உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அபூ மஸ்லமா ரூமி போன்றவர்கள் எவ்வித குற்றச் சாட்டுக்களும் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், சஹ்ரானின் கொலைக் குழுவை வழிநடாத்தி வந்தவர்களும், என்னைக் கொலை செய்வதற்கு முயன்றவர்க்களுமான ஹயாத்து முஹம்மது அஹமது மில்ஹான், கபூர் மாமா என அழைக்கப்படும் ஆதம் லெப்பை முஹம்மது ஷரீப் ஆகியோருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கை காரணமாக சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப் பட்ட ISIS பயங்கரவாத சந்தேகநபரான ரிழா மர்சூக்கும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளான். (செய்திக்கு : https://www.madawalaenews.com/2022/12/21.html ) முஸ்லிம் இளைஞர்களையும், முஸ்லிம் சமூகத்தையும் ISIS இடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று எவ்வித லாபமும் எதிர்பார்க்காமல் பாடுபட்ட டில்ஷான் போன்றவர்கள் வேண்டுமென்றே ISIS ஆதரித்தார்கள் என்று பொய்யாக மாட்டிவிடப்பட்டு வழக்கே முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில் ISIS உடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் சுதந்திரமாக விடுதலையாகிக் கொண்டு இருக்கின்றனர்.
உமையாழ் பெரிந்தேவி என்ற பெயரில் லண்டனில் இருந்து ISIS இற்கு ஆதரவாக எழுதிக் கொண்டு இருந்த அஹமட் லுத்ஃபி ( https://www.facebook.com/Umayaal.Peri ) என்பவனுடன் சேர்ந்து ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கொண்டாடி மகிழ்ந்த ரிழா மர்சூக், அபூ மஸ்லமா ரூமி, மெளலவி சஹ்ரான் ஹாஷிம், மெளலவி நவ்பர் முஹம்மது ஆகியோருடன் இணைந்து செயற்பட்டவன் ஆவான். 2016 ஆம் ஆண்டு பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரெஸ்ஸலஸ் நகரில் ISIS பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 30 பொதுமக்கள் கொல்லப் பட்ட பொழுது அதனை ‘பெல்ஜியன் சொகலட் சுவையோ சுவை’ என்று கூறிக் கொண்டாடி மகிழ்ந்த ஜிஹாதியக் கூட்டணி அது.
சாதாரண முஸ்லிம்களை மதவாதிகளாக மாற்றும் தப்லீக் ஜமாத், இஸ்லாமிய ஆட்சியை இலக்காகக் கொண்ட ஜமாத்தே இஸ்லாமி போன்ற அமைப்புகள் தற்பொழுது புது வீரியத்துடன் செயற்பட ஆரம்பித்து விட்டன. அமைதி மார்க்கத்தைச் சேர்ந்த பிரபல முன்னணி சட்டத்தரணிகள் சஹ்ரானின் மனைவி, நவ்பர் மெளலவி உட்பட ISIS சந்தேக நபர்களுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகி வீரியத்துடனும், விவேகத்துடனும் வாதாடி வருகின்றனர். (செய்திக்கு : https://tinyurl.com/mry8ythw ) இந்நிலையில் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்கள் ஒவ்வொருவராக வெளியில் வந்து கொண்டு இருக்கின்றார்கள். ஜமாத்தே இஸ்லாமி தடையே செய்யப்படவில்லை. இலங்கையில் ISIS ஜிஹாதிகள் செயற்படுகின்றார்கள் என்பது குறித்து தெளிவான தகவல்கள் 2016 ஆம் ஆண்டு முதலே கிடைக்கப் பெற்றும் கூட 2019 ஆம் ஆண்டு பாரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் எவ்வித தடங்களும் இல்லாமல் மேற்கொள்ளப் பட்டன. தற்பொழுது விருத்தியடைந்து வரும் ஆபயகரமான நிலையானது உடனடியாக இல்லாவிட்டாலும், நீண்ட காலத்தின் பின்னராவது இன்னொரு பாரிய ஆபத்தில் தான் சென்று முடியும். அதுவரை இலங்கை அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பும் இன்னொரு ஆழ்ந்த நித்திரை செய்து கொண்டு இருக்கப் போகின்றனவா?
-றிஷ்வின் இஸ்மத்
17.12.2022