6 வயது ஆயிஷா திருமணம் அந்தக் கால வழமையா?


 53 வயசில் முஹம்மது நபி 6 வயதுக் குழந்தையை திருமணம் செய்தது கேவலமானதும், பிழையானதுமான செயல் என்பது அவரை நபியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கே இன்று புரிய ஆரம்பித்து விட்டது. ஆனாலும் முஹம்மது நபியை விட்டுக் கொடுக்க மதவெறியும், ஈகோவும் இடம் தராததால் விதம் விதமாக உருட்டுகின்றார்கள்.



"அது அந்தக் கால வழமை" என்பது ஒரு முக்கியமான உருட்டு, ஆனாலும் அது இலகுவில் உடைந்து போகும் ஒரு உருட்டு ஆகும்.


முஹம்மது நபி "திருமணம் எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல.” (புகாரி, இப்னு மாஜா : 1846) என்று சொல்லி இருக்கின்றார்.



அவர் குழந்தை ஆயிஷாவை திருமணம் செய்தது அந்தக் காலத்திற்கு உரிய நடைமுறை, இந்தக் காலத்திற்கு பொருத்தமில்லை என்றால் தனது வழிமுறையான திருமணத்தில் கூட இக்கால பக்தர்களுக்கு வழி காட்ட முடியாத காலாவதியான (expired) நபராக முஹம்மது நபி இருக்கின்றார் என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? அப்படியானால் திருமணத்திலேயே முஹம்மது நபியைப் பின்பற்ற முடியாது என்றால் ‘உஸ்வதுல் ஹசனா’ எனும் அழகிய முன்மாதிரி அவரிடம் இருக்கின்றது என்று குர்ஆன் சொல்வது பொய் என்றும் ஏற்றுக் கொள்ள வேண்டும், தயாரா?


முஹம்மது நபி குழந்தை ஆயிஷாவை திருமணம் செய்தது அந்தக் கால வழமை என்றால், முஹம்மது நபி திருமணம் செய்வதற்கு முன்னர் இப்படியான திருமணங்கள் அன்றைய சமூகத்தில் சாதாரணமாக நடந்து இருக்க வேண்டும் அல்லவா? அப்படியான ஒரு திருமணத்தை அன்றைய மக்காவிலோ, மதீனாவிலோ வாழ்ந்த எந்த ஒரு காபிராவது செய்ததற்கு ஒரு ஆதாரத்தை தர முடியுமா? ஆபிரிக்காவில், அமெரிக்காவில் உள்ள / இருந்த திருமண வயதுச் சட்ட ஆதாரத்தையோ, அம்பேத்கர், காந்தி, ராமன் என்று சம்மந்தமில்லாத வாதங்களையோ கொண்டு வர வேண்டாம்.


முஹம்மது நபி அவரது காலத்தில் இருந்த நடைமுறையை செய்தார் என்றால் அந்த நடைமுறை அவரது சமூகத்தில் இருந்ததற்கான ஆதாரத்தை தர வேண்டியது இந்த (உருட்டு) வாதத்தை முன்வைப்பவர்களின் பொறுப்பு ஆகும். 



அப்படி ஒரு வழமை அவரது காலத்தில் இருக்கவில்லை என்பதற்கான ஆதாரம் ஹதீஸிலேயே இருக்கின்றது. 


خَطَبَ أَبُو بَكْرٍ وَعُمَرُ رضى الله عنهما فَاطِمَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّهَا صَغِيرَةٌ ‏"‏ ‏.‏ فَخَطَبَهَا عَلِيٌّ فَزَوَّجَهَا مِنْهُ ‏.‏


அபூபக்கரும், உமரும் (முஹம்மது நபியின் மகள்) ஃபாத்திமாவைப் பெண் கேட்டார்கள், அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் “அவள் சிறியவள்” என்று கூறி மறுத்து விட்டார்கள். பின்னர் தனது மகளை அலிக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள்.

(ஸுனன் நஸ்ஈ : 3221)


47 வயது வித்தியாசத்தில் ஆயிஷாவை திருமணம் செய்கின்றார் முகம்மது நபி, ஆனால் தனது மகளை விட 32 வயது வித்தியாசமுடைய அபூபக்கருக்கும், 23 வயது வித்தியாசமுடைய உமரும் பெண் கேட்ட பொழுது “அவள் சிறியவளாக இருக்கின்றாள்” (إِنَّهَا صَغِيرَةٌ) என்று சொல்லி மறுத்துவிட்டு, சுமார் 5 வருட வயது வித்தியாசமுள்ள அலிக்கு திருமணம் செய்து கொடுக்கின்றார். 


வயது குறைந்த சிறுமிகளை வயதானவர்கள் திருமணம் செய்யும் நடைமுறை அன்று அரேபியாவில் கூட இருக்கவில்லை என்பதற்கு சொந்த மகளின் திருமணத்தை செய்துவைத்த விடயத்தில் முஹம்மது நபியே ஆதாரமாக இருக்கின்றார். முஹம்மது நபி செய்தது தவறு என்றும், அவர் இக்காலத்தில் பின்பற்றப் படுவதற்கு தகுதியற்றவர் என்றும் ஏற்றுக் கொள்வதைத் தவிர இனிமேல் வேறு வழியில்லை.



குறிப்பு : 6 வயது சிறுமிக்கும், 7 வயது சிறுவனுக்கும் பெரியவர்கள் திருமணம் செய்து வைத்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு வராதீர்கள், இங்கே விடயம் சிறுவர் திருமணம் அல்ல, மாறாக தன்னை எக்காலத்திற்குமான இறைதூதர், அழகிய முன்மாதிரி என்று சொல்லிக் கொண்டவர் தனது 53 வயதில் 6 வயதுக் குழந்தையை திருமணம் செய்தது 9 வயதான சிறுமியுடன் செக்ஸ் செய்தது பற்றியதாகும்.