சோழியன் குடுமி சும்மா ஆடாது - இஸ்லாமியவாதிகளின் நரித் தந்திரம்

இஸ்லாமியவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று பல முறை எச்சரித்து இருக்கின்றேன், அதனை நிரூபிக்கும் படியாக மீண்டும் ஒரு நிகழ்வு கோயம்புத்தூரில் இன்று நடந்தேறி இருக்கின்றது. பாதிக்கப்பட்டவர் என்று காட்டி வருகின்ற அனுதாபத்தைப் பயன்படுத்தி (playing victim card), அல்லது ‘சிறுபான்மையினர்’ என்கின்ற Card ஐப் பயன்படுத்தி தமது மத அடிப்படைவாதத்தைத் திணிப்பதில், மத இலக்குகளை நிலை நிறுத்துவதில் இவர்கள் (இஸ்லாமியவாதிகள்) மிகத் திறமையானவர்கள், தந்திரமானவர்கள்.

*இஸ்லாமியவாதிகள் வேறு
, முஸ்லிம்கள் (இஸ்லாமியர்கள்) வேறு, தயவு செய்து குழப்பிக் கொள்ள வேண்டாம். தெளிவு தேவைப்படுவோர் இந்த ஆக்கத்தை பூரணமாக வாசிக்கலாம் : https://tinyurl.com/ytsccpyd

அண்மையில் கர்நாடகாவில் ஹிஜாப் தடை தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்ட பொழுது பல முன்னாள் முஸ்லிம்கள் உட்பட நாத்தீகர்கள்
, இடதுசாரிகள், முற்போக்காளர்கள் என்று இஸ்லாம் சாராத பல தரப்பாரும் ‘ஹிஜாப் பிற்போக்கானது தான், என்றாலும் அதனை சட்டத்தின் மூலம் தடை செய்வதால் மாணவிகளின் கல்வி பாதிக்கப் படுகின்றது’ என்ற அடிப்படையில் ஹிஜாப் தடைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தார்கள். குறிப்பாக இடதுசாரிகள், முற்போக்குச் சக்திகளின் இந்த நிலைப்பாட்டை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இஸ்லாமியவாதிகள், ‘மாணவிகளின் கல்வி உரிமைக்காகப் போராடுகின்றோம், ஹிஜாப் எமது உரிமை, எமக்கு ஆதரவு வழங்குங்கள்’ என்று புனிதப் பாசாங்கு (அல் தக்கியா) செய்து, அந்தப் போராட்டத்தில் ஜிஹாபிற்குப் பதிலாக பல இடங்களில் புர்காவைக் கொண்டு வந்து தந்திரமாக நுழைத்துச் சந்தைப் படுத்தினார்கள் என்பதை உங்களில் எத்தனை பேர் நுணுக்கமாக அவதானித்தீர்கள் என்று தெரியவில்லை. நான் சொல்வது சந்தேகமாக இருந்தால் ஹிஜாப் போராட்டம் தொடர்பான வீடியோக்களை, புகைப்படங்களை மீண்டும் ஒரு தடவை நுணுக்கமாகப் பாருங்கள், தெரிந்து கொள்வீர்கள்.

இஸ்லாமியவாதிகளின் இந்த நரித் தந்திரம் ஒரு இடத்துடன், ஒரு சம்பவத்துடன் மட்டுப் படுத்தப் பட்ட ஒன்றல்ல. கூடாரத்திற்குள் நுழைந்த ஒட்டகத்தின் கதை போல சந்தப்பம் கிடைக்கின்ற எல்லா இடங்களிலும் தமது மத அடிப்படைவாதத்தைத் திணிப்பதற்கு அவர்கள் ஒரு போதும் பின் நிற்பதில்லை. ஜல்லிக் கட்டுப் போராட்டத்தை எடுத்துக் கொண்டாலும் சரி
, NRC, CAA போராட்டங்களை எடுத்துக் கொண்டாலும் சரி, மக்கள் அனைவரும் போராட்டத்தில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் சந்தடி சாக்கில் தமது மதத்தை சந்தைப் படுத்தும் காரியத்தில் கண்ணாயிருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். அதன் பின்னணியில் இஸ்லாமியவாதிகளின் திட்டமிட்ட ஒருங்கிணைப்பு நிச்சயமாக இருக்கும் என்பதை உங்களில் எத்தனை பேர் புரிந்து இருக்கின்றீர்கள்?

மேலும் டெல்லியின் நிர்பயா வன்புணர்வுக் கொலையாகட்டும்
, பொள்ளாச்சிப் பாலியல் வன்புணர்வுச் சுரண்டல் கொடுமைகள் ஆகட்டும், இலங்கையின் புங்குடுதீவு மாணவி வித்யா வன்புணர்வுப் படுகொலை ஆகட்டும், இன்னும் இது போன்ற நாடே கொந்தளித்து உணர்ச்சிவசப்பட்டு நிற்கும் கொடுமைகள் ஆகட்டும், சந்தர்ப்பத்தைப் பார்த்து மக்களின் உணர்ச்சி வசப்பட்ட மனநிலையைப் பயன்படுத்தி ‘இஸ்லாமிய ஷரியா சட்டம்தான் இந்தப் பிரச்சினகளுக்குச் சரியான தீர்வு’ என்று நாசுக்காக வாழைப்பழத்தில் நச்சூசி ஏற்றுவது போன்று இஸ்லாம் மதத்தின் மனித விரோத சட்டங்களை சந்தைப் படுத்த முனைவதைக் கண்டு இருப்பீர்கள்.

அந்த அடிப்படையில் ஏப்ரல் முதலாம் திகதியான இன்று, முட்டாள்கள் தினத்தில் இஸ்லாமியவாதிகள் ‘மதச்சார்பின்மை காக்க’ என்று கோயம்புத்தூரில் ஒரு மாநாடு போட்டு இந்திய நாட்டையே முட்டாள் ஆக்க முயற்சி செய்து இருப்பதைக் காணலாம். ‘மதச்சார்பின்மை காக்க மாபெரும் மாநாடு’ என்று மேடை போட்டு இஸ்லாத்தின் தீண்டாமைத் திரையான ஹிஜாபிற்கு மட்டுமின்றி இஸ்லாத்தின் கொடூர ஷரியத்திற்கும் ஆதரவு தேடி இருக்கின்றார்கள்.


மதச்சார்பின்மை (செகுலரிசம்) என்பது எந்த ஒரு மதத்தையும் சாராமல்
இருப்பதே தவிர, எல்லா மதக் குப்பைகளையும், எல்லா மதக் கொடுமைகளையும் எல்லோரும் பரஸ்பரம் ஏற்று அங்கீகரித்துக் கொண்டு சமாளித்துக் கொண்டு போவது அல்லவே. மனிதனை உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பிரிக்கும் சாதியக் கொடுமை, கணவனின் சிதையில் மனைவி விழுந்து எரிந்து உயிரை மாய்க்கும் உடன்கட்டை ஏறும் கொடுமை, திருட்டுக்குக் கையை வெட்டும் ஷரியாக் கொடுமை, மதத்தை ஏற்காதவனிடம் கப்பம் வாங்கும் ஜிஸ்யாக் கொடுமை, தனது மதத்தை ஏற்காதவனை காபிர் என்று சொல்லிக் கண்ட இடத்தில் வெட்டிக் கொலை செய்யும் ஜிஹாத் கொடுமை, திருமண இரவில் கன்னியாக இல்லாத பெண்ணைக் கொலை செய்யும் கன்னிப் பரிசோதனைக் கொடுமை என்று மதங்களில் உள்ள கொடுமைகளை, பிற்போக்குத்தங்களை, பயங்கரவாதங்களை எல்லோரும் சேர்ந்து அங்கீகரித்து, அனுசரித்துப் போவதற்குப் பெயர் ‘மதச் சார்பின்ன்மை’ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


முஸ்லிம் மாணவிகளின் கல்வி உரிமை இல்லாமல் போய்விடக் கூடாது என்ற நல்ல நோக்கத்துடன் செயற்படுபவர்களினால் ஏற்படுத்தப் பட்டுள்ள ஹிஜாப் அணியும் உரிமைக்கு ஆதரவான சிந்தனைப் போக்கை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இஸ்லாமிய வாதிகள், மக்களை முட்டளாக்குவதற்கு வசதியாக ‘மதச்சார்பின்மை மாநாடு
என்று மேடையைப் போட்டு ‘ஷரியத்’ ஐ சந்தைப் படுத்தி இருப்பதைப் பாருங்கள். இன்னும் எத்தனை காலம் தான் இஸ்லாமியவாதிகளின் அல் தக்கியாவிற்கு (புனிதப் பாசாங்கிற்கு) ஏமாறப் போகின்றீர்கள்?

ஹிஜாப் ஒரு தீண்டாமைத் திரை, பெண்களுக்கு எதிரானது என்பதில் சந்தேகமில்லை :
https://tinyurl.com/36apb5d6  


குறிப்பு : இலங்கையில்
, இந்தியாவில் ‘முஸ்லிம் மக்கள்’ தான் சிறுபான்மையினரே தவிர, இஸ்லாம் என்கின்ற மதம் சிறுபான்மை அல்ல, அது உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய மதம் ஆகும், இன்னும் சில வருடங்களில் உலகத்தின் முதலாவது மிகப்பெரிய மதமாக அது மாறப் போகின்றது என்று புள்ளிவிபரக் கணிப்புகள் அச்சமூட்டுகின்றன. மக்கள் வேறு, மதம் வேறு, வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள்.