இஸ்லாமிய நாட்காட்டி - காலத்தைக் கணிக்கத் தெரியாமல் தடுமாறும் அல்லாஹ்!


 பெருநாளைக் கொண்டாடுவதற்காக நேற்று அரபு நாடுகளில் தேடினார்கள், கிடைக்கவில்லை, இன்று இலங்கை, இந்தியா, பாகிஸ்தானில் தேடப் போகின்றார்கள், கிடைக்குமா என்று தெரியவில்லை – தலைப்பிறை.


விரும்பினாலும்
, விரும்பாவிட்டாலும் உலகில் வெவ்வேறான மூன்று நாட்களில் பெருநாள் கொண்டாடப் போகின்றார்கள், அவ்வளவு ஏன், ஒரே வீட்டிற்குள்ளேயே இரண்டு அல்லது மூன்று வெவ்வேறான நாட்களில் பெருநாள் கொண்டாடப் படுவது கூட இஸ்லாம் மத்தைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் நடக்கும். உலகின் சில பகுதி முஸ்லிம்களுடன் சேர்ந்து நம் நாடுகளில் இருக்கும் சில இஸ்லாமிய மதப் பிரிவினர் இன்றைக்கே பெருநாள் கொண்டாடி விட்டார்கள், அரபு நாடுகளில் நாளை பெருநாள் கொண்டாடுவார்கள், நமது நாடுகளில் இன்று மாலை தலைப்பிறை தென்படாவிட்டால் நாளை மறுநாள் தான் பெருநாள் கொண்டாடப் படும். நாளைக்கு எத்தனையாம் திகதி என்று யாருக்கும் தெரியாத நாட்காட்டியாகவே இஸ்லாமிய நாட்காட்டி அமைந்துள்ளது என்றால் எவ்வளவு பெரிய அறிவாளிகளால் அந்த நாட்காட்டி உருவாக்கப் பட்டிருக்கும் என்று ஊகித்துக் கொள்ளுங்கள்.  நாளைக்கு எத்தனையாம் திகதி என்று கூடச் சரியாகத் தெரியாமல், எதையுமே சரியாகத் திட்டமிட லாயக்கற்ற நாட்காட்டியைக் கொண்ட ஜாஹிலியத்தில், அறியாமையில், அந்தகாரத்தில் ஒரு பெருமதம் இந்த உலகத்தில் இருக்கின்றது என்றால் அது இஸ்லாம் மதம் மட்டும் தான் என்று இலகுவாக சொல்லிவிடலாம். இஸ்லாத்தைத் தவிர வேறு எந்தப் பெருமதமும் தனது முக்கிய பண்டிகையை மறுநாள் கொண்டாட முடியுமா, முடியாதா என்று கூடத் தெரியாமல் முதல் நாள் மாலை வரை மயக்கத்தில் இருப்பதில்லை.


பூமியின் சுழற்சி
, சூரியனைச் சுற்றி பூமி சுழலும் பாதை, அதற்கு எடுக்கும் காலம் என்று பல்வேறு தகவல்களை நுணுக்கமாகக் கணித்து கிரெகோரியன் நாட்காட்டியை உருவாக்கி, மேம்படுத்து, பாவனைக்கு விட்டு இருக்கின்றார்கள் அறிவுள்ள மனிதர்கள். ஜூலியஸ் சீஸரால் சுமார் 2067 வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டு 440 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1582 இல் பதின்மூன்றாம் கிரெகோரி எனும் கிறிஸ்தவ பாப்பரசரால் அமைக்கப்பட்ட குழுவினரால் மேம்படுத்தப் பட்டு இன்று வரை பாவனையில் உள்ள 12 மாதங்களைக் கொண்ட நாட்காட்டியே கிரெகோரியன் நாட்காட்டி ஆகும். அதன் பன்னிரண்டு மாதங்களில் 7 மாதங்கள் 31 நாட்களைக் கொண்டனவாகவும், 4 மாதங்கள் 30 நாட்களைக் கொண்டதாகவும், இரண்டாவது மாதமான பெப்ரவரி மாதம் மட்டும் சாதரண வருடங்களில் 28 நாட்களைக் கொண்டதாகவும், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நாள் அதிகமாக வரும் படியாகவும், அப்படி அதிகமாக வரும் அந்த ஒரு நாள் நூறாவது வருடங்களில் முதல் மூன்று நூறாவது வருடங்களில் சேர்க்கப்படாமலும், நான்காவது நூறாவது வருடத்தில் சேர்க்கப்படும் படியாகவும் கச்சிதமாகக் கணித்து நாட்காட்டியை வடிவமைத்து  அமைத்து இருக்கின்றார்கள்.


Every year that is exactly divisible by four is a leap year, except for years that are exactly divisible by 100, but these centurial years are leap years if they are exactly divisible by 400. For example, the years 1700, 1800, and 1900 are not leap years, but the years 1600 and 2000 are.பூமி ஒருதடவை தன்னைத் தானே சுற்றி வருவது ஒரு நாள் என்று அழைக்கப்படும். ஒரு நாள் என்பது உண்மையில் 24 மணிநேரங்கள் அல்ல
, மாறாக 23 மணித்தியாலங்கள், 56 நிமிடங்கள் 4.091 வினாடிகள் என்று நுணுக்கமாகக் கணித்து இருக்கின்றார்கள், அதே போன்று பூமி தனது அச்சில் சூரியனை ஒரு தடவை சுற்றி வருவதற்கு, அதாவது ஒரு வருடம் என்பது
365.256363004 நாட்கள் என்று அச்சொட்டாகக் கணித்து இருக்கின்றார்கள். மேற்படி கனகச்சிதமான கணிப்புக்களே கிரெகோரியன் நாட்காட்டியை மனிதனின் அன்றாட வாழ்க்கைப் பிரயோகத்திற்கு உகந்ததாக ஆக்கியுள்ளன.


உலகின் பருவ மாற்றங்கள் நிகழ்வது
, மரங்களின் இலையுதிர்தல், தளிர்த்தல், மலர்தல், காய்த்தல் மேலும் பறவைகள், மிருகங்களின் இடம் பெயர்வு, இனப்பெருக்கம் போன்ற வாழ்வியல் மாற்றங்கள் போன்ற குறித்த காலங்களில் நடக்கும் நிகழ்வுகள் கிரெகோரியன் நாட்காட்டியின் படி உரிய மாதங்களில் சரியாகவே நடந்து விடுகின்றன. உரிய காலத்தில் நடப்பவற்றில் ஏதாவது ஒன்று மாறி நடக்கும் பொழுதுதான் அது ஆச்சரியமாகப் பார்க்கப்படும், அசாதாரண விடயமாகக் கருத்தப்பட்டு செய்தியாக வெளியாகும், மற்றப்படி எல்லாமே இயல்பாகவே நடந்து விடுகின்றன. மேலே குறிப்பிடப் பட்டுள்ளவற்றில் ஒன்றிற்கு உதாரணம் சொல்வதென்றால் மேற்கத்தேய நாடுகளில் டிசம்பர் மாதம் குளிர்காலமாகவே அமைந்திருக்கும், எக்காரணம் கொண்டும் டிசம்பர் மாதமும், கோடைகாலமும் இணைவதில்லை.
 

கிறிஸ்துவுக்கு முன்னர் வாழ்ந்த ஜூலியஸ் சிஸரால் அறிமுகம் செய்யப்பட்ட நாட்காட்டியை பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகோரி நிபுணர்கள் குழுவொன்றை அமைத்து மேலும் மேம்படுத்தினாரே தவிர அந்த நாட்காட்டியை “இது கர்த்தரிடமிருந்து வந்த நாட்காட்டி, இதில் எவ்வித தவறுமில்லை” என்று சொன்னதில்லை. அந்த நாட்காட்டி உலகின் இயக்கத்திற்கும்
, மனித வாழ்க்கைக்கும் மிகவும் பொருத்தமான ஒன்றாகக் காணப் படுகின்றது. ஆனால் ‘உலகத்தைப் படைத்த அல்லாஹ், உலகத்தைப் படைத்த பொழுது இருந்தது போன்று நாட்களும், மாதங்களும் ஆகிவிட்டன’ என்று சொல்லி முஹம்மது நபியால் மாற்றி அமைக்கப்பட்ட நாட்காட்டி எதற்குமே லாயக்கற்ற ஒன்றாக காணப்படுகின்றது. இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது ஆவது மாதம் ரமழான் ஆகும், இந்த மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்க வேண்டும். ரமழான் என்பது ‘சுட்டெரிக்கும் வெப்பம்’ என்ற அர்த்தத்தைக் கொடுக்கும், அனால் அல்லாஹ்வின் தூதர் என்று சொல்லிக்கொண்ட முஹம்மது நபி, அரபிகள் பயன்படுத்தி வாய்ந்த நாட்காட்டியை இஸ்லாமிய நாட்காட்டியாக மாற்றியமைத்த பின்னர் ‘சுட்டெரிக்கும் வெப்பம்’ என்ற அர்த்தம் கொண்ட ரமழான் மாதம் குளிர்காலத்திலும் கூட வர ஆரம்பித்து விட்டது. இஸ்லாமிய நாட்காட்டி எந்த அளவு குழப்பமானது என்றால் இஸ்லாமிய மதத்தின் (பாலைவனத்தின்) முக்கியமான பழமான பேரித்தம் பழம் கூட இஸ்லாமிய நாட்காட்டியின் படி குறித்த ஒரு மாதத்தில் கனிப்பதில்லை, ஆனால் அந்தப் பழங்கள் கிரெகோரியன் நாட்காட்டியின் பொருந்திப் போகும் வெப்ப காலத்தில் சரியாகவே கனிக்கின்றன.


பூமி ஒருதடவை தன்னைத் தானே சுற்றி வர 23 மணித்தியாலங்கள், 56 நிமிடங்கள் 4.091 வினாடிகள் என்றும், ஒரு வருடம் என்பது
365.256363004 நாட்கள் என்றும் அறிவியல் பூர்வமாக அறியப்பட்டுள்ள நிலையில், பூமி தட்டையானது என்றும், சூரியன் இரவில் இறைவனின் சிம்மாசனத்திற்குக் கீழே சென்று தலையை நிலத்தில் வைத்து வணங்கி மறு நாள் காலையில் உதிப்பதற்கு அனுமதி கேட்கும் என்றும் போதித்த, எவ்வித அடிப்படைக் கல்வி அறிவுமே இல்லாத ஒருவரை இறைதூதர் என்று குருட்டுத்தனமாக  பின்பற்றினால் என்ன நடக்கும் என்பதற்கு ஹிஜ்ரி நாட்காட்டியும், இஸ்லாமியப் பெருநாட்கள் கொண்டாடப் படும் அழகும் சிறிய சாட்சிகள் மட்டுமே. காலக் கணிப்பில் மட்டுமல்ல, நேரக் கணிப்பிலும் கூட முஹம்மது நபியின் (அல்லாஹ்வின்) அறியாமை வெளிப்பாட்டு நிற்கின்றது. குளிர் பிரதேசங்கள், அவற்றின் காலநிலை மாற்றங்கள், துருவப் பிரதேசங்கள் பற்றியெல்லாம் எவ்வித அறிவுமே இல்லாதவராக முஹம்மது நபிக்கு இறை செய்திகளை (வஹி) அனுப்பிய அல்லாஹ் இருந்திருக்க வேண்டும், அதாவது அன்றைக்கு பாலைவனத்தில் வாழ்ந்த முஹம்மது நபிக்கு என்ன அறிவு இருந்ததோ, அதே அறிவுதான் அல்லாஹ்வுக்கும் இருந்திருக்கின்றது. குளிர் நாடுகளின் கால நிலை மாற்றம், துருவப் பிரதேசங்களின் பகல், இரவு வேறுபாடு பற்றிய எந்த அறிவும் இல்லாமலே நோன்பு நோற்பது உட்பட இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகலுக்கான நேர அளவுகள் முஹம்மது நபியில் வரையறுக்கப் பட்டுள்ளன.

முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பற்றி சுயமாக சிந்திக்க ஆரம்பித்தால் இஸ்லாம் கரைந்து காணாமல் போய்விடும்.


-றிஷ்வின் இஸ்மத்
 
01.05.2022