மூடநம்பிக்கை இல்லாத இஸ்லாம் சாத்தியமா?

 



"இஸ்லாமியர்கள் மூடநம்பிக்கையை கைவிட வேண்டும்" - தவ்ஹீத் கூட்டமைப்பு

 

ஆமா, இந்த சவுண்டு நல்லாத்தானே இருக்கு?

அப்போ என்ன செய்யணும்?

முஸ்லிம்கள் மக்காவுக்கு சென்று தூணுக்கு கல்லெறியக் கூடாது, ஜட்டி போடாமல் "லப்பை லப்பை" என்று கத்திக்கொண்டு கறுப்புப் பெட்டியை சுற்றிச் சுற்றி ஓடக் கூடாது, மொட்டை அடிக்கக் கூடாது, முட்டி போட்டு நெற்றியை நிலத்தில் முட்டக் கூடாது, மலசலம் கழிக்கும் பொழுது ஹுபுசி, ஹபாயிசி என்று ஆணும் பெண்ணுமான பூதங்கள் கக்கூசுக்குள் நிற்கும் என்று நம்பக் கூடாது, கனவில் கடவுள் சொன்னார் என்று யாரோ ஒரு கிழவர் மற்றப் பொண்டாட்டிக்கு பிறந்த மகனை கொலை செய்ய முயன்றதை பெருநாள் என்று கொண்டாடக் கூடாது மற்றும் அதற்காக வருடாந்தம் குறித்த நான்கு நாட்களில் பிராணிகளை அறுத்துப் பலியிடக் கூடாது, கண்ணால் காணமல், உறுதியாகத் தெரியாமல் ஷஹாதத் கலிமா என்ற பெயரில் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகின்றேன்" பொய் சாட்சியம் சொல்லக் கூடாது, ஒரு மாதம் பகல் முழுவதும் தண்ணீர் கூட குடிக்காமல் வரட்சி நோன்பு பிடித்துப் பட்டினி கிடக்கக் கூடாது, ஒட்டக மூத்திரம் குடித்தால் நோய் குணமாகும் என்று நம்பக் கூடாது, அல்லாஹ்வின் பாதையில் என்று சொல்லிக்கொண்டு யுத்தம் செய்து கொலை செய்யப்பட்டால் சுவர்க்கத்தில் 72 கன்னிகள் கிடைக்கும் என்று நம்பக்கூடாது, நபி சிறகு வைத்த கழுதையில் ஏறிப் பறந்து விண்வெளிக்குச் சென்று வந்தார் என்று நம்பக் கூடாது, நிலவு பிளந்தது என்று முட்டாள்தனமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. மேலும் இவை போன்று இன்னுமுள்ள எண்ணற்ற மூட நம்பிக்கைகளையும் சேர்த்து முஸ்லிம்கள் கைவிட வேண்டும் என்று சொல்கின்றார்களா? உண்மையில் நன்றாகத்தான் இருக்கின்றது, ஆனால் இந்த மூட நம்பிக்கைகளையும், இவை போன்றுள்ள ஏனைய மூட நம்பிக்கைகளையும் நீக்கிவிட்டால் இஸ்லாம் என்று என்னதான் மிஞ்சும்?

 

இஸ்லாத்திற்கு ஒரே ஒரு தூணாக சக்காத் மட்டும்தான் மிஞ்சும். ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பாலைவன மனிதனோடு இறைவன் பேசினார் என்ற மிகப்பெரிய மூட நம்பிக்கையை கைவிட்டால் அதுவும் கூட மிஞ்சாது. இஸ்லாம் என்ற கடைய மொத்தமாக இழுத்து மூட வேண்டியதுதான்.


முஸ்லிம்கள் உண்மையாகவே மூடநம்பிக்கைகளை முற்றாகக் கைவிட்டால் இஸ்லாத்தில் எதுவுமே மிஞ்சாது. 6 ஆம் நூற்றாண்டில் பாலைவனத்தில் வாழ்ந்த ஒருவருடன் இறைவன் பேசினார் என்று நம்புவதே மிகப்பெரிய பெரிய மூட நம்பிக்கை தானே!

சரி, இத்துடன் சேர்த்து இஸ்லாம் தொடர்பான இன்னொரு விடயத்தையும் பார்ப்போமே!

"இஸ்லாத்தில் குண்டு வைக்க சொல்லப்பட்டுள்ளது" என்பது இஸ்லாத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் முக்கியமான ஒரு குற்றச்சாட்டு ஆகும். ஆனால் உண்மையில் இது மிகவும் தவறான குற்றச்சாட்டு ஆகும். இஸ்லாத்தில் ஒரு இடத்தில் கூட அவ்வாறு சொல்லப்படவில்லை. இஸ்லாத்தைப் பற்றி தெரியாதவர்களே இவ்வாறு பிழையான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.


வெடிகுண்டு வைக்கும்படி இஸ்லாத்தில் சொல்லப்படாததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன என்பது இஸ்லாத்தை படித்தவர்களுக்குத் தெரியும்.

அவையாவன :

1. முஹம்மது நபி வாழ்ந்த காலத்தில் இன்றைக்கு இருப்பது போன்று வெடிகுண்டுகள் இருக்கவில்லை.

2. எதிர்காலத்தில் வெடிகுண்டு, துப்பாக்கி மற்றுமுள்ள போர்த் தளபாடங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்படும் என்று முஹம்மது நபிக்கோ, (அவர் உருவாக்கிய) அல்லாஹ்விற்கோ கொஞ்சம் கூடத் தெரிந்திருக்கவில்லை. (அவிங்க அறிவு அம்புட்டுத்தான்)


வெடிகுண்டைப் பற்றி சொல்லப்படவில்லை என்பது உண்மையே, மற்றப்படி என்ன சொல்லப்பட்டுள்ளது என்று அறிய விரும்பினால் இணைப்பில் சென்று முதல் நான்கு பந்திகளையும் தவிர்த்துவிட்டு மீதியை வாசியுங்கள்.

http://www.allahvin.com/2019/05/NTJ.html