இஸ்லாமியப் பயங்கரவாதிகளைக் காப்பாற்றக் கடுமையாகப் பாடுபடும் முஸ்லிம் சட்டத்தரணிகள்!


சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சிரேஷ்ட சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன், சட்டத்தரணிகள் வஸீமுல் அக்ரம், சஜாத், நதீஹா அப்பாஸ் ஆகிய முஸ்லிம் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் மிகத் திறமையாக வாதாடி உயிர்த்த ஞாயிறு தினத்தில் 260 இற்கும் மேற்பட்டவர்களை கொலை செய்த தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்பு பட்ட இஸ்லாமியப் பயங்கரவாத சந்தேக நபர்களை காப்பாற்ற கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


மெளலவி சஹ்ரான் ஹாஷீம் தலைமையிலான ஜிஹாதிகள் மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று முஸ்லிம் சமூகம் சார்பில் மீண்டும் மீண்டும் பல தடவைகள் கூறப்பட்டு வந்த நிலையில், இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் இஸ்லாமியப் பயங்கரவாத சந்தேக நபர்களை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் திறமையாக வாதிடி கடுமையாகப் பாடு படுவது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.


சிரேஷ்ட சட்டத்தரணியான ருஷ்தி ஹபீப் அவர்கள் இரண்டாயிரம் ரூபாய், மூவாயிரம் ரூபாய்க்காக நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடிய சட்டத்தரணி அல்ல, மாறாக நல்லதொரு தொகைக் கட்டணம் அறவிடுகின்ற ஒரு சட்டத்தரணி ஆவார். இந்நிலையில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் உட்பட முஸ்லிம் சட்டத்தரணிகள் ஏற்கனவே தற்கொலைத் தாக்குதளை நடாத்தி மற்றவர்களையும் கொன்று கொண்டு செத்துத் தொலைந்து விட்ட சஹ்ரான் மெளலவி போன்ற ஒரு பயங்கரவாதியின் மனைவி உட்பட பயங்கரவாத சந்தேக நபர்களுக்காக ஆஜராகின்றனர் என்றால் இவர்களுக்கான கட்டணங்களை யார் செலுத்துகின்றனர், பணம் எங்கிருந்து வருகின்றது என்கின்ற கேள்விகள் மட்டுமல்லாது இன்னொரு கேள்வியும் எழுகின்றது. மெளலவி சஹ்ரான் தலைமையிலான ஜிஹாதிய பயங்கரவாதிகள், 'ஜமாத்தே இஸ்லாமியின் அல்ஹஸனாத் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஃபத்வாவுக்கு அமைய இஸ்லாத்தின் உன்னத கடமைகளில் ஒன்றை நிறைவேற்றி இருக்கின்றார்கள்' என்ற அடிப்படையில் இஸ்லாமிய மதப் பற்றும், அல்லாஹ்வின் மீது இறையச்சமும் கொண்ட முஸ்லிம் சட்டத்தரணிகள் சஹ்ரான் மெளலவியின் ஜிஹாதிய சகாக்களுக்காக அல்லாஹ்வின் திருப்தி நாடியும், மரணத்தின் பின்னர் சுவர்க்கம் கிடைக்கும் என்று நம்பியும் இலவசமாக ஆஜராகி திறமையாக வாதாடுகின்றார்களா என்பதே மற்றைய கேள்வி ஆகும்.


மேற்படி விடயங்கள் ஊடக செய்தியை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் முஸ்லிம் சட்டத்தரணிகள் இஸ்லாமியப் பயங்கரவாத சந்தேக நபர்கள் சார்பாக ஆஜராகி மிகத் திறமையாக வாதாடுவது தொடர்பான ஊடகச் செய்தியை வாசிக்க : https://www.jaffnamuslim.com/2022/09/blog-post_27.html


குறிப்பு : முஸ்லிம் சட்டத்தரணிகள் வாதாடிக் காப்பாற்றப் பாடுபடும் இஸ்லாமிய பயங்கரவாத சந்தேக நபர்களாக மேற்படி செய்தியில் பெயர் குறிப்பிடப் பட்டிருப்பவர்களில் அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ் மற்றும் கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை ஆகியோர், இஸ்லாத்தை விட்டு வெளியேறியதற்காக என்னைக் கொலை செய்ய சஹ்ரான் மெளலவியால் அனுப்பிவைக்கப்பட்ட நால்வரில் இருவர் என்று புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தெரிவிக்கின்றன. அபூ செய்த் எனும் நெளபர் மெளலவி அல்லது மொஹம்மட் இப்ராஹீம் நெளபர் இடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், நான் ஹவலொக்ஸ் ரக்பி மைதானத்திற்கு பயிற்சிகளுக்காக சென்ற சந்தர்ப்பங்களில் என்னைக் கொலை செய்வதற்கு சில தடவைகள் முயற்சித்த விடயம் தெரிய வந்திருந்தது.


-றிஷ்வின் இஸ்மத்
09.09.2022