என்று நம்புகின்ற முஸ்லிம்களே, பருவமடைந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு 9 வயதுச் சிறுமியுடன் செக்ஸ் செய்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் 56 வயது மனிதனை இன்று என்ன சொல்வீர்கள்? அந்தச் செயலை எப்படி அழைப்பீர்கள்? பதிலை நீங்களே உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.


மோசமான பாலியல் வக்கிரம் கொண்ட ஒருவரை அழகிய முன்மாதிரி என்று இன்றைக்கும்  பின்பற்றுவது எக்கணம் பொருத்தமானது என்பதை முஸ்லிம்கள் மிக நிதானமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். முஹம்மது நபியின் வரலாற்றை காய்த்தல், உவத்தல் இல்லாமல் நடுநிலையாகப் படிக்கும் நேர்மையான எந்த மனிதருமே தொடர்ந்தும் முஸ்லிமாக நிலைத்திருக்க முடியாது.


இஸ்லாம் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும், உலக அமைதிக்கும் ஆபத்தானது, இஸ்லாத்தில் இருந்து விலகி இருங்கள், மற்றவர்களையும் இஸ்லாத்தில் இருந்து காப்பாத்துங்கள்.

-றிஷ்வின் இஸ்மத்
  11.05.2022