ரமழான் நோன்பு உடல் நலத்திற்குக் கேடு.

 

நோன்பு (Fasting, Intermittent Fasting) உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா என்று இணையத்தில் தேடினால் நோன்பு நோற்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து நிறையத் தகவல்கள் கிடைக்கும். இந்தத் தகவல்கள் எல்லாம் முஸ்லிம்கள் நோற்கும் ரமழான் நோன்பிற்குப் பொருத்தமானவையா என்று முஸ்லிம்கள் ஆராய்வதில்லை என்பதால் 'ரமழான் நோன்பும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது' என்று நம்பவைக்கப்பட்டு முஸ்லிம்கள் ஏமாற்றப் படுகின்றனர்.


தினமும் 14+ மணித்தியாலங்கள் என்று ஒரு மாத காலத்திற்கு முஸ்லிம்கள் நோற்பது சாதாரண நோன்பு (Fasting, Intermittent Fasting) அல்ல, மாறாக 'வறட்சி நோன்பு' (Dry fasting). தொடர்ச்சியான வறட்சி நோன்பு உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. 


வறட்சி நோன்பிற்கும், சாதாரண நோன்பிற்கும் வித்தியாசம் தெரியாத முஸ்லிம்கள், தாம் ரமழானில் நோற்கும் நோன்பு உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என்று நம்பி ஏமாந்து தமது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கின்றனர். ரமழானின் வறட்சி நோன்பு உடல் நலத்திற்குக் கேடு என்பதற்கு ரமழானின் 15 ஆம் நோன்பு கடந்த பின் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் தாடிகளும், ஹபாயாக்களும் நிரம்பி வழிவதே உறுதியான சான்று ஆகும். சாதாரண காலங்களை விட ரமழான் மாதத்திலேயே அதிக எண்ணிக்கையான முஸ்லிம்கள் மருத்துவ உதவியை நாடுகின்றனர்.


மருத்துவர்கள், உடல்நல ஆர்வலர்கள் பரிந்துரைக்கும் நோன்பு என்பது வறட்சி நோன்பு அல்ல, அது தண்ணீர் அல்லது செறிவு குறைந்த பானங்களை அருந்தும் உணவுத் தவிர்ப்பே ஆகும். தண்ணீர் அல்லது செறிவு (கலோரி) குறைந்த பானங்களை தேவைக்கு ஏற்ப அருந்துவதும், செறிவான பனங்களையும், திரவ, திட உணவுகளை தவிர்ப்பதுமே உடல் நலத்திற்கு உகந்த நோன்பு ஆகும். ஒரு மாத காலத்திற்கு தினமும் (14+ மணித்தியாலங்கள்) நீண்ட நேரம் நீர், பானங்கள் அருந்தாமல் இருந்து உடலை வறட்சியில் போட்டு வருத்துவதை 'உடல் நலத்திற்குச் சிறந்தது' என்று சொல்ல முடியாது.


'நோன்பு (Fasting, Intermittent Fasting) உடல் நலத்திற்கு நல்லது' என்பதை 'ரமழான் நோன்பு (Dry Fasting - வறட்சி நோன்பு) உடல் நலத்திற்கு நல்லது' என்று திரித்துப் பிழையாகப் போதிக்கப்பட்டு முஸ்லிம்கள் ஏமாற்றப் படுகின்றனர். மருத்துவ உதவி தேவைப்படும் முஸ்லிம்கள் கூட ரமழான் நோன்பு தமது நோயைக் குணமாக்கும் என்று குருட்டுத் தனமாக நம்பிக் கொண்டு பகல் முழுவதும் உடலைக் காயப் போடுவதுடன், வழமையாக காலை, பகல் நேரங்களில் உட்கொள்ள வேண்டிய மாத்திரைகளைக் கூட உட்கொள்ளாமல் தவிர்த்து தமது நோயை அதிகரித்துக் கொள்கின்றனர், சிலரது முட்டாள்த்தனம் மரணத்திலும் முடிவதுண்டு. 


1400 வருடங்களுக்கு முன்னர் யாரோ ஒருவர் சொல்லிவிட்டுப் போனதை இன்றைக்கும் கண்மூடித்தனமாக சரியானது என்று அப்படியே ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. 1400 வருடங்களுக்கு முன்னர் முஹம்மது நபி சொன்னதை எப்படியாவது சரியானதாகக் காட்ட வேண்டும் என்பதற்காக நீர், செறிவு குறைந்த பானங்களை அருந்தும் நோன்பு (Fasting, Intermittent Fasting) தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகளை வறட்சி நோன்புடன் (Dry Fasting) இணைத்து வெளியிடுகின்றனர். இஸ்லாமியவாதிகளாலும், முல்லாக்கலாலும், ஆர்வக் கோளாறு தன்னார்வப் பிரச்சாரகர்களாலும் ஏமாற்றப் படுவது முஸ்லிம்களே. 


முஸ்லிம்களே, ரமழான் நோன்பு உடலுக்கு நல்லது என்று கண்மூடித்தனமாக நம்பி ஏமாறாமல், சாதாரண நோன்பிற்கும், வறட்சி நோன்பிற்கும் இடையிலான வேறுபாடுகளையும், அவற்றின் நன்மை தீமைகளையும் தேடித் தெரிந்து கொள்ளுங்கள்.


-றிஷ்வின் இஸ்மத்

 29.03.2023Risks of Dry Fasting

The biggest risk of dry fasting is dehydration. The complications of dehydration can include:

Seizures. When your electrolytes, such as sodium and potassium are out of balance, your body can have trouble sending electrical signals from cell to cell. This can lead to involuntary muscle contractions and a loss of consciousness.

Brain swelling. When you are getting fluids again after being dehydrated, your body sometimes tries to pull too much water back into your cells. Some cells can swell and rupture during this process. If this happens to your brain cells, it can be especially serious.

Heat injury. If you dry fast during strenuous exercise or when you’re very hot, you can develop a heat injury. This can be mild, such as with heat cramps, or severe, such as with heat exhaustion or heat stroke. Heat stroke can be potentially life-threatening.

Kidney failure. If your kidneys are no longer able to remove excess fluids and waste from your body, it can lead to kidney failure, which can be life-threatening.

Low blood volume shock. This life-threatening condition called hypovolemic shock occurs when low blood volume in your body causes a drop in your blood pressure and a drop in the amount of oxygen in your body.

Coma and death. If not treated quickly, severe dehydration can be life-threatening.