தான் பெற்ற மகனை அல்லாஹ்வுக்காக என்று
சொல்லி இப்ராஹீம் நபி வழியில் கொலையே செய்து விட்டார் மத்ரஸா ஆசிரியையான ஷாஹிதா
எனும் தாய் ஒருவர். ( இது குறித்த செய்திக்கு : http://www.puthiyathalaimurai.com/newsview/93020/Woman-kills-6-year-old-son-in-Palakkad--tells-cops-she-sacrificed-him-for--Allah-
) இவரைக் கொலை செய்ய விடாமல் தடுக்க எந்த
ஷைத்தானும் வரவில்லை, அதே போன்று மகனுக்குப் பதிலாக ஆட்டை அறுத்துப்
பலியிட ஆட்டுடன் மலக்குகளும் வரவில்லை. கதைகளும், கற்பனைகளும் நிஜமில்லை என்பதால் ஷாஹிதாவின்
மகன் கொள்ளப்பட்டே விட்டார். ஷைத்தானும், மலக்குகளும்
கற்பனையைத் தவிர வேறில்லை.
ஹஜ்ஜு என்பது ஒரு வணக்கமாக கருதப்படும் வரை,
குர்பானி என்பது சிறந்த செயலாக
சித்தரிக்கப்படும் வரை, இப்ராஹீம் தன சொந்த மகன் மீது மேற்கொண்ட கொலை முயற்சி தியாகம் என்று
போற்றப்படும் வரை, தினமும் தொழுகையின் அத்தஹியாத்தில் இப்ராஹீம் உடைய புகழ் பாடப்படும்
வரை அல்லாஹ்வுக்காக கொலை செய்வது, குறிப்பாக தான் பெற்ற குழந்தையையே கொலை
செய்வது மீண்டும் மீண்டும் ஞாபகமூட்டப் படுகின்றது. இவ்வாறு தினம் தினம் ஞாபகமூட்டப்பட்டது
இப்பொழுது நிஜத்தில் நடந்துவிட்டது.
கொலைகாரப் பின்னணி கொண்ட ஹஜ், குர்பானி ஆகியவற்றில் இருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும், விடுவிக்கப்பட
வேண்டும். ஹஜ் என்பது இன்றைய காலத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத, அநாகரீகமான, கொலை வெறியைக் கொண்டாடும்,
மூடநம்பிக்கைகள் நிறைந்த ஒரு நிகழ்வாகும். இப்ராஹீம் புனிதர் அல்ல, மாறாக அவர் பித்துப் பிடித்த கொலைகாரன் என்பதை சிந்திக்கும் ஆற்றல்
உள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியும். இப்ராஹீம் பித்துப் பிடித்த கொலைகாரனே
என்கின்ற உண்மையை முஸ்லிம்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். ஹஜ்ஜை மட்டுமல்ல,
தினமும் தொழுகையின் அத்தஹியாத்தில் இப்ராஹீமின்
புகழ் பாடும் மெளட்டீக செயலையும் முஸ்லிம்கள் கைவிட வேண்டும். முஸ்லிம்கள் கொலைகார
சமுதாயமாக, கொலையைக் கொண்டாடும் சமுதாயமாக,
கொலைகாரனைப் புகழும் சமுதாயமாக இனியும்
இருக்கக் கூடாது. பல்லாண்டுகளாக சிந்திக்காமல் இருந்து விட்டீர்கள் என்பதற்காக
தொடர்ந்தும் சிந்திக்காமலே இருப்பது மாபெரும் பிழை ஆகும், ஆகவே முஸ்லிம்களே இனியாவது சிந்தியுங்கள்.
இதே மாதிரியான ஒரு கோர சம்பவம் தொடர்பில்
எழுதப்பட்ட பதிவு, முஸ்லிம்கள் கட்டாயம் வாசிக்கவும்,
வாசித்த பின்னர் சிந்திக்கவும். http://www.allahvin.com/2021/01/Mecca.html