நிர்வாணமாக சென்று கட்டிப்பிடித்த முஹம்மது நபி - ஹதீஸ் விளக்கம்

 


முஹம்மது நபியின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாளை முன்னிட்டு தமிழ் பேசும் முன்னாள் முஸ்லிம்கள் சார்பில் ‘மீலாத் நபி வாரம்’ பிரகடனம் செய்யப்பட்டு தினமும் 6 பதிவுகள் என்ற அடிப்படையில் குர்ஆன், ஹதீஸ்களில் உள்ள விடயங்களை மட்டும் ஒரு சிறு அறிமுகத்துடன் பகிர்ந்து வருகின்றோம்.

26 ஆவது பதிவாக ‘நிர்வாணமாக கட்டிப்புடி வைத்தியம் செய்த கண்மணி நாயகம்’ என்ற தலைப்பின் கீழ் திர்மிதியிலே இடம்பெற்றுள்ள ஆயிஷா அறிவிக்கும்
قَدِمَ زَيْدُ بْنُ حَارِثَةَ الْمَدِينَةَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِي فَأَتَاهُ فَقَرَعَ الْبَابَ فَقَامَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عُرْيَانًا يَجُرُّ ثَوْبَهُ وَاللَّهِ مَا رَأَيْتُهُ عُرْيَانًا قَبْلَهُ وَلاَ بَعْدَهُ فَاعْتَنَقَهُ وَقَبَّلَهُ
என்ற ஹதீஸின் தமிழ் மொழி பெயர்ப்பை இஸ்லாமியவாதிகளின் பதிவில் இருந்து பெற்று அப்படியே பகிர்ந்து இருந்தோம். மேலே அரபியில் இருப்பவை மட்டுமே ஆயிஷாவின் வார்த்தைகளாக ஹதீஸில் பதிவு செய்யப் பட்டுள்ளன.

இதற்கு முன்னர் பகிர்ந்த 25 பதிவுகளையும் ஏற்றுக் கொண்ட இஸ்லாமியவாதிகள், மேற்படி 26 அவது பதிவு தொடர்பில் கேள்விகள் சிலவற்றையும், அர்த்தமற்ற வீண் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றையும் முன் வைத்து இருப்பதால் மேற்படி ஹதீஸ் தொடர்பான தெளிவை விளக்கப் படத்துடன் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஆயிஷா அறிவிக்கும் பகுதியின் மொழி பெயர்ப்பாக ‘ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) என் வீட்டில் இருந்தனர். வீட்டுக்கு ஸைத் பின் ஹாரிஸா (ரலி) வந்து கதவைத் தட்டினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆடை இழுபட நிர்வாணமாக அவரை நோக்கிச் சென்றார்கள். அதற்கு முன்போ பின்போ அவர்களை நான் நிர்வாணமாகப் பார்த்ததில்லை. உடனே அவரைக் கட்டி முத்தமிட்டார்கள்’ என்பது இஸ்லாமியவாதிகளின் பதிவுகளிலேயே இடம்பெற்றுள்ளது.


மேற்படி ஹதீஸ் ழஈப் ( ضعيف ) தரத்தை சார்ந்த ஒன்று எனும் குற்றச்சாட்டு முதலில் முன்வைக்கப் பட்டது. ழஈப் என்றால் என்ன என்று கூடத் தெரியாமல் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யும் சில தீவிரவாத சிந்தனை கொண்ட இஸ்லாமிஸ்ட்டுகள் ழஈப் ( ضعيف) என்பது ‘இட்டுக் கட்டப்பட்டது’ என்று உளறி இருப்பதாக அறிய முடிந்தது. ழஈப் என்றால் ‘இட்டுக் கட்டப்பட்டது’ என்ற அர்த்தம் மொழியிலும் இல்லை, ஹதீஸ் கலையிலும் இல்லை. ழஈப் ( ضعيف) என்றால் பலவீனமானது என்று தான் அர்த்தம். மவ்ழு ( موضوع ) என்றால் தான் இட்டுக் கட்டப் பட்டது என்று அர்த்தம். இது கூடத் தெரியாதவர்களிடம் இஸ்லாம் படிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை முஸ்லிம்களுக்குக் காணப்படும் பொழுது அவர்கள் எப்படி புத்திசாலித் தனமாக சிந்திக்கப் போகின்றார்கள், எப்பொழுது இஸ்லாத்தில் இருந்து விடுதலை பெறப் போகின்றார்கள் என்கின்ற கவலைகளே ஏற்படுகின்றன.

ஹதீஸ்களின் தரப்படுத்தலை எடுத்துக் கொண்டால் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் ஏகோபித்த முடிவுகள் எதுவும் இல்லை என்பதே உண்மை ஆகும். ஒருவருக்கு பலவீனமானது என்று தோன்றும் ஒரு ஹதீஸ், இன்னொருவருக்கு உறுதியானதாக, நம்பகத் தன்மையானதாக, சஹீஹானதாக ( صحيح ), ஏற்றுக் கொள்ளத் தக்கதாக, நல்லதாக, ஹஸன் ( حَسَن ) ஆக தோன்றும், ஆகவே ஹதீஸ்களின் தரத்தைப் பொறுத்தவரை நிலையான ஏற்றுக் கொள்ளப் பட்ட நிலைப்பாடு இஸ்லாத்தில் இல்லை. உதாரணத்திற்கு சொல்வதென்றால், தமிழக இஸ்லாமிய அறிஞரான P. ஜெய்னுல்ஆபிதீன் என்பவர் புகாரி கிரந்தத்தில் நிராகரிக்கும் ஹதீஸ்களை அவரது முன்னைய இயக்கமான TNTJ யை சார்ந்தவர்கள் உறுதியானவை என்று ஏற்றுக் கொள்வார்கள். TNTJ யினர் நிராகரிக்கும் ஹதீஸ்களை சலபிகள் ஏற்றுக் கொள்வார்கள். சலபிகள் நிராகரிக்கும் ஹதீஸ்களை சூபிகள் ஏற்றுக் கொள்வார்கள். அதே போன்று ஷியாக்களுக்கும், சுன்னிகளுக்கும் இடையில் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்வது, நிராகரிப்பது தொடர்பில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. ஆகவே ஹதீஸ்களில் உள்ள தரம் பிரித்தல் என்பது குருட்டுக் கிழவி இருட்டுக் காட்டில் கறுப்புப் பேயைத் தேடுவது போன்ற ஒரு குழப்பம் நிறைந்த உள்வீட்டுப் பிரச்சினை ஆகும். இதனால் தான் http://www.allahvin.com/2019/02/realislam.html என்ற சவாலைக் கூட முன்வைத்து இருக்கின்றேன், இதுவரை எந்த இஸ்லாமிய அறிஞராலும் முறையான, தெளிவான பதிலை கண்டுபிடித்து கொண்டுவர முடியாமல் போயுள்ளது.


இஸ்லாமிய அறிஞர்களும், இஸ்லாமியவாதிகளும் ஹதீஸ்களின் தரம் குறித்து ஆளாளுக்கு முரண்பட்டுக் கொண்டாலும், ஹதீஸ்களை எழுதியது, அவற்றை ஆயிரம் வருடங்களுக்கு மேலாக பாதுகாத்து வருவது என்று அனைத்தையும் இஸ்லாமியவாதிகளே செய்து வருகின்றார்கள். முஹம்மது மரணித்து இத்தனை வருடங்கள் ஆகியும் நிராகரிக்கப் பட வேண்டிய ஹதீஸ்கள் எவை என்று தேடிக் கண்டுபிடித்து அவை அனைத்தையும் நிராகரித்து, ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஹதீஸ்கள் இவை மட்டும் தான் என்று ஒரு தொகுப்பை இதுவரை இஸ்லாத்தினால் முன்வைக்க முடியாமல் போயுள்ளமை அந்த மதத்தின் அப்பட்டமான தோல்வியையே காட்டுகின்றது. இட்டுக் கட்டப்பட்ட, பலவீனமான, நிராகரிக்கப்பட வேண்டிய ஹதீஸ்கள் இஸ்லாமிய மூலாதரங்களுக்குள் நுழைந்துவிட்டன என்பதை ஏற்றுக் கொள்ளும் பொழுதே, ‘இஸ்லாத்தில் மனிதக் கரங்கள் புகுந்து விளையாடி விட்டன, இறுதி வேதமான இஸ்லாத்தையும் அல்லாஹ்வால் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது' என்பதை இஸ்லாமியவாதிகளும், இஸ்லாமிய அறிஞர்களும் தானாகவே ஏற்றுக் கொண்டு விடுகின்றார்கள்.

ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இஸ்லாமிய அறிஞர்களும், இஸ்லாமிய வாதிகளும் பாதுகாத்து வரும் ஒன்று என்பதால் முஹம்மது நபி நிர்வாணமாக கட்டிப் பிடித்தது தொடர்பான ஹதீஸின் தரம் குறித்த சர்ச்சை வலுவிழந்து போய்விடுகின்றது. ஆகவே அடுத்து ஹதீஸின் உள்ளடக்கம் தொடர்பான சர்ச்சைகளை பார்க்கலாம்.

இந்த ஹதீஸ் உடன் They say that the meaning of naked here is that he was not wearing his Rida or upper wrap and it was that which was dragging, so the area between the navel and knees were covered. See Tuhfat Al-Ahwadhi. என்ற வசனங்களும் சேர்த்தே இணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள இந்த வசனங்கள் மூல மொழியில் இல்லை என்பதாகும். இவை இணையத்திற்காக சேர்க்கப்பட்டவை என்றே தெரிகின்றது. குறித்த ஹதீஸில் அரபு மொழியில் இவை பதிவு செய்யப்படவில்லை. அத்துடன் ஆயிஷாவின் வார்த்தைகள் மட்டுமே ஹதீஸின் உள்ளடக்கத்தில் சேரும். "இங்கு நிர்வாணமாக இருந்தார் என்பதன் பொருள் என்னவென்றால், அவர் தனது ரிடா அல்லது மேல் மறைப்பு ஆடையை அணியவில்லை, அதுவே அது இழுத்துக்கொண்டு இருந்தது, அதனால் தொப்புள் மற்றும் முழங்கால்களுக்கு இடையில் உள்ள பகுதி மூடப்பட்டிருந்தது. துஹ்பத் அல் அஹ்வாதியைப் பார்க்கவும்.” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதன் பின்னனி எதுவுமே தெரியாத உசார்மடையர்களான சில இஸ்லாமியவாதிகள் நாம் உண்மையை மறைத்து விட்டதாகக் கூறி ஒப்பாரி வைக்கின்றார்கள்.


மேற்படி நிர்வாண கட்டிப்புடி ஹதீஸை பதிவு செய்துள்ள இமாம் அபூ ஈஸா முஹம்மது பின் ஈஸா அத் திர்மிதி அவர்கள் ஜாமிஅத் திர்மிதி ஹதீஸ் கிரந்தத்தை பூர்த்தி செய்தது கி.பி 884ஆம் ஆண்டில் ஆகும். 'நபி நிர்வாணமாக இருக்கவில்லை, முழங்காலுக்கும், தொப்புளுக்கும் இடையில் மறைத்து இருந்தார்' என்ற, ஆயிஷா சொல்லாத கம்பி கட்டின கதை ‘துஹ்பத் அல் அஹ்வாதி பிஸரஹ் ஜாமிஅத் திர்மிதி’ (تحفة الأحوذي بشرح جامع الترمذي ) எனும் திர்மிதியின் ‘சரஹ்’ ( شـرح) கிதாபில் இடம்பெற்றுள்ளது. இதையே சுருக்கமாக 'துஹ்பத் அல் அஹ்வாதி' என்று இணையத்தில் குறிப்பிட்டுள்ளனர். 'சரஹ்' எனப்படுபவை ஹதீஸ் கிரந்தங்களை விளக்கி பிற்காலத்தில் வேறு நபர்களால் எழுதப்படும் விளக்கவுரை நூற்கள் ஆகும். குர்ஆனுக்கு விளக்கவுரையாக எழுதப்படுபவை தப்சீர்கள் என அழைக்கப்படுவது போன்று ஹதீஸ் நூற்களுக்கு விளக்கவுரையாக எழுதப்படுபவை ‘ஸரஹ்’ (شـرح ) என்று அழைக்கப்படும். புகாரி கிரந்தத்தின் அதிகம் அறியப்பட்ட 'ஸரஹ்' கிதாபாக இமாம் இப்னு ஹஜர் அல் அஷ்கலானி எழுதிய 'பத்ஹுல் பாரி' எனும் கிதாபு அறியப்படுகின்றது. இஸ்லாத்தை காப்பாற்ற வண்டி வண்டியாக குப்பைகள் உள்ளன என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.


இடுப்புக்குக் கீழே மறைத்த கதையை சொல்லும் ‘துஹ்பத் அல் அஹ்வாதி பிஸரஹ் ஜாமிஅத் திர்மிதி’ எனும் ஸரஹ் கிதாபை எழுதியவர் 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் உத்தர்பிரதேசத்தில் வாழ்ந்த முஹம்மது அப்துர் ரஹ்மான் முபாரக்பூரி என்பவர் ஆவார். ஹதீஸ் கிரந்தம் கி.பி 9 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு சுமார் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர், அதுவும் முஹம்மது நபி நிர்வாணமாகக் கட்டிப்பிடித்து சுமார் 1300 வருடங்களுக்குப் பின்னர் உத்தர்பிரதேசத்தில் வாழ்ந்த ஒருவர் சொன்ன சொந்த விளக்கத்தை நாம் ஏன் ஹதீஸில் இணைக்க வேண்டும்? ஸரஹ் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களால் தான் நாம் எதோ ஹதீஸில் உள்ள ஒரு பகுதியை மறைத்து விட்டதாக கற்பனை செய்துகொண்டு ஒப்பாரி வைக்க முடியும்.


கடைசியாக சில விடயங்களை சுருக்கமாக முன்வைக்கின்றேன். அரபியில் உரியான் (عُرْيَانً) என்ற வார்த்தையை ஆயிஷா பயன்படுத்தி உள்ளார், இதன் அர்த்தம் நிர்வாணம் என்பதே தவிர இடுப்புக்கு மேலே ஆடை அணியாத நிலை என்பதல்ல. மேலும் முஹம்மது நபியின் குழந்தை மனைவி ஆயிஷா ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக அதற்கு முன்போ பின்போ அவர்களை நான் நிர்வாணமாகப் பார்த்ததில்லை’ என்று வேறு குறிப்பிட்டு இருக்கின்றார். ( ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக’ என்று ஆயிஷா சத்தியமிட்டுக் கூறி இருப்பதை இஸ்லாமியவாதிகள் மொழிபெயர்ப்பில் தவற விட்டுள்ளார்கள், இப்பொழுது தான் அதனை கவனித்தேன்.) இது இடுப்பிற்கு மேலே ஆடை அணியாத நிலையைக் குறிக்கவில்லை, மாறாக முழு நிர்வாணமாக இருந்ததைத் தான் குறிக்கின்றது என்பதற்கு ஆயிஷா அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு ஆச்சரியமாக கூறியுள்ள வார்த்தைகளே போதுமான சாட்சியாக அமைந்துள்ளன. சாதரணமாக மனைவியின் முன் கணவன் மேலாடை இல்லாமல் இருந்த ஒரு சம்பவமாக இருந்தால் ஆயிஷா அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூற வேண்டிய எந்தத் தேவையும் ஏற்பட்டு இருந்திருக்காது, ‘அதற்கு முன்னும், பின்னும் ஒருபோதும் அவ்வாறு கண்டதில்லை என்றும் கூறி இருக்க வேண்டிய தேவையும் இருந்திருக்காது. 'முஹம்மது நபி ஓலைப் பாயில் தூங்கிய தழும்புகள் அவரது உடலில் தெரியும்' என்று ஹதீஸ்களில் காண்கின்றோம், ஆகவே அவர் சாதரணமாக மேலாடை இல்லாமல் இருந்திருக்கின்றார் என்று தெரிந்து கொள்ளலாம். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது முஹம்மது நபி நிர்வாணமாகச் சென்று கட்டிப் பிடித்தார் என்பதே ஹதீஸ் கூறும் செய்தி ஆகும் என்பது தெளிவாகத் தெரிகின்றது.


கடைசி முயற்சியாக ‘ஆடை இழுபட சென்றார்கள்’ என்கின்ற வசனத்தைப் பிடித்துக் கொண்டு தொங்க முயல்கின்றார்கள் இஸ்லாமிஸ்ட்டுகள், ஆடை இழுபட முஹம்மது எப்படி நிர்வாணமாக செல்ல முடியும் என்று சந்தேகம் இருந்தால் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள விளக்கப் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


ஆர்வக் கோளாறினால் அவசரப்பட்டு தங்களது மத விடயங்களை மற்றவர்களுக்கு சொல்வதற்கு முன்னர், தாங்கள் மதத்தில் உள்ள விடயங்கள் குறித்து இஸ்லாமிஸ்ட்டுகள் ஒழுங்காக, முறையாகப் படித்தால், என்னைப் போன்ற முன்னாள் முஸ்லிம்கள் அவர்களுக்கு ஹதீஸ் பாடம் எடுக்க வேண்டிய நிலை ஏற்படாது.


ஒழுங்காக இஸ்லாம் தெரியாத நிலையில், அரை குறையாகத் தெரிந்து கொண்டு வந்து இனிமேல் கம்பு சுற்ற வேண்டாம் என்று இஸ்லாமிஸ்ட்டுகளுக்கு அறிவுரை கூறுகின்றேன். அதே போன்று உங்கள் அரை குறை அறிவை வைத்துக்கொண்டு அப்பாவி முஸ்லிம்களின் மண்டையில் மிளகாய் அரைக்காமல், நீங்கள் சுயமாக சிந்திக்க ஆரம்பித்தால் நீங்களும் இஸ்லாத்தில் இருந்து விடுதலை பெறலாம், அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்கும் உதவலாம். நீங்கள் இஸ்லாத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு உங்களுக்கு சுய அறிவு, சுய சிந்தனை, ஆய்வுத்திறன், கொஞ்சம் தைரியம் ஆகியவற்றுடன் முக்கியமாக நேர்மையும் தேவைப்படும்.


-றிஷ்வின் இஸ்மத்
22.10.2021