ரமழான் வறட்சி நோன்பும், மருத்துவ நன்மைகளும்!

 


இஸ்லாம் சொல்வது போல ஒரு மாதம் வறட்சி நோன்பு நோற்பது உடல் நலத்திற்கு நல்லதா? இஸ்லாத்திற்கு சொம்படித்து வீடியோ போடும் எந்த மருத்துவராவது தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு ஒரு மாதகால இஸ்லாமிய வறட்சி நோன்பை பரிந்துரைத்ததுண்டா?


ஒரு மாத காலம் தினமும் 13 - 15 மணிநேரம் பகல் பொழுதில் நீர், வேறு பானங்கள், உணவு போன்ற எதுவுமே உட்கொள்ளாமல் வறட்சி நோன்பு நோற்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல. ஆனாலும் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகமாக இருப்பதால் பல்வேறு லாபங்களை எதிர்பார்த்து சில அரைகுறை சந்தர்ப்பவாத மருத்துவர்கள் மற்றும் வீவ்ஸ் எண்ணிக்கையை ஏற்றத் துடிக்கும் யூடியூப் அரைகுறைகள் "முஸ்லிம்கள் போன்று நோன்பு நோற்பது உடல்நலத்திற்கு நல்லது, நோய்கள் குணமாகும்" என்றெல்லாம் பச்சைப் பொய்களை அவ்வப்போதுஅவிழ்த்து விடுவதுண்டு.


சில பொழுதுகளில் இஸ்லாத்தின் வரட்சி நோன்பிற்கும் (Dry Fasting), சாதாரண நோன்பிற்கும் (Fasting, Intermittent Fasting) வித்தியாசம் தெரியாத சிலர் கூட நோன்பினால் ஏற்படக் கூடிய சில நன்மைகளை இஸ்லாமிய வறட்சி நோன்புடன் இணைத்துப் பேசுவதும் கூட உண்டு. எது எவ்வாறு இருந்தாலும் இவ்வாறான பொறுப்பாற்ற கருத்துக்களால் உண்மையில் பாதிக்கப் படுவது ஏற்கனவே சுய சிந்தனையை இழந்து இஸ்லாத்தைக் கண்மூடித்தனமாக பின்பற்றிக் கொண்டு இருக்கும் முஸ்லிம்கள் மட்டும் தான்.


இஸ்லாம் சொல்லும் ஒரு மாதகால வறட்சி நோன்பு வேறு சாதாரண நோன்பு வேறு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். (இது குறித்து ஏற்கனவே எழுதி இருக்கின்றேன் : http://www.allahvin.com/2023/03/Fasting.html )


கழுத்தில் இதயத்துடிப்பு மானியை (stethoscope) கொழுவிக் கொண்டு மருத்துவர் என்ற கெளரவ அடையாளத்துடனும் பொதுப் பரப்பில் வந்து "முஸ்லிம்கள் போன்று நோன்பு நோற்பது நோய்களைக் குணமாக்கும், உடல் நலத்திற்கு நல்லது" என்றெல்லாம் பொய்களை அவிழ்த்து விடும் எந்த மருத்துவராவது, (அவர் முஸ்லிமாக இருக்கட்டும் அல்லது இஸ்லாத்திற்கு சொம்படிப்பவராக இருக்கட்டும்) தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அவர்களது நோய் குணமாவதற்காக ஒரு மாத காலம் பகல் முழுவதும் 13 - 15 மணித்தியாலம் வறட்சி நோன்பு நோற்கும்படி பரிந்துரை செய்வாரா? கடைசி வரையும் செய்யவே மாட்டார், இதுவரை அப்படி செய்த ஆதாரங்களும் இல்லை.


இலங்கை, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மட்டுமல்ல, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளான பாகிஸ்தான், மலேசியாவிலோ, அரபு இஸ்லாமிய நாடுகளான சவூதி அரேபியா, பஹ்ரைனிலோ கூட எந்த மருத்துவரும் தன்னிடம் வரும் எந்த நோயாளிக்கும் "ஒரு மாதகாலம் 15 மணித்தியாலங்கள் வறட்சி நோன்பு பிடிங்கள்" என்று மருத்துவ அறிவுரை சொல்லவே மாட்டார். ஆக, "வரட்சி நோன்பினால் உடல் நலம் கிடைக்கும், நோய் குணமாகும்" என்று முஸ்லிம்கள் ஏமாற்றப் படுகின்றார்கள். இதனை உண்மை என்று நம்பி, இல்லாத அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் வைத்து வறட்சி நோன்பு நோற்பதால் முஸ்லிம் நோயாளிகள் பலரது உடல்நிலை மேலும் மோசமடைகின்றது என்பதே உண்மையாகும்.


ஒரு மாதகாலம் வறட்சி நோன்பு நோற்பதால் நோயாளிகளது உடல் நிலை மட்டுமல்ல, சாதாரண முஸ்லிம்களின் உடல்நிலையும் கூட பாதிப்புற்கு உள்ளாகின்றது, உடல் செயற்திறன் குறைபாடடைகின்றது, பலம் குன்றிப் போகின்றது, மூளையின் செயற்திறன் பாதிப்படைகின்றது, கவனக் குறைவு ஏற்படுகின்றது. நேற்றைய தினம் #csk வீரர் #MoeenAli யின் மோசமான ஆட்டத்திற்குக் காரணம் கூட அவர் தொடராக வரட்சி நோன்பு நோற்றதே ஆகும். ஆரம்ப நாட்களில் அவர் சிறப்பாக விளையாடினாலும், நாளாக நாளாக வரட்சி நோன்பு அவரைப் பலவீனப் படுத்தியுள்ளது.


இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரரான மொயீன் அலியை எடுத்துக் கொண்டால் அவர் நேற்று விளையாடியது போன்று மோசமாக விளையாடக் கூடிய வீரர் அல்ல. ஏதாவது ஒரு போட்டியில் ரன் அடிக்காமல் அவுட் ஆவது, இன்னொரு போட்டியில் மோசமாகப் பந்து வீசுவது, எப்போதாவது ஒரு தடவை ஒரு காட்ச் மிஸ் பண்ணுவது போன்றவை மொயின் அலி போன்ற ஒரு திறமையான வீரருக்குக் கூட நடக்கலாம். ஆனால் ஒன்றுக்கு இரண்டு மிக இலகுவான கைக்கே வந்த பிடிகளை தவற விட்டது சாதாரணமாக நடக்கக் கூடியது அல்ல, அத்துடன் அதே போட்டியிலேயே பெட்டிங், போலிங் என்று எல்லாமே சொதப்பலாக அமைவது தொடர்ச்சியாக வறட்சி நோன்பு நோற்றதால் ஏற்பட்ட பக்க விளைவுகளே ஆகும். மீண்டும் சிறப்பாக விளையாட வேண்டும் என்றால் நோன்பு நோற்பதை நிறுத்திவிட்டு பயிற்சியிலும், போட்டியிலும் முறையாகக் கவனம் செலுத்துவதே மொயீன் அலிக்கு உள்ள தெரிவாகும்.


ரமழான் வறட்சி நோன்பு காலத்தில் பகலில் தாகித்துப் பட்டினி கிடப்பது மட்டும் நடப்பதில்லை, மாறாக இரவுத் தொழுகை என்று இரவில் விழித்திருப்பது, பொருத்தமற்ற பின்னிரவு நேரத்தில் (3.00 - 4.00 மணியளவில்) தூக்கத்தை குலைத்தது எழுந்து சாப்பிடுவது என்று உடல் நலத்திற்குக் கேடான பல விடயங்களைக் கொண்டதே இஸ்லாம் சொல்லும் ரமலான் வரட்சி நோன்பு ஆகும். ( இது தொடர்பான பதிவு : https://www.facebook.com/rishvin/posts/10230958875258514 )


மொயீன் அலி மட்டும் தான் என்றில்லை, குத்துச்சண்டை, காற்பந்து, மல்யுத்தம், ஹாக்கி, ரக்பி என்று எந்த ஒரு விளையாட்டு வீரராக இருந்தாலும் அவர் தொடர்ச்சியாக வறட்சி நோன்பு நோற்கும் பொழுது பாதிப்பிற்கு உள்ளவார் என்பதே உண்மை ஆகும்.


விளையாட்டு வீரர்கள் மாட்டுமல்ல, சாதாரண முஸ்லிம்கள் கூட ரமழான் வறட்சி நோன்பினால் பாதிப்பிற்கு உள்ளாகின்றார்கள், 20 நோன்புகள் கடந்து விட்ட நிலையில் அவர்களின் மூளைச் செயற்பாடு கூட பொதுவாக மந்தமடைந்தே காணப்படும். தொடர்ச்சியாக வறட்சி நோன்பு நோற்பதன் காரணமாக மூளைச் செயற்திறன் மந்தமடைவதால் இந்தப் பதிவில் என்ன எழுதப் பட்டுள்ளது என்பதைக் கூட புரிந்து கொள்ள பல முஸ்லிம்களால் முடியாமல் போகலாம், அதனை பதிவிற்கு வரும் பின்னூட்டங்களின் மூலம் கூட உறுதி செய்து கொள்ளலாம்.

இஸ்லாம் சொல்லும் ரமழான் வறட்சி நோன்பு உடல்நலத்திற்குக் கேடானதே.

முஸ்லிம்களே, வறட்சி நோன்பு நோற்பதால் உங்கள் மூளையின் செயற்திறன் குன்றி இந்தப் பதிவில் இருப்பதை புரிந்து கொள்ள முடியாமல் இருந்தால் நோன்பு காலம் முடிந்த பின்னராவது இந்தப் பதிவை மீண்டும் படித்துச் சிந்தியுங்கள். -றிஷ்வின் இஸ்மத் 13.04.2023