வெடிகுண்டை உள்ளே வைத்துக்கொண்டு வெற்றுத் தோட்டவிற்கு (ஐஎஸ்ஐஎஸ்) எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதா?

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றதன் பின்னர், தமக்கும், பயங்கரவாதிகளுக்கும் சம்மந்தம் இல்லை என்று நிரூபிப்பதற்காக முஸ்லிம்கள் கடும் சிரமப்பட வேண்டியாகி உள்ளது. அந்த வகையில் நாட்டின் ஒரு சில பாகங்களில் முஸ்லிம்கள் ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள். குறிப்பிட்ட பயங்கரவாதத்திற்கு எதிராக பெயரளவில் மட்டும் ஆர்ப்பாட்டம் செய்யாமல், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டவும் நேர்மையாக செயற்பட வேண்டும் அல்லவா? முஸ்லிம்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் வாலோடுதான் கோபம்நாயோடு இல்லை என்கின்ற விதமாக நடந்துகொள்ளக் கூடாது அல்லவா?



முஸ்லிம்கள் உண்மையில் பயங்கரவாதத்தை, வன்முறையை, தீவிரவாதத்தை எதிர்ப்பவர்களாக இருந்தால் வெறுமனே ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியப் பயங்கரவாதிகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யாமல், இஸ்லாமிய புனித நூல்களில் உள்ள பயங்கரவாதத்தை, வன்முறையை, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் போதனைகளிற்கு எதிராகவும், அவற்றை போதித்ததாக / செயற்படுத்தி முன்மாதிரி காட்டிவிட்டுச் சென்றதாக சொல்லப்படும் முஹம்மதிற்கு எதிராகவும், அவற்றை அருளியதாக சொல்லப்படும் அல்லாஹ்விற்கு எதிராகவும், அவற்றை போதிக்கும் மற்றும் நூலுருவில் பாதுகாக்கும் உலமாக்களுக்கு எதிராகவும், அவற்றை விற்பனை செய்யும் புத்தக நிலையங்களிற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்.


இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (30.05.2019) அம்பாறை நகரசபை மைதானத்தில் உரையாற்றுகையில்சஹ்ரான் குழுவின் ஒரு பகுதியினர் உயிருடன் இல்லை. அந்த குழுவை சேர்ந்த ஏனைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளனர். அத்துடன் குழுவுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சஹ்ரான் குழு மற்றும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு முற்றாக இல்லாமல் செய்யப்பட்டாலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது என்று கூறக் கூடாது. இது விடுதலைப் புலிகளை போன்று பெரிய அமைப்புகள் செய்யும் வேலையல்ல. ஒரு குழு இல்லாமல் போனால், மற்றுமொரு குழு உருவாகலாம். இதற்கு அரசியல் நோக்கம் கிடையாது. ஐரோப்பாவில் சில சந்தர்ப்பங்களில் சிலர் தற்கொலை குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். அவர்களின் நோக்கம் ஏனையோரை கொலை செய்யும் தற்கொலை தாக்குதல் நடத்துவது. சில நேரம் இரண்டு மூன்று பேர் இணைந்து தற்கொலை தாக்குதல்களை நடத்த முடியும். இந்த பயங்கரவாத்தை எதிர்கொள்ள புதிய சட்டங்களை கொண்டு வரும் தேவை உள்ளது. பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய வியூகத்தை வகுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டு இருக்கின்றார். சஹ்ரானும், அவர் கூட்டத்தினரும் இல்லாமல் போனாலும்,  குர்ஆன், ஹதீஸ் போதிக்கப்படும் வரை புதிய பயங்கரவாதிகள் உருவாவதை தவிர்க்க முடியாது என்பதை பிரதமரின் உரை குறித்துக் காட்டுவதாக இருந்தால் மகிழ்ச்சியே. புதிய பயங்கரவாதிகள் உருவாகி, குண்டுகள் வெடித்த பின்னர்இவர்கள் முஸ்லிம்கள் இல்லை, இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லைஎன்று போலியாக அறிக்கை விடுவதை விடவும், பயங்கரவாதம் உருவாகக் காரணிகளாக அமையும் போதனைகளை நீக்குவதே சரியானது ஆகும்.
அவ்வாறில்லாமல் வெடிக்காத பயங்கர வெடிகுண்டுகளை உள்ளே வைத்துக்கொண்டு, வெடித்த வெற்றுத் தோட்டவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதால் என்ன பயன்? இலங்கையைப் பொறுத்தவரை இப்பொழுது சஹ்ரானின் என்.டீ.ஜே என்பது வெடித்த ஒரு வெற்றுத் தோட்டா, குர்ஆன், ஹதீஸில் உள்ள பயங்கரவாத, தீவிரவாத போதனைகள் வெடிக்காத பயங்கர வெடி குண்டுகள். முஸ்லிம்களே, முதலில் நீங்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் சிந்தியுங்கள். பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை, வன்முறையை, சக மனிதனை வெறுப்பதை போதிப்பது யாராக இருந்தாலும் அதனை நிராகரிக்க முன்வாருங்கள். அல்லாஹ் என்கின்ற இறைவன் உங்களிடம் நேரடியாக வந்து எதையுமே போதிக்கவில்லை, யாரோ சொன்னதாக யாரோ சொல்லி பல நூறு வாய்கள் கடந்து வந்த கதைகளை மட்டுமே நீங்கள் குருட்டுத்தனமாக நம்பிக்கொண்டு பயங்கரவாதம், வன்முறை, தீவிரவாதம் ஆகியவை அடங்கிய போதனைகளை பாதுகாக்கின்றீர்கள், போலி நியாயங்கள் சொல்லி அவற்றை சரி காண்கின்றீர்கள், இவை முற்றிலும் தவறாகும்.


ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை யார் உருவாக்கி இருந்தாலும், நம் நாட்டு முஸ்லிம்களான இன்ஷாப், இல்ஹாம், மில்ஹான், சாதிக் அப்துல்லாஹ் ஹக், ஹஸ்தூன் போன்ற படித்த, வசதியான வீட்டுப் பிள்ளைகள் அதில் சேர்வதற்கு தூண்டுகோலாக அமைந்தது எது, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்களை அவர்களிற்கு அழகானதாகக் காட்டியது எது என்று நீங்கள் சிந்திக்க வேண்டும்.

(நபியே) நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கின்றீர். அல்குர்ஆன்: 68:4
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது’. (அல்குர்ஆன்: 33:21)
அல்லாஹ்வின் தூதரிடம் இருக்கின்ற அழகிய நற்குணங்களில் சிலவற்றையும், குரானின் போதனைகளையும் பார்ப்போமே :



அதியாஹ் அல் குராஸி (ரலி) அறிவிக்கின்றார் : பனூ குரைஸா கைதிகளில் ஒருவனாக நான் இருந்தேன். சஹாபாக்கள் (எமது ஆடைகளைக் களைந்து) சோதனை செய்தார்கள், பிறப்புறுப்பில் உரோமம் வளரக் கூடியவர்களாக இருந்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், பிறப்புறுப்பில் உரோமம் வளரும் பருவத்தை அடைந்திருக்காதவர்கள் கொலை செய்யப்படவில்லை, நான் அப்பொழுது பிறப்புறுப்பில் உரோமம் முளைக்கதவனாக இருந்தேன்.
அபூதாவூத் 4404
பாகம் 40 ஹதீஸ் எண் 54

நபியே, உமது இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கின்றேன், ஆகவே நீங்கள் மூமின்களை உறுதிப்படுத்துங்கள், காபிர்களின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன், நீங்கள் அவர்களின் பிடரிகளின் மீது வெட்டுங்கள், அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்"
குரான் 8:12


(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (குரான் 9:4)




''இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் (போரில் சிக்கிச்) கொல்லப்படும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே'' என்று பதிலளித்தார்கள். (நூல்கள் - புகாரி, 3012. முஸ்லிம், 3589, 3590)


''குதிரைப் படையினர் இரவு நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தும்போது (எதிரிகளான) இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுவிடுவார்களே?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ''அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையரைச் சார்ந்தவர்களே'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (முஸ்லிம், 3591)

அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எத்தகையவர்கள் என்றால் தங்களுடைய மர்மஸ்தானங்களை காத்துக் கொள்வார்கள், எனினும் தங்கள் மனைவிகளிடமும், வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட அடிமைப் பெண்களிடமும் உடலுறவு கொள்வதில் அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
குரான் 26: 7 – 8

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள். 
நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி 371

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 
கைபருக்கு அருகே (ஓரிடத்தில்) நபி(ஸல்) அவர்கள் இருட்டிலேயே சுப்ஹுத் தொழுதுவிட்டு பிறகு, 'அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும்" என்று கூறினார்கள். 
கைபர்வாசிகள் (முஸ்லிம் படைகளைக் கண்டதும்) வீதிகளில் ஓடினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம்முடன்) போரிட்டவர்களைத் தாக்கினார்கள். அவர்களின் குடும்பத்தின(ரான பெண்கள், சிறுவர்கள் ஆகியோ)ரைத் கைது செய்தார்கள். கைதியாகப் பிடிக்கப்பட்டவர்களில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களும் ஒருவர். அவர்கள் (முதலில்) திஹ்யா அல் கல்பீ(ரஹ்) அவர்களிடம் (அன்னாரின் போர்ச் செல்வத்தின் பங்காகப்) போய்ச் சேர்ந்தார்கள். பிறகு ஸஃபிய்யா அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சொந்தமானார்கள். 
புஹாரி 4200

3609. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் "(பனூ) ஃபஸாரா" குலத்தார்மீது போரிடப் புறப்பட்டோம். எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக இருந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எங்களுக்குத் தளபதியாக நியமித்தார்கள்.

எங்களுக்கும் (ஃபஸாரா குலத்தாரின்) நீர் நிலைக்குமிடையே ஒரு மணி நேரப்பயணத் தொலைவு இருந்தபோது,இரவின் இறுதி நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களை ஓய்வெடுக்கச் சொன்னார்கள்.

பின்னர் (காலைத் தொழுகைக்குப் பின்) பல்வேறு திசைகளிலிருந்து அதிரடித் தாக்குதல் தொடுத்தோம். அப்போது (ஹவாஸின் குலத்தாரின்) நீர்நிலைக்கு வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கு சிலரை வெட்டி வீழ்த்தினார்கள்;வேறுசிலரைச் சிறைப்பிடித்தார்கள்.
அப்போது நான் (எதிரிகளில்) ஒரு கூட்டத்தைப் பார்த்தேன். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் என்னை முந்திக்கொண்டு (என்னிடமிருந்து தப்பி) மலைக்குச் சென்றுவிடுவார்களோ என்று நான் அஞ்சினேன். உடனே அவர்களுக்கும் அந்த மலைக்குமிடையே ஓர் அம்பைப் பாய்ச்சினேன். அந்த அம்பைப் பார்த்ததும் அவர்கள் நின்றுவிட்டனர்.
உடனே அவர்களைப் பிடித்துக் கொண்டுவந்தேன். அவர்களிடையே பனூ ஃபஸாரா குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியும் இருந்தாள். அவளது உடலில் தோலினாலான "கஷ்உ" ஒன்று இருந்தது. ("கஷ்உ" என்பதற்கு "விரிப்பு" என்று பொருள்.) அவளுடன் அவளுடைய மகளும் இருந்தாள். அவள் அரபியரிலேயே அழகிய பெண் ஆவாள். அவர்களைப் பிடித்துக்கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவளுடைய மகளை எனக்குக் கூடுதல் பங்காக வழங்கினார்கள்.
இந்நிலையில் நாங்கள் (மதீனாவுக்கு) வந்தோம். நான் அவளுக்காக ஆடையைக்கூடக் களைந்திருக்கவில்லை. (தாம்பத்திய உறவு கொள்ளவில்லை. மதீனாவின்) கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தபோது, "சலமா! அப்பெண்ணை என்னிடம் கொடுத்துவிடு" என்று கூறினார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே! அவள் என்னைக் கவர்ந்துவிட்டாள். நான் அவளுக்காக ஆடையைக்கூட களைந்திருக்க வில்லை" என்று கூறிவிட்டேன்.
பிறகு மறுநாள் கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்த போதும் "சலமா! அப்பெண்ணை என்னிடம் ஒப்படைத்துவிடுவாயாக! உன் தந்தை (உன்னைப் போன்ற மகனைப் பெற்றெடுத்ததற்காக) அல்லாஹ்வுக்கே (நன்றி)" என்று கூறினார்கள்.

நான் "அல்லாஹ்வின் தூதரே! அவள் உங்களுக்கே உரியவள் (அவளை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்). அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவளுக்காக (பாலியல் வல்லுறவிற்கு) ஆடையைக்கூட  களைந்திருக்கவில்லை" என்று கூறினேன்.
2229. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். 

நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு பெண் போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புகின்றோம், எனினும் நாங்கள் அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள்.
பாகம் :2 பகுதி :34 

அதியாஹ் அல் குராஸி (ரலி) அறிவிக்கின்றார் : குரைஸா யுத்தத்தின் பின்னர் நாம் முஹம்மது நபியின் முன் நிறுத்தப்பட்டோம். மர்ம உறுப்பில் ரோமம் முளைத்து இருந்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், உரோமம் முளைக்காமல் இருந்தவர்கள் கொலை செய்யப்படாமல் விடப்பட்டார்கள், எனக்கு மர்ம உறுப்பில் உரோமம் முளைத்து இருக்காததால் நான் கொல்லப்படவில்லை.
திர்மிதி 1584
பாகம் 21 ஹதீஸ் எண் 46


இதே ஹதீஸ் அபூதாவுத் 4404 ஆவது ஹதீஸ் ஆகவும் இடம்பெற்றுள்ளது.

கஸீர் பின் அஸ்ஸாஇப் (ரலி) அறிவிக்கின்றார் :
குரைஸா கோத்திரத்தின் சிறுவர்கள் எனக்குக் கூறினார்கள் "நாம் முஹம்மது நபியின் முன்னால் நிறுத்தப்பட்டோம், எங்களில் யார் பருவமடைந்து பிறப்புறுப்பில் உரோமம் வளரக் கூடியவர்களாக இருந்தார்களோ, அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், எங்களில் யார் பருவமடையாதவர்களாக பிறப்புறுப்பில் உரோமம் வளராதவர்களாக இருந்தார்களோ, அவர்கள் கொலை செய்யப்படவில்லை."
நஸஈ 3429
பாகம் 27 ஹதீஸ் 41 
இஸ்லாமிய மூலாதாரங்களில் உள்ள முஹம்மது நபி வழிகாட்டிவிட்டுச் சென்ற பயங்கரவாதத்தின் ஒரு சில துளிகளே மேலே தரப்பட்டுள்ளன. இஸ்லாம் தெரியாத அப்பாவி முஸ்லிம்களும், உண்மையை மறைத்து நாடகமாடும் உலமாக்களும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஆர்ப்பட்டம் செய்கின்றோம் என்று நாடகமாடுவதால் பயங்கரவாதம் ஒருபோதும் ஒழியாது.

* மேலே குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்கள் குரான், ஹதீஸில் இல்லை என்று எந்த உலமவாலும் மறுக்க முடியாது.