கடந்த பத்து வருடங்களில் இஸ்லாத்தை ஏற்ற விஞ்ஞானிகள்!

மதத்தின் பெயரால் எதைச் சொன்னாலும் முஸ்லிம்களை இலகுவாக ஏமாற்றி விட முடிகின்றது என்பதுதான் அந்த மதத்தை வைத்து இலாபமீட்டுகின்றவர்களின் மிகப் பெரும் பலமாக இருக்கின்றது. மதத்தின் பெயரால் சொல்லப்படும் எதையுமே முஸ்லிம்கள் தேடிப் பார்க்காமல், கண்ணை மூடிக்கொண்டு நம்பி விடுவார்கள் என்பதை இஸ்லாமியவாதிகள் அறிந்ததால் தான் முஸ்லிம்களை தொடர்ந்தும் பல்வேறு வழிகளில் ஏமாற்றி வருகின்றனர். முஸ்லிம்களிடம் இருக்கும் இந்தப் பலவீனத்தின் காரணமாகத்தான் உள்ளூர் ஜோக்கர் நாயக்குகள் முதல் சர்வதேச சாகிர் நாயக் வரை அனைவரினதும் வயிறுகளும், கல்லாக்களும், வங்கிக் கணக்குகளும் நிரம்புகின்றன, அவர்கள் மில்லியனர்கள், பில்லியனர்கள், ட்ரில்லியனர்கள் என்று மாறிக்கொண்டே போகின்றார்கள். இந்த பொதுப் பலவீனத்தை உடைத்துக்கொண்டு ஆங்காங்கே சுயமாக சிந்திக்கின்ற, சுயமாக ஆராய்கின்ற நேர்மையான முஸ்லிம்கள் இஸ்லாத்தை நிராகரித்து விரைவிலேயே முன்னாள் முஸ்லிம்களாக மாறிவிடுகின்றார்கள்.


இஸ்லாம் விஞ்ஞான மதம், குர்ஆனிலே அறிவியல் இருக்கின்றது, அதனால் குர்ஆனை ஆய்வு செய்து ஒவ்வொரு வருடமும் பல விஞ்ஞானிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள் என்கின்ற நம்பிக்கை முஸ்லிம்கள் மத்தியில் ஊட்டப் படுகின்றது. ஒவ்வொரு வருடமும் விஞ்ஞானிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள் என்று முஸ்லிம்கள் குருட்டுத் தனமாக நம்புவதை உடைக்க வேண்டும் என்பதற்காக, ‘கடந்த 10 வருடங்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விஞ்ஞானிகள், அறிவியலாளர்களின் பெயர்ப் பட்டியலை, விபரங்களைக்’ கேட்டு ஒரு பதிவை இட்டிருந்தேன். அத்துடன் ஏதாவது ஒரு துறையில் நோபல் பரிசு பெற்றவர்கள் யாராவது ஒருவராவது இஸ்லாத்திற்கு மதம் மாறி இருக்கின்றரா என்றும் கேட்டு இருந்தேன்.


நோபல் பரிசு பெற்றவர்கள் இஸ்லாத்திற்கு மதம் மாறியதற்கான கேள்விக்கு பதில் வராத நிலையில், கடந்த 10 வருடங்களுக்குள் இஸ்லாத்தை ஏற்ற விஞ்ஞானிகள் பற்றிய கேள்விக்கு மட்டும் ஒரு பதில் வந்து இருந்தது. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட “05 விஞ்ஞானிகள்” பற்றிய தகவல்கள் இணைப்பில் இருக்கின்றன என்று கூறி ஒருவர் யூடியூப் இணைப்பொன்றை வழங்கி இருந்தார். அட அப்படியா என்ற ஆச்சரியத்துடன் கடந்த 10 வருடங்களுக்குள் இஸ்லாத்தை ஏற்ற அந்த 05 விஞ்ஞானிகளும் யார் என்று ஆவலுடன் பார்த்த பொழுது மேலும் ஆச்சரியம் காத்திருந்தது.

வளங்கப்பட்ட இணைப்பு : https://youtu.be/ZKetWZeTjI4

கடந்த 10 வருடங்களுக்குள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்பட்ட அந்த ஐந்து விஞ்ஞானிகளும் யார் என்பதையும், அவர்கள் எப்படியானவர்கள் என்பதையும் பார்ப்போம்.


1. Jackie Yi-Ru Ying : இவர் 2001 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றதாகவே தகவல்கள் உள்ளன. ஆகவே கடந்த 10 வருடங்களுக்குள் இஸ்லாத்தை ஏற்றவர் அல்ல என்பதனால் இது கேள்விக்கான விடையாக அமையாது. இருந்தாலும் இவர் ஏன் இஸ்லாத்தை ஏற்றார் என்பதற்கான அறிவியல் சார்ந்த விரிவான காரணங்களையொ, விளக்கங்களையோ இவரது எழுத்திலோ, பேச்சிலோ காண முடியவில்லை. தற்பொழுதும் உயிருடன் இருக்கும் இவருக்கென்று சொந்தமாக் இணையத் தளம் ஒன்று இருப்பதாகக் கூடத் தெரியவில்லை. அப்படி இணையத்தளம் ஏதாவது இருந்தால் அதிலிருந்து இவர் இஸ்லாத்த ஏற்றதற்கான காரணங்களை சமர்ப்பிக்கலாம், இருந்தாலும் அது எனது கேள்விக்கான விடையாக அமையாது, ஏனெனில் இவர் அந்த 10 வருட காலப் பகுதிக்குள் அடங்க மாட்டார். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக இவரே தெரிவிக்கும் அறிவியல் ரீதியான காரணங்கள் இருந்தால், அவற்றையும் ஆராய்ந்து தோலுரிக்கத் தயார்.


2. Thomas Lauder Brunton : 1844 இல் பிறந்த இவர் 1916 ஆம் ஆண்டு வரையே உயிர்வாழ்ந்து இருக்கின்றார். ஆக இவர் இறந்தே 100 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. எனவே இவர் கடந்த 10 வருடங்களுக்குள் இஸ்லாத்தை ஏற்றவராக முடியாது என்பதால் இதுவும் எனது கேள்விக்கான விடை அல்ல. மேலும் இவர் இஸ்லாத்தை ஏற்றது குறித்த எவ்வித அறிவியல் ரீதியான விளக்கங்களையும் காண முடியவில்லை.


3. Arthur J. Ellison : 1980 களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இவர் இறந்தே 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆகவே இவர் கடந்த 10 வருடங்களுக்குள் இஸ்லாத்தை ஏற்றவராக இவர் கருதப்பட மாட்டார் என்பதால் இதுவும் எனது கேள்விக்கான விடையாக அமையாது. இவர் இஸ்லாத்தை ஏற்றதற்கான அறிவியல் ரீதியான காரனங்கள எதனையும் காண முடியவில்லை. இவர் இஸ்லாத்தை ஏற்றதற்கான அறிவியல் காரணங்கள் இவரது பேச்சில், அல்லது எழுத்தில் இருந்தால், அவற்றையும் ஆராய்ந்து தோலுரிக்கத் தயார்.


4. Atsushi Okuda : இவர் ஒரு விஞ்ஞானியே அல்ல, அரசியல் விஞ்ஞானத் துறை சார்ந்தவர். அரசியல் விஞ்ஞானத் துறையை ஆங்கிலத்தில் Political Science என்று அழைப்பதுண்டு என்பதற்காக அத்துறை விற்பனர்களை Scientists (விஞ்ஞானிகள்) என்று யாரும் அழைப்பதில்லை. ஆக அரசியல் விஞ்ஞானத் துறை சார்ந்தவரை ஒரு விஞ்ஞானி என்று முஸ்லிம்களை ஏமாளித்தனமாக நம்ப வைத்து இருப்பதானது, மதத்தின் பெயரால் முஸ்லிம்கள் எந்த அளவு ஏமாற்றப் படுகின்றார்கள் என்பதற்கான ஒரு நல்ல உதாரணம் மட்டுமே. மேலும் இவர் இஸ்லாத்தை ஏற்றுப் பல வருடங்கள் ஆகிவிட்டன, இவரும் கூட கடந்த 10 வருடங்களுக்குள் இஸ்லாத்தை ஏற்றவர் அல்ல.

இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது எவ்வித அறிவியல் ரீதியான காரணங்களுக்காகவும் அல்ல, மாறாக வெறுமனே உணர்வியல் ரீதியான (emotional) காரணங்களுக்காக மட்டுமே. "மனிதனை டன் டன் என்று சத்தம் கேட்கும் சுட்ட களிமண்ணால் படைத்தோம்" என்கின்ற குர்ஆன் (15:26) வசனத்தால் கவரப்பட்டு இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாராம். டன் டன் என்று சத்தம் கேட்கின்ற சுட்ட களிமண்ணால் மனிதன் படைக்கப்பட்டான் என்பதை துறை சார்ந்த அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு அறிவியலாளரும், விஞ்ஞானியும் ஏற்றுக் கொள்வது இல்லை. டன் டன் என்று சத்தம் கேட்கும் சுட்ட களிமண்ணால் மனிதன் படைக்கப்பட்டான் என்பது அறிவியலுக்கு முற்றிலும் முரணானது ஆகும்.


5. Maurice Bucaille : இவர் ஒரு விஞ்ஞானியே அல்ல, இவர் ஒரு மருத்துவர், அவ்வளவுதான். குர்ஆனில் விஞ்ஞானம் இருப்பதாக புரளியைக் கிளப்பி விட்டு பெரியதொரு அறிவியல் மோசடியைச் செய்தவர்களில் மிக முக்கியமானவர் இவராவார். அரபு நாட்டுப் பணத்தில் சந்தோசமாக வாழ்ந்த பிரெஞ்சு நாட்டவரான இவர் இறந்து 20 வருடங்களுக்கு மேலாகின்றது. இவர் குறித்த மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் இவர் ஒரு போதும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவேயில்லை என்பதுதான். இவருக்குத் தேவைப்பட்டதெல்லாம் அரபு நாடுகளிடம் கொட்டிக் கிடக்கும் பெட்ரோலியப் பணம் மட்டுமே, அதற்காகவே குர்ஆனில் விஞ்ஞானம் இருப்பதாக ஜால்ரா அடித்து பிழைப்பு நடத்தினார். இவர் விஞ்ஞானியும் அல்ல, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவரும் அல்ல, மாறாக இவர் ஒரு அறிவியல் மோசடிக்காரர். முஸ்லிம்களின் பலவீனத்தை இவர் நன்கு பயன்படுத்திக் கொண்டார் என்பது மட்டுமே உண்மை ஆகும்.


கடந்த 10 வருடங்களுக்குள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விஞ்ஞானிகள் என்று கூறி முன்வைக்கப்பட்ட 5 பேருமே தவறான பதில்கள் ஆகும். முஸ்லிம்கள் மதத்தின் பெயரால் எந்த அளவு ஏமாற்றப் படுகின்றார்கள் என்பதை ஓரளவாவது வெளிக்கொணரும் ஒரு பதிவே இது. முஸ்லிம்கள் சுயமாக சிந்திக்க, ஆராய ஆரம்பித்தால் இஸ்லாம் தானாகவே அழிந்துவிடும்.
-றிஷ்வின் இஸ்மத்
27.01.2022