முஸ்லிம்கள் பகுதியளவு சுதந்திரம் பெற்று 98 வருடங்கள் பூர்த்தி

உலக முஸ்லிம்கள் பகுதியளவான சுதந்திரம் பெற்று இன்றுடன் 98 வருடங்கள் நிறைவடைகின்றன. முஹம்மது நபி மதீனாவுக்குச் சென்று கூட்டம் சேர்த்து கொள்ளையடித்து 20% பங்கு எடுத்ததுடன் இஸ்லாம் மதத்தை வாளால் பரப்ப ஆரம்பித்த பொழுது உருவான கொலைகாரக் கிலாபத் ஆட்சி 5 பிரிவினரின் கைகளில் மாறி கடைசியாக துருக்கியின் தந்தை (அதா துர்க்) என அழைக்கப்படும் முஸ்தபா கமால் அவர்களால் 1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஒழித்துக் கட்டப்பட்டது.


தன்னை இறைதூதர் என்று சொல்லிக் கொண்ட முஹம்மது நபியின் ஆட்சி இடம் பெற்ற பின்னர் முஹம்மது நபிக்கு மகள்களை திருமணம் செய்து கொடுத்திருந்த மாமன்மார், முஹம்மது நபியின் மகள்களைத் திருமணம் செய்திருந்த மருமகன் மாரின் ஆட்சி இடம்பெற்றது, இது குலபாஉர் ராஷிதீன்களின் ஆட்சி (ராஷிதிய கிலாபா) என்று அறியப் படுகின்றது. மூன்றாவதாக உமையா கிலாபத் ஆட்சியும், அதனைத் தொடர்ந்து நான்காவதாக அப்பாஸிய கிலாபத் ஆட்சியும், கடைசியாக  உதுமானிய (Ottoman) கிலாபத் ஆட்சியும் இடம் பெற்றன. உமையா கிலாபத் என்பது முஹம்மது நபியின் இரண்டு மகள்களைத் திருமணம் செய்திருந்தவரும், கிலாபத்தின் மூன்றாவது ஆட்சியாளருமான உஸ்மான் உடைய கோத்திரத்தினரின் (பனூ உமையா) ஆட்சி ஆகும். அப்பாஸியக் கிலாபத் என்பது முஹம்மது நபியின் சிறிய தந்தையான அப்பாஸ் என்பவரின் வம்சத்தாரின் ஆட்சி ஆகும். கடைசியாக இடம்பெற்ற உதுமானிய கிலாபத் ஆட்சி என்பது முஹம்மது நபியுடன் நேரடியாக  தொடர்பு கொண்டவர்களின் ஆட்சி அல்ல, அது துருக்கியை மையமாக வைத்து இடம்பெற்றது.


கொலை
, கொள்ளை, கூட்டுப் படுகொலைகள், வாளால் மதத்தைப் பரப்புவது என்று முஹம்மது நபியால் ஆரம்பிக்கப்பட்டு 1924 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற கிலாபத் எனும் இஸ்லாமிய சாம்ராஜ்ய ஆட்சியானது அதன் வரலாறு முழுவதுமே கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அமுல் படுத்தக் கூடியதாகவும், கொலை வெறித்தனம் கொண்டதாகவும் மட்டும் இருந்தது என்று நினைப்பது தப்பாகும். காலத்திற்குக் காலம் இஸ்லாத்திற்கு முரணான விடயங்கள் கிலாபத் ஆட்சியின் கீழேயே இடம்பெற்றிருந்தன, அல்லது கண்டும் காணாமல் விடப்பட்டிருந்தன. இசை, நடனம், கல்வி, பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்வது, அறிவியல், மது, விஞ்ஞானம், பாலியல் தொழில், உயிரியல், தத்துவவியல் போன்றவையும் அவ்வப்போது அனுமதிக்கப்பட்டு இருந்தன அல்லது கண்டும் காணாமல் விடப்பட்டு இருந்தன  என்பதை வரலாற்றில் காணலாம். கிலாபத் ஆட்சியின் கீழே சொற்ப எண்ணிக்கையான அறிஞர்கள், ஆய்வாளர்கள் உருவாக இத்தகைய அனுமதிகள் காரணமாக இருந்திருக்கலாம்.

முஹம்மது நபியின் ஆட்சியின் கீழ் யூதர்களின் ஆடைகளைக் களைந்து ஆணுறுப்பில் உரோமம் வளர ஆரம்பித்து இருந்தவர்களைக் கூட்டுப் கொலை செய்தது
, அடுத்து வந்த அபூபக்கரின் ஆட்சியின் கீழ் حُرُوب ٱلرِّدَّة (இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு எதிரான யுத்தம்) என்ற பெயரில் மேற்கொள்ளப் பட்ட மனிதப் படுகொலைகள் என்று ஆரம்பித்து கடைசி கிலாபத் இஸ்லாமிய ஆட்சியான உதுமானிய ஆட்சி ஆர்மேனியர்களுக்கு எதிராக மேற்கொண்ட மிகப் பாரிய மனிதப் படுகொலைகள் வரை கிலாபத் இஸ்லாமிய ஆட்சிகள் மனித இரத்தத்தை ஆறாக ஓட விட்டிருக்கின்றன. இரண்டாம் உலக மாக யுத்தத்தில் ஹிட்லரின் நாஸிகள் யூதர்கள் மீது மேற்கொண்ட மனிதப் படுகொலைக்கு முன்னர் மிகப் பெரிய மனிதப் படுகொலையாக உதுமானிய கிலாபத் ஆட்சி ஆர்மேனிய மக்கள் மீது மேற்கொண்ட மனிதப் படுகொலைகளே கருதப்பட்டன. இலங்கையில் மெளலவி சஹ்ரான் தலைமயிலான ISIS பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு தெரிவு செய்தது போன்ற ஒரு உயிர்த்த ஞாயிறு தினத்திலேயே உதுமானிய கிலாபத் ஆட்சியானது கொன்ஸ்தாந்திநோபல் மீது 1453 ஆம் ஆண்டு தாக்குதல் தொடுத்தது என்பது குறிப்பிடத் தக்கது.



இங்கு ஐந்து முக்கியமான கிலாபத் ஆட்சிகள் பற்றிக் குறிப்பிடப் பட்டு இருந்தாலும் இடைக்கிடை மம்லுக் கிலாபத்
, ஃபாத்திமிய கிலாபத், சொகோட்டோ கிலாபத், அய்யூபிய கிலாபத் போன்ற சிறிய சிறிய கிலாபத் ஆட்சிகள் அவ்வப்போது தோன்றி மறைந்து இருக்கின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும். இத்தகைய சிறிய கிலாபத்களின் தோற்றமும், மறைவும் இரத்தக் கறை படிந்தனவாகவே காணப்பட்டன. முக்கியமான ஐந்து கிலாபத் இஸ்லாமிய ஆட்சிகளை எடுத்துக் கொண்டாலும் அங்கே உட்படுகொலைகள், முதுகிலே குத்துதல், கூட்டுப் படுகொலைகள், ஒரு வம்சத்தையே / கோத்திரத்தையே மொத்தமாகக் காலி செய்தல் போன்றவற்றிற்கு பஞ்சமே இருக்கவில்லை என்று சொல்லலாம். உமையா கிலாபத்தின் கீழே முஹம்மது நபியின் வாரிசான அவரது பேரன் ஹுசைன் என்பவரும், அவரின் குடும்பத்தினரும் ஒட்டு மொத்தமாக படுகொலை செய்யப்பட்டனர். முஹம்மது நபியைத் தொடர்ந்து வந்த முதல் 5 ஆட்சியாளர்களில் 4 பேர் முஸ்லிம்களாலேயே படுகொலை செய்யப்பட்டனர்.


1924 ஆம் ஆண்டு கிலாபத் ஒழித்துக் கட்டப்பட்டதைத் தொடர்ந்து 'மீண்டும் உலகளாவிய இஸ்லாமிய கிலாபத்தை முஹம்மது நபியின் வழிமுறைப் படியே உருவாக்க வேண்டும், அல்லாஹ்வின் சட்டங்கள் மட்டுமே முழு உலகையும் ஆழ வேண்டும்' எனும் நோக்கத்துடன் பல இஸ்லாமியவாதிகள் கிளம்பினார்கள்
, அமைப்புக்களையும் ஆரம்பித்தார்கள். அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட அமைப்புக்களில் அரபு பேசும் தேசங்களை மையப்படுத்தி செயற்படும் இஹ்வானுல் முஸ்லிமீன் (இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு) மற்றும் தெற்காசிய வட்டகை நாடுகளை மையப்படுத்தி இயங்கும் ஜமாத்தே இஸ்லாமி ஆகியன முக்கியமானவை ஆகும். ISIS இஸ்லாமியப் பயங்கரவாதிகள் அபூபக்கர் அல் பக்தாதி தலைமையில் கிலாபத் அமைத்த பொழுது ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி மூலம் கிலாபத் சிந்தனை ஊட்டப்பட்ட பலர் அதனை நோக்கி சென்றமை, பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டமை ஆகியவற்றை நாம் அண்மைக் காலத்தில் கண்டோம்.

 

மனித வாழ்க்கைக்குப் பொருத்தமற்ற கிலாபத் எனும் உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி  முஸ்தபா கமால் அவர்களால் 1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஒழித்துக் கட்டப்பட்டமை முஸ்லிம்களுக்கும், ஏனைய மனிதர்களுக்கும் கிடைத்த சுதந்திரம் ஆகும், எனினும் முஸ்லிம்கள் இஸ்லாம் எனும் மதத்தின் சிறையில் இருந்து சிந்தனை மற்றும் செயற்பாட்டு ரீதியாக விடுதலை பெற வேண்டி உள்ளது. கிலாபத்தை மீண்டும் உருவாக்கவும், இஸ்லாமிய மதத்தின் தீவிரமான, மனித வாழ்க்கைக்குப் பொருத்தமற்ற போதனைகளைத் திணிக்கவும் முயற்சி செய்யும் இஸ்லாமியவாதிகள் குறித்து முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முஸ்தபா கமால் அவர்களால் ஒழித்துக்கட்டப் பட்ட கிலாபத் மீண்டும் தோன்றிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மனிதத்தை நேசிக்கும் அனைவரினதும் பொறுப்பாகும்.

வரலாறு பல விடுதலை வீரர்களை, சுதந்திரப் போராளிகளை, புரட்சியாளர்களைக் கண்டிருக்கின்றது. அந்த வகையில், மனித சுதந்திரம், நாகரீகம் ஆகியவற்றிற்காகப் போராடி வெற்றிபெற்ற சுதந்திர வீரர் முஸ்தபா கமால் அவர்களை சுதந்திரம் வெற்றி கொண்ட இந்த நாளில் நினைவு கூருவோம்.

 

குறிப்பு : இறைவனின் இறுதித்  இறைதூதர் என்று சொல்லிக் கொண்டவர் மீதே மனித உரிமை மீறல்கள், கூட்டுப் படுகொலைகள், திட்டமிட்ட கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்புணர்வு உக்குவிப்பு போன்றவற்றை  செய்த குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் அவர் போதித்த மதத்தின் புனித நூல்களிலேயே உள்ளன. முஸ்தபா கமால் மீதும் சில குற்றச்சாட்டுக்கள் உள்ளன. குற்றச்சாட்டுக்கள் உண்மை என்றால், அவற்றிற்கு எனது ஆதரவு கொஞ்சமும் இல்லை என்பதையும் பதிவு செய்து கொள்கின்றேன்.


-றிஷ்வின் இஸ்மத்
 03.03.2022