உலமா சபைக்கு ஏசி அறைக்குள்ளும் வியர்ப்பது ஏனோ?


 07.07.2021 புதன்கிழமை அன்று 24 இஸ்லாமிய அமைப்புகளின் 50 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் பங்கேற்புடன் அகில இலங்கை உலமா சபை (ACJU) ஏற்பாடு செய்திருந்த இரகசிய கலந்துரையாடலின் ஒலிப்பதிவு வெளியே கசிந்து விட்டதால் பதற்றத்திற்கும், தடுமாற்றத்திற்கும், பீதிக்கும் உள்ளாகியுள்ள உலமா சபை, ஒலிப்பதிவை வெளியில் கசிய விட்டவரை அல்லாஹ்விடத்தில் பொறுப்புச் சாட்டுவதாக மிரட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அகில இலங்கை உலமா சபையின் (ACJU) தலைவர்கள்முக்கியஸ்தர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த நாட்டின் சட்டத்திற்கு எதிராக எதுவும் பேசவில்லை என்றால்அவர்கள் எத்தகைய சதித் திட்டங்களும் தீட்டவில்லை என்றால் உலமா சபை ஏன் வீணாகப் பதற்றமும்பீதியும் அடைய வேண்டும்?

 

நாட்டின் சட்டத்தையும்ஆட்சியாளர்களையும் ஏமாற்றுவது எப்படி என்று கலந்துரையாடவில்லை என்றால்அரச மற்றும் ஜானாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைகளுக்கு ஏற்ப குர்ஆன் மொழி பெயர்ப்பை சீர்திருத்தம் செய்யாமல் காலத்தை தந்திரமாக இழுத்தடிப்பது எவ்வாறு என்று சதியாலோசனை செய்யவில்லை என்றால்உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களை 'புனர்வாழ்வு வழங்கல்என்ற பெயரில் விடுதலை செய்ய வைப்பதற்கு புனர்வாழ்வுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகளை தந்திரமாக பயன்படுத்துவது எப்படி என்று கபடத் திட்டமிடல் செய்யவில்லை என்றால், பதற்றமும்பீதியும் அடைந்து விழுந்தடித்துக் கொண்டு அறிக்கை வெளியிட வேண்டிய தேவை இல்லை அல்லவா? ஒலிப்பதிவு வெளியில் கசிந்துவிட்டது என்று பயப்பட, தடுமாற, கவலைப்பட தேவை இல்லை அல்லவாஒலிப்பதை கசிய விட்டவரை சபித்து அறிக்கை விடத் தேவை இல்லை அல்லவா?


மறைப்பதற்கு எதுவுமில்லை என்றால்திட்டங்களும்செயற்பாடுகளும் தூய்மையானவைநேர்மையானவை என்றால் ஒலிப்பதிவு வெளியிலே சென்றுவிட்டது என்று சொல்லி வருத்தப்படவோதடுமாறவோபீதியடையவோகுழப்பத்திற்கு உள்ளாகவோசாபமிடவோ தேவையில்லை அல்லவாமடியிலே கணம் இல்லை என்றால் வழியிலே பயம் இருக்காது அல்லவாஅப்படியானால் உலமா சபை எதனை மறைக்க முயற்சிக்கின்றது என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுத் துறையினர் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துவதே பொருத்தமாகும்.

 

மேலதிக தகவல்களுக்கு :

http://www.colombotoday.com/acju-452354/

https://acju.lk/news-ta/acju-news-ta/item/2286-zoom-meeting-issue


-றிஷ்வின் இஸ்மத்
 
15.09.2021