இஸ்லாத்தில் சமத்துவம் இல்லை, கொள்ளையில் கூட 20% முஹம்மது நபிக்கு!


இஸ்லாம் மதத்தில் சமத்துவம் இருப்பதாக இஸ்லாமியவாதிகள் பல்வேறு தளங்களிலும், மேடைகளிலும் பொய் கூறி வருகின்றார்கள், எனினும் அந்த மதத்தில் உண்மையில் சமத்துவம் என்பது கிடையாது என்பதற்கு அந்த மதத்தின் மூலாதார நூற்களும், முஹம்மது நபியின் வாழ்க்கையும் ஆதாரங்களாக உள்ளன. இஸ்லாத்தில் பாலியல் ரீதியான சமத்துவம் இல்லை என்பது ஒரு புறம் இருக்க ஆண்களுக்கு மத்தியில் கூட முஹம்மது நபி சமத்துவமாக நடந்துகொள்ளவில்லை என்பதற்கான ஆதாரத்தை குர்ஆனே வழங்கி நிற்கின்றது.


முஹம்மது நபியின் வாழ்க்கையில் அவரின் தலைமையில் நடைபெற்ற முதலாவது பெரிய தாக்குதல் அல்லது போர் அல்லது கொள்ளை முயற்சி ஹிஜ்ரி 2ஆம் ஆண்டில் நடைபெற்ற பத்ருப் போர் ஆகும். பத்ருப் போர் என்பது ஒரு தற்காப்பு நடவடிக்கை அல்ல, அது ஒரு கொள்ளை முயற்சிதான் என்பதை ஏற்கனவே இஸ்லாமிய ஆதரங்களுடன் எழுதி இருக்கின்றேன், http://www.allahvin.com/2018/11/Badr.html

பத்ருப் போரில் முஹம்மது நபியின் தலைமையிலான முஸ்லிம் தரப்பினர் வெற்றி பெறுகின்றார்கள். எதிர்த் தரப்பிடமிருந்து ஏராளமான பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன அல்லது கிடைக்கின்றன. அவற்றை எப்படிப் பங்கிடுவது என்பதில் முஹம்மது நபியின் கூட்டத்தினருக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை குர்ஆனின் 8 ஆவது அத்தியாயமான சூரத்துல் அன்ஃபால் (سورة الأنفال) குறிப்பிடுகின்றது.


குர்ஆனின் 8 ஆவது அத்தியாயத்தின் முதலாவது வசனம் “போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் சொந்தமானதாகும்” என்று கூறுகின்றது. அதாவது போரிலே கிடைத்த, அல்லது கொள்ளையடித்த மொத்தப் பொருட்களும் அல்லாஹ்வுக்கும், முஹம்மது நபிக்கும் சொந்தமானது என்று கூறுகின்றது. அல்லாஹ் என்று உண்மையில் யாருமே இல்லாததால் மொத்தப் பொருட்களும் முஹம்மது நபிக்கே சொந்தமாகிவிடும். முஹம்மது நபி மொத்தப் பொருட்களையும் அப்படியே விழுங்கிக் கொள்வதை அவருடன் சென்ற அவரது அடியாட்கள் (சஹாபாக்கள்) விரும்பவில்லை என்பதை 8 ஆவது அத்தியாயத்தின் அடுத்து வரும் வசனங்களைப் படிக்கும் பொழுது தெரிந்து கொள்ளலாம்.


உதாரணமாக குறித்த அத்தியாயத்தின் 5 ஆவது வசனம் “(நபியே! யுத்தப் பொருட்கள் பங்கீடு விஷயத்தில் அவர்கள் அதிருப்தியுற்றது) உமதிரட்சகன், உம் இல்லத்திலிருந்து உண்மையைக் கொண்டு உம்மை வெளியேற்றியதை (அவர்கள் விரும்பாததை)ப் போன்றிருக்கிறது” என்று சொல்கின்றது. இவ்வாறாக பங்கீடு விடயத்தில் சர்ச்சை ஏற்பட்டு, பொருட்கள் பங்கு பிரிக்கப் படாமல் இருக்கும் பொழுதே ஒரு சிவப்பு வெல்வெட் அங்கி கொள்ளைப் பொருட்களில் இருந்து காணாமல் போய்விடுகின்றது, அதனை முஹம்மது நபிதான் திருடி இருக்க வேண்டும் என்று அவருடன் சென்ற அவரது அடியாட்களே முஹம்மது நபி மீது திருட்டுப் பட்டம் கட்டுகின்றார்கள். http://www.allahvin.com/2021/12/Thief.html


கடைசியாக அதே அத்தியாயத்தின் 41 ஆவது வசனத்தின் படி எதோ ஒரு விதமாக ஒரு முடிவு திணிக்கப்பட்டு அதுவே சட்டம் ஆகின்றது. அந்த சட்டமானது “உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும்” என்று சொல்கின்றது. அதாவது போர் செய்து கிடைக்கும் அல்லது கொள்ளையடிக்கும் பொருட்களில் முஹம்மது நபிக்கும், அவருடன் சேர்த்துச் சொல்லப்படும் மற்ற ஐந்து தரப்பினருக்குமாக ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20% சொந்தமாகி விடுகின்றது. இங்கு ‘பொருட்கள்’ என்பதில் இஸ்லாமியப் படையினரால் பிடிக்கப்படும் சுதந்திரமாக வாழ்ந்த பெண்களும் அடங்குவார்கள் என்பதை ஸஹீஹுல் புகாரியின் 2229 ஆவது ஹதீஸ் உறுதி செய்கின்றது. கொள்ளையடிக்கும் பொருட்களில் 20% முஹம்மது நபி, அல்லாஹ் உட்பட 6 பிரிவினருக்கு சொந்தம் என்று குர்ஆன் குறிப்பிட்டாலும் அந்த பொருட்கள் மொத்தமாக முஹம்மது நபிக்கே உரித்தாக முடியும் என்பதை விளக்கி எழுதி இருக்கின்றேன், இதுவரை வாசித்து இருக்காதவர்கள் வாசித்துத் தெரிந்துகொள்ள : http://www.allahvin.com/2021/11/Jihad.html

இஸ்லாமிய வரலாற்றில் முஹம்மது நபியின் காலத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சிகளில் அல்லது போர்களில் மிகக் குறைவான எண்ணிக்கையில் அவரது தரப்பினர் பங்கேற்றது பத்ரு போரில் ஆகும். முஹம்மது நபியின் தரப்பில் 313 பேர் பங்கேற்றார்கள்.

முஹம்மது நபிக்கான பங்கு = 20%
அந்தப் பங்கு உண்மையிலேயே 6 ஆகத்தான் பிரிக்கப் பட்டது என்று எடுத்துக் கொண்டால், முஹம்மது நபிக்கு கிடைப்பது = 3.33%
போரிலே / கொள்ளையிலே பங்குகொண்ட 313 பேருக்கும் மொத்தமாகக் கிடைப்பது = 80%
ஒருவருக்குக் கிடைப்பது = 0.25%

முஹம்மது நபிக்கு 20% ஐ 6 ஆகப் பிரித்து 3.33% தான் கிடைத்தது என்று எடுத்துக் கொண்டால் மற்றவர்களை விட 13 மடங்கு அதிகமாக பெற்று இருக்கின்றார்.

அந்த 6 பங்குகளுமே முஹம்மது நபியையே குறிப்பதால் அவரே மொத்தமாக 20% ஐயும் எடுத்துக் கொண்டார் என்று பார்த்தால், மற்றவர்களுக்குக் கிடைத்ததை விட முஹம்மது நபிக்கு 80 மடங்கு அதிகமாக கிடைத்து இருக்கின்றது. கொள்ளை அடிப்பது தவறு என்பது ஒரு புறம் இருந்தாலும், கொள்ளை அடித்ததைப் பிரிப்பதில் கூட முஹம்மது நபி நீதியாக, நேர்மையாக, சமத்துவமாக நடந்து கொள்ளவில்லை. மற்றவர்களை விட தனக்கு 80 மடங்கு அதிகமாக பெற்றுக் கொண்டு இருக்கின்றார். இது பத்ரு கொள்ளை தொடர்பான கணக்கே. அதன் பின்னர் நடைபெற்ற போர்கள், கொள்ளைகளில் மிக அதிகமானவர்கள் பங்கு கொண்டார்கள் எனும் பொழுது மற்றவர்களுக்குக் கிடைக்கும் பங்கிற்கும், முஹம்மது நபிக்குக் கிடைக்கும் பங்கிற்கும் இடையிலான வேறுபாடு இன்னும் பன்மடங்கு அதிகமாக இருக்கும்.

உதாரணமாக 1000 பேர் பங்குபற்றினார்கள் என்றால் ஒருவருக்கு 0.08% மட்டுமே கிடைக்கும், ஆனால் முஹம்மது நபிக்கு 20% சுளையாகக் கிடைக்கும். இப்பொழுது ஒருவருக்குக் கிடைப்பது போன்று 250 மடங்கு அதிகமாக முஹம்மது நபிக்குக் கிடைக்கும். உதாரணத்திற்கு, உஹது யுத்தத்தில் 700 பேரும், கைபர் போரில் 1600 பெரும், கந்தக் யுத்தத்தில் 3000 பேரும் கலந்து கொண்டதாக இஸ்லாமிய வரலாறுகள் குறிப்பிடுகின்றன. முஹம்மது சுளையாக 20% எடுத்துக் கொண்டால், மற்றவர்களுக்குக் கிடைப்பதை விட அவர் எத்தனை மடங்கு அதிகமாக எடுத்து இருப்பார் என்பதை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.

இஸ்லாத்தில் சமத்துவம் என்பதே இல்லை என்பதையும், முஹம்மது நபி அதற்கு முரணாகவே நடந்து இருக்கின்றார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இஸ்லாத்தில் சமத்துவம் மட்டுமல்ல, நீதி, நேர்மை கூட கிடையாது என்பதையும் முஹம்மது நபியின் இந்த பங்கு பிரித்தல் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. தன்னை இறை தூதர், இறைவனின் செய்தியைச் சொல்லி மக்களுக்கு நேர்வழி காட்ட வந்தவர் என்று சொல்லிக் கொண்டாலும், அவர் கொள்ளையடிப்பவராகவும், அநீதமான முறையில் அதிக பங்கை சுருட்டிக் கொள்பவராகவுமே இருந்துள்ளார் என்பதை இஸ்லாமிய மூலாதரங்களில் இருந்தே அறிய முடிகின்றது.

சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் படிப்பினை உள்ளது.

-றிஷ்வின் இஸ்மத்
21.01.2022