பள்ளிவாசல்களில் மட்டும் இத்தனை குண்டு வெடிப்புகள் - காரணம் யார்?

                                       

தமது மத வணக்கஸ்தலத்திலேயே குண்டு வைக்கும், கொலைகள் செய்துகொள்ளும் ஒரே ஒரு முன்னணி மதமாக தற்காலத்தில் அமைதி மார்க்கம் மட்டமே உள்ளது. நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானின் தலைநகரில் பள்ளிவாசலில் குண்டு வெடித்ததில் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு முன்னரும் ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டு வெடிக்க வைக்கப் பட்டிருந்தது, பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த மதகுரு ஒருவர் உட்பட பலர் அதிலே கொல்லப்பட்டு இருந்தனர்.


சில வருடங்களுக்கு முன்னர் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிவாசல்களில் வாடிக்கையாகக் குண்டு வெடிக்கும் கொடூரம் பாகிஸ்தானில் அரங்கேறி வந்தது. அமைதி மார்க்கத்தைப் பின்பற்றும் ஒரு தரப்பினர், அதே மதத்தைச் சேர்ந்த இன்னொரு தரப்பினரின் பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தும் வழக்கம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் மட்டுமல்லாமல் இலங்கை, இந்தியாவில் கூட அரங்கேற்றப் பட்டுள்ளது. இலங்கையில் ஒரு தரப்பார் இன்னொரு தரப்பாரின் பள்ளிவாசலுக்குள் புகுந்து தாக்கி இருவரைக் கொலை செய்தமை தொடர்பான செய்தி இது : https://www.islamkalvi.com/?p=3417 சவூதி அரேபியாவில் உள்ள கஃபா எனும் அமைதி மார்க்கத்தின் மிக முக்கிய வணக்கஸ்தலம் பல தடவைகள் அமைதி மார்க்கத்தைப் பின்பற்றுகின்றவர்களாலேயே தாக்குதலுக்கு உள்ளாகி கொலைக் களமாக மாற்றப்பட்டு இருக்கின்றது.

சொந்த மதத்திற்குள்ளேயே ஒரு தரப்பார் இன்னொரு தரப்பாரைக் கொலை செய்வதாக இருக்கட்டும், அல்லது தமது மதத்தைச் சாராத மக்களை கொலை செய்வதாக இருக்கட்டும், இவை இரண்டுமே அண்மைக் காலத்தில் அமைதி மார்க்கத்திற்குள் நுழைந்த பித்அத் (புதுமைகள்) அல்ல, மாறாக 1400 வருடங்களுக்கு முன் தன்னை இறைதூதர் என்று சொல்லி மக்களை ஏமாற்றிய அந்த மனிதரும், அவரது சகாக்களும் வழிகாட்டி விட்டுப் போன வழிமுறையைப் பின்பற்றித்தான் இன்றைக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள் உலகெங்கும் நிகழ்த்தப் படுகின்றன. இஸ்லாமியவாதிகள் மேற்கொள்ளும் பயங்கரவாத செயற்பாடுகளில் சாதாரண முஸ்லிம் மனிதர்களுக்கு பங்கில்லை என்றாலும், பாதிக்கப் படுகின்றவர்களில் அதிகமானவர்களாக அவர்களே உள்ளனர்.

அமைதி மார்க்கத்தைப் பின்பற்றும் மத வெறியர்கள் – இஸ்லாமியவாதிகள் / ஜிஹாதிகள் - ஒன்றில் தமது மதத்தைப் பின்பற்றாத ஏனைய மனிதர்களைக் கொலை செய்கின்றார்கள், அல்லது கொலை செய்வதற்குப் போதிய அளவில் ஏனைய மனிதர்கள் கிடைக்காத பொழுது தாமே இரண்டு மூன்று என்று பிரிவுகளாகப் பிரிந்து தமக்குள்ளேயே வெட்டிக் குத்திக் குண்டுகள் வைத்துக் கொலைகள் செய்து எதோ ஒரு வகையில் தமது மத ஸ்தாபகரும், அவரது சகாக்களும் வழிகாட்டிவிட்டுப் போனதை அரங்கேற்றிக் கொள்கின்றார்கள். அமைதி மார்க்கத்தின் வரலாற்றைப் படித்தால், இந்த விடயம் உண்மை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அமைதி மார்க்கத்தின் ஸ்தாபகரும், அவரது சகாக்களும் தமது அமைதி மார்க்கத்தைச் சாராதவர்களை பத்ரு, உஹது, கைபர், பனூ குரைஸா, பனூ நதீர் என்று போர்கள், யுத்தங்கள் செய்து கொலை செய்தார்கள். அமைதி மார்க்கத்தைப் பின்பற்றாதவர்களை இப்படியாகக் கொலை செய்ததாலும், வாள் முனையில் மதமாற்றம் செய்ததாலும் அரேபிய தீபகற்பம் முழுவதும் அமைதி மார்க்கத்தின் கீழ் வந்து விட்டதால் அவசரத்திற்கு கொலை செய்வதற்கு வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள் கிடைக்காத காரணத்தாலோ என்னவோ, அமைதி மார்க்கத்தின் ஸ்தாபகரின் சகாக்கள் (சஹாபாக்கள்) தாமே பிரிவுகளாகப் பிரிந்து ஜமல், சிஃப்பீன், கர்பலா, ஹர்ரா, ஹுரூவ்புர் ரித்தா என்று தமக்கிடையே போர்கள், யுத்தங்கள் செய்து ஆளை ஆள் வெட்டிக் குத்திக் கொலைகள் செய்து கொண்டார்கள்.


அமைதி மார்க்கத்தை தீவிரமாகப் பின்பற்றுகின்றவர்களைப் பொறுத்தவரை ஒன்றில் அடுத்தவர்களைக் கொலை செய்கின்றார்கள், அல்லது தமக்கிடையேயே கொலைகள் செய்து கொள்கின்றார்கள். தமக்கிடையே கொலைகள் செய்துகொள்ள அவர்கள் அதிகம் விரும்பித் தேர்ந்தெடுக்கும் இடமாக பள்ளிவாசல்கள் உள்ளன.


அமைதி மார்க்கத்தைப் பின்பற்றுகின்றவர்களுக்கு ஒரே ஒரு சவால் : உலகில் 4000 இற்கும் அதிகமான மதங்கள் உள்ளன என்று தகவல்கள் சொல்கின்றன. இந்த நூற்றாண்டில் தமது வணக்கஸ்தலங்களில் தாமே குண்டு வைத்த, தாமே தாக்குதல் நடத்திய செயல்களில் அமைதி மார்க்கம் தவிர வேறு எந்த மதத்தவர்களாவது ஈடுபட்டு இருக்கின்றார்களா? அப்படியானால் எத்தனை தடவைகள்? அமைதி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வருடம் மட்டும் இதுவரை தமது பள்ளிவாசல்களில் நடத்திய குண்டுத் தாக்குதல்கள் எத்தனை? முடிந்தால் அமைதி மார்க்கத்தினர் ஒரு வருடத்தில் பள்ளிவாசல்களில் நடத்தி இருக்கும் குண்டுத் தாக்குதல்களை விட வேறொரு மதத்தினர் இந்த நூற்றாண்டில் தமது வணக்கஸ்தலங்களில் நடத்திய தாக்குதல்கள் அதிகம் என்றாவது உங்களால் தரவுகளுடன் நிரூபிக்க முடியுமா?

முடிவு : அமைதி மார்க்கத்தினர் ஒரு வருடத்தில் தமது பள்ளிவாசல்களில் நடத்தும் குண்டுவெடிப்புகளின் எண்ணிக்கை அளவுக்குக் கூட வேறு மதத்தவர்கள் தமது வணக்கஸ்தலங்களில் இந்த நூற்றாண்டில் தாக்குதல்கள் நடத்தியது இல்லை. ஆகவே கோளாறு அமைதி மார்க்கத்திலேயே உள்ளது. யூத சதி, கிறிஸ்தவ சதி, கம்யூனிஸ சதி, நாத்திக சதி, மொஸாட் சதி என்று யார் யாரையோ நோக்கிக் கை காட்டுவதை விடுத்து கோளாறு தமது அமைதி மார்க்கத்திலேயே உள்ளது என்பதை அதனை கண்மூடிப் பின்பற்றுபவர்கள் நேர்மையாகச் சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாகவே எல்லா மதங்களிலும் எதோ ஒரு வகையில் வன்முறை இருந்தாலும் நிகழ்காலத்தில் அமைதி மார்க்கத்தின் தீவிர விசுவாசிகள் போன்று வேறு எந்த மதத்தவரும் வன்முறைகளை அரங்கேற்றுவதில்லை.
அமைதி மார்க்கம் உண்மையில் அமைதி மார்க்கம் அல்ல, அது இன்றைய உலகின் முதல் தர வன்முறையினதும், பயங்கரவாதத்தினதும் மார்க்கமாக உள்ளது.

-றிஷ்வின் இஸ்மத்
19.08.2022