தனக்கு இறை செய்திகள் வருவதாகவும், தானே தான் முழு மனித சமூகத்திற்கும் வழிகாட்டுவதற்காக இறைவனால் தெரிவு செய்யப்பட விசேட நபர் (இறைதூதர்) என்றும் முஹம்மது நபி தனது நாற்பதாவது வயதில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். அன்று முஹம்மது நபி சொன்ன எவ்வித ஆதாரமும் இல்லாத வெற்று வார்த்தைகளை மட்டும் நம்பியே இஸ்லாம் என்ற மதம் கட்டமைக்கப் பட்டுள்ளது.
திரைப்படங்கள், கதைகள், நாவல்கள், கார்ட்டூன்கள் போன்ற கற்பனைகள் வெற்றிகரமாக மக்களிடம் செல்வதற்கு
அவற்றிலே முக்கிய கதாநாயக பாத்திரம் மட்டும் இருப்பதில்லை,
ஒரு வில்லத்தனமான பாத்திரமும் படைக்கப் பட்டிருக்கும். அந்த
வகையில் பல மதங்களிலும் கடவுளின் எதிரியாக பல்வேறு விதமான வில்லத்தனமாக
கதாபாத்திரங்கள் கற்பனை செய்யப்பட்டு இருக்கும். முஹம்மது நபியின் வெற்று
வார்த்தைகளை நம்பி உருவான இஸ்லாம் மதமும் இந்த வில்லத்தனமான கற்பனைப் பாத்திரத்திற்கு விதி விலக்கு அல்ல. அந்த வகையில்
கிறிஸ்தவத்தில் இருக்கும் பிசாசு அல்லது சாத்தான் என்கின்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தை
முஹம்மது நபி அவர்கள் பிரதி பண்ணி 'ஷைத்தான்' என்று அரபுமயப் படுத்தி இஸ்லாம் மதத்தின் வில்லத்தனமான
கற்பனைக் கதாபாத்திரமாக அறிமுகம் செய்து வைத்திருக்கின்றார்.
இந்த ஷைத்தான் பற்றி முஹம்மது நபி அவர்களே கூறுவதை கேளுங்கள்.
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْجَرَسُ مَزَامِيرُ الشَّيْطَانِ " .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒலியெழுப்பும் மணி, ஷைத்தானின்
இசைக் கருவியாகும்.”
(சஹீஹுல் முஸ்லிம் : 4295)
முஹம்மது நபியுடன் இறைவன் எப்படி பேசுகின்றார், அல்லது முஹம்மது நபிக்கு இறைவனின் செய்திகள், கட்டளைகள்
எவ்வாறு வருகின்றன என்பது பற்றி முஹம்மது நபி சொல்வதை இப்பொழுது கேளுங்கள்.
أَنَّ الْحَارِثَ بْنَ هِشَامٍ ـ رضى الله عنه ـ سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يَأْتِيكَ الْوَحْىُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَحْيَانًا يَأْتِينِي مِثْلَ صَلْصَلَةِ الْجَرَسِ ـ وَهُوَ أَشَدُّهُ عَلَىَّ
ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், “இறைத்தூதர்
அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?” எனக் கேட்டதற்கு, “சில வேளைகளில்
அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக
இருக்கும்.” என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
(சஹீஹுல் புகாரி : 02)
மேற்படி இரண்டு ஹதீஸ்களிலுமே மணி என்பதைக் குறிக்கும் அல் ஜரஸ் ( الْجَرَس ) என்ற சொல்லே இடம்பெற்றுள்ளது. முஹம்மது
நபி எதனை ஷைத்தானின் இசைக் கருவி என்று சொன்னாரே, அதே ஷைத்தானின் இசைக் கருவியின் ஓசையின் வடிவத்திலே
தான் முஹம்மது நபிக்கு இறை செய்தி வந்திருக்கின்றது என்று அவரே சொல்லிவிட்டார். பதிவர்
ஷைத்தான், கடவுள், அல்லாஹ் ஆகியவற்றை
நிராகரித்தாலும், இவற்றை உண்மை என்று நம்பி தமது வாழ்க்கையை
மதத்திற்காக அற்பணித்திருக்கும், மதத்தைப் பின்பற்றி வாழும் மக்களின் சிந்தனையைத்
தூண்டவே இந்தப் பதிவு அமைக்கப் பட்டுள்ளது. மேற்படி ஹதீஸ்களை படிக்கும் பொழுது, முஹம்மது நபியை, அல்லாஹ்வை, ஷைத்தானை எல்லாம் உண்மை என்று இன்னுமும் நம்பிக்கொண்டு இருக்கும் முஸ்லிம்கள், முஹம்மது நபிக்கு வஹி வந்தது ஷைத்தானிடம் இருந்துதானா என்ற கேள்வியை தம்மை நோக்கிக் கேட்டுக் கொள்ள வேண்டியாகிவிட்டது.
முஹம்மது நபியின் போதனைகளைப் பார்க்கும் பொழுது அவருக்கான செய்திகள் நல்லவர் ஒருவரிடமிருந்து
வந்திருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். முஹம்மது நபியே
கற்பனை செய்து கொண்ட (அல்லது கிறிஸ்தவத்தில் இருந்து பிரதி பண்ணிய) ஷைத்தான் எனும்
தீய கற்பனைப் பாத்திரத்தை ஒத்த ஒருவரிடமிருந்தே முஹம்மது நபிக்கான செய்திகள்
வந்திருக்க வேண்டும், அல்லது முஹம்மது நபியே அவ்வாறான ஒருவராக
இருந்து செய்திகளை, கட்டளைகளை உருவாக்கி இறைவனின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி
இருக்க வேண்டும் என்பதை பின்வரும் ஒரு சில உதாரணங்கள் மூலமாகவே உறுதி செய்து
கொள்ளலாம்.
பால்குடி வயதில் (الفطيم) இருந்த அப்பாஸின் மகள் உம்ஹபீபாவை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பார்த்த
பொழுது "இவள் வளரும் பொழுது நான் உயிருடன் இருந்தால் இவளைத் திருமணம் செய்து
கொள்வேன்" என்று கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத் : 26870, அல் முஜம் அல் கபீர் : 25/92, 238, முஸ்னத் அபி
யாஅலா : 7075)
தவழ்ந்து கொண்டிருந்த உம்முல் -ஃபதல் என்ற குழந்தையை கண்ட நபி கூறினார், “இவள் வளரும் வரை
நான் உயிருடன் இருந்தால், இவளைத் திருமணம் செய்வேன்”. ஆனால் அவள்
வளரும்முன் அவர் (நபி) இறந்து விட்டார். (இப்னு இஷாக் : பக்கம் 311)
உமைமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “நபி (ஸல்) அவர்களுக்கு மரத்தால் ஆன பாத்திரம்
ஒன்று இருந்தது. அதில் அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுத் தமது கட்டிலுக்கு அடியில்
வைத்து விடுவார்கள். (ஒரு நாள்) அவர்கள் எழுந்து (அந்தப் பாத்திரத்தை)
தேடினார்கள். அதை அவர்கள் காணவில்லை. ‘பாத்திரம் எங்கே?' என்று
கேட்டார்கள். ‘அபீசீனிய நாட்டிலிருந்து உம்மு சலமாவுடன் வந்துள்ள அவர்களின் அடிமை
பர்ரா அதைக் குடித்து விட்டார்'' என்று மக்கள் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்
நரகத்திலிருந்து காக்கும் திரையைக் கொண்டு அவர் தன்னைக் காத்துக் கொண்டார்' எனக்
கூறினார்கள்.”
(தப்ரானீ
24/ 205)
‘அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது
சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு உடன்பட மறுத்தால்
வானிலுள்ளவன் (அல்லாஹ்) அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள் மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை.’ (ஸஹீஹ் முஸ்லிம் : 2830)
'உங்களது மனைவிகள் உங்களுக்குரிய விளை நிலங்களாகும். ஆகவே,
உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்.'
(குர்ஆன் 2:223)
கஸீர் பின் அஸ்ஸாஇப் (ரலி) அறிவிக்கின்றார் :
குரைஸா
கோத்திரத்தின் சிறுவர்கள் எனக்குக் கூறினார்கள் "நாம் முஹம்மது நபியின்
முன்னால் நிறுத்தப்பட்டோம், எங்களில் யார் பருவமடைந்து பிறப்புறுப்பில்
உரோமம் வளரக் கூடியவர்களாக இருந்தார்களோ, அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், எங்களில் யார்
பருவமடையாதவர்களாக பிறப்புறுப்பில் உரோமம் வளராதவர்களாக இருந்தார்களோ, அவர்கள் கொலை
செய்யப்படவில்லை."
(ஸுனன் நஸஈ 3429)
“நான் ஐந்து வயது
சிறுவனாக இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு வாளியிலிருந்து (தண்ணீரை எடுத்துத்
தம் வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில்
வைத்திருக்கிறேன்” என மஹ்மூது இப்னு ரபீவு(ரலி) கூறினார்.
(ஸஹீஹுல் புகாரி : 77)
-றிஷ்வின் இஸ்மத்
30.04.2022