இதுதான் ஜிஹாத் - முஹம்மது & கம்பனி ரகசியங்கள் அவுட்


"அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்" - முஹம்மது & கம்பனி ரகசியங்கள் அவுட்!

ஜிஹாத் எனும் போராட்டத்தில் ஈடுபடுவது, அதிலே உயிரை தியாகம் செய்வது என்பவை இஸ்லாத்திலே உயர்ந்த நிலையாக போதிக்கப் படுகின்றன. இஸ்லாத்திற்காக போராடி ஜிஹாதிலே மரணிக்கின்ற ஒவ்வொருவரினதும் கடன் தவிர்ந்த அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப் படுவதாகவும், ஒவ்வொருவருக்கும் மரணத்தின் பின்னர் சுவர்க்கத்திலே உயர்ந்த அந்தஸ்துகளும், 72 கன்னிகளும் வழங்கப்படும் என்றும் முஹம்மது நபி போதனை செய்து இருக்கின்றார், அவை இன்றளவும் இஸ்லாத்திலே உள்ளன, போதனை செய்யப்படுகின்றன.


அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (ஜிஹாது பீ சபிலில்லாஹ்) செய்வதும், அதிலே உயிரைத் தியாகம் செய்வதும் 'சத்தியத்திற்காக, ஏகத்துவத்தை நிலைநாட்டுவதற்காக, அல்லாஹ்வின் ஆட்சியைக் கொண்டுவருவதற்காக, அநீதிக்கு எதிராக போராடுவதற்காக, உண்மையை மேலோங்கச் செய்வதற்காக, இஸ்லாத்தை இந்தப் பூமியிலே வாழ வைப்பதற்காக, முஸ்லிம்களுக்கு எதிராக வரும் சவால்களை முறியடிப்பதற்காக' என்றெல்லாம் பலவாறான விளக்கங்களை இஸ்லாமியவாதிகள் வழங்குவார்கள். ஆனால் உண்மை என்ன?


ஆயிஷா(ரலி) அறிவித்தார். கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது, ‘இனி நம் வயிறு பேரீச்சங்கனிகளால் நிரம்பும்” என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்.
(ஸஹீஹுல் புகாரி : 4242)

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். கைபரை வெற்றி கொள்ளும் வரையில் நாங்கள் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை.
(ஸஹீஹுல் புகாரி : 4243)


கைபர் எனும் பிரதேசத்தில் யூதர்கள் வாழ்ந்து வந்தார்கள். அங்கே இருந்த கோட்டை கைபர் கோட்டை என்று அறியப்பட்டது. யூதர்கள் வழமை போன்று தமது அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளுக்காகத் தயாராகிக் கொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில் முஹம்மது திடீர் என்று படையுடன் நுழைந்து ‘அல்லாஹு அக்பர்’ சொல்லி அந்த மக்களைத் தாக்கி, கொலை செய்து, கொள்ளை அடித்த ஜிஹாத் தாக்குதலைப் பற்றியே மேலே உள்ள இரண்டு ஹதீஸ்களும் பேசுகின்றன. அந்த யூத கோத்திரத்தின் தலைவரின் 17 வயதான அழகிய யுவதியின் கணவன், சகோதரன், தந்தை என்று எல்லோரையும் கொலை செய்துவிட்டு முஹம்மது அந்த யுவதியை தனக்கு மனைவியாக்கிக் கொண்ட கொடுமையும் அங்கேதான் நிகழ்ந்தது. ஆக முஹம்மது, இல்லாத அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி தன்னை நம்பியவர்களைக் கூட பலி கொடுத்து ஜிஹாத் என்ற பெயரில் மற்றவர்களைக் கொலை செய்தது எல்லாமே வயிற்றுப் பசிக்கும், காமப் பசிக்கும், கொள்ளை அடிப்பதற்காகவும் தான் என்பதை, முஹம்மதுடன் கூட இருந்தவர்களே வாக்குமூலம் தந்து உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்கள்.


அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு பெண் போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புகின்றோம், எனினும் நாங்கள் அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி : 2229)


‘முஹம்மது நபி தன்னுடன் இருந்தவர்களை தோழர் (சஹாபி) என்று தான் அழைத்தார், எல்லோரையும் சமமாக நடத்தினார்’ என்று இஸ்லாமியவாதிகள் மட்டுமல்லாமல் சில இடதுசாரிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் கூட பூரித்துப் போய் உச்சுக் கொட்டுவார்கள். ஆனால் தன்னை யாரவது ‘தோழர் முஹம்மது’ என்று அழைக்க முஹம்மது நபி ஊக்குவித்தரா, யாரவது முஹம்மதை ‘தோழர்’ என்று அழைத்தார்களா என்று பார்த்தால் அதற்கு விடை பூச்சியமே. எல்லோரையும் சமனாக வைத்துக் கொண்டதாக பிம்பத்தை ஏற்படுத்திய முஹம்மது நபி, தன்னை மட்டும் தந்திரமாக உயர்த்தியே வைத்துக் கொண்டார். சோழியன் குடுமி ஆடதல்லவா, ஆகவே முஹம்மது தன்னையும் ‘தோழர் முஹம்மது’ ஆக்கிக் கொள்ளாமல் உயர்த்தி வைத்ததற்கான காரணம் என்ன என்று பார்ப்போமே.


போரில் கிடைத்த பொருட்களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக, அவை அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்.
(குர்ஆன் 8:1)


இது அன்ஃபால் (الأنفال) எனப்படும் குரானின் 8 ஆவது அத்தியாயம் ஆகும். முஹம்மது தலைமையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பாரிய கொள்ளையான பத்ருக் கொள்ளையின் முடிவில் கொள்ளைடிக்கும் பொருட்களை எப்படி பங்கு பிரிப்பது என்பதை டீல் போடுவதற்காக உருவாக்கப் பட்டதே இந்த அத்தியாயம் ஆகும். (பதர் என்பது யுத்தம் அல்ல, அது ஒரு கொள்ளை முயற்சியே என்பதை ஏற்கனவே எழுதிவிட்டேன், அதனை இங்கே வாசிக்கலாம் : http://www.allahvin.com/2018/11/Badr.html ) அன்ஃபால் ( الأنفال) என்பதன் அர்த்தம் ‘போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள்’ என்று தமிழில் இஸ்லாமியவாதிகளால் மொழிபெயர்க்கப் பட்டாலும், அதன் உண்மையான அர்த்தம் ‘போரில் கொள்ளையடித்த பொருட்கள்’ என்பதாகும், பொருட்கள் என்பதில் (பாலியல் அடிமைகளாகப் பிடிக்கப்படும்) பெண்களும் உள்ளடங்குவார்கள் என்பதையும் மறக்க வேண்டாம். அன்ஃபால் எனப்படும் குரானின் எட்டாவது அத்தியாயத்தின் முதல் வசனத்தின் படி யுத்தத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்தப் பொருட்களையும் தானே ஆட்டையைப் போட முஹம்மது நபி திட்டமிடுகின்றார். ஆனால் அது நடக்காது என்பதைப் புரிந்துகொண்ட அவர், தன்னுடன் கூட இருந்தவர்களை பயம் காட்டி சமாளிப்பதற்காக அதே அத்தியாயத்தின் அடுத்த 40 வசனங்களை வீணாக்கி விட்டு 41 ஆவது வசனத்தில் ஒரு டீலுக்கு வருகின்றார்.


உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த பொருட்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் சொந்தமானதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
(குர்ஆன் 8:41)


சூரத்துல் அன்ஃபாலின் முதல் வசனத்தையும், 41 ஆவது வசனத்தையும் கவனித்தீர்கள் என்றால் அவற்றிற்கு இடையே முரண்பாட்டை தெளிவாகக் காணலாம். குர்ஆனில் எந்த முரண்பாடும் இல்லை என்று சொல்பவர்களும் இதனை சிந்திக்கலாம். முழுவதும் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் என்று முதலில் சொல்லப்பட்டாலும், அது சரிப்பட்டு வராது, இனிமேல் யாரும் கொள்ளை அடிக்க தன்னுடன் வரமாட்டார்கள் என்று உணர்ந்ததால் கடைசியாக 41 ஆவது வசனத்தில் ஒரு டீல் எட்டப் படுகின்றது. இந்த டீலைப் பற்றியும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். டுவண்டி பெர்சன்ட் இற்கான (ஐந்திலொரு) பங்கு பற்றி கூறும் பொழுது “ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவருடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் சொந்தமானதாகும்’ என்று உள்ளது.

இதிலே அல்லாஹ், தூதர், அவருடைய பந்துக்கள், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் என்கின்ற பிரிவினருக்கு 20% பங்கு சேர்கின்றது. உண்மையில் இவர்கள் யார் என்பதை தனித்தனியாகப் பார்ப்போம்.


1. அல்லாஹ் – அல்லாஹ் என்று ஒருவர் இல்லை என்பதே உண்மை. இஸ்லாமிய மத நம்பிக்கைப் படி அல்லாஹ் என்பவர் இருக்கின்றார் என்று வைத்துக் கொண்டாலும் கூட, தனது பங்கை வாங்கிக் கொள்வதற்காக அல்லாஹ் வந்ததில்லை, ஆகவே அது முஹம்மதிற்கே சொந்தமாகின்றது.


2. தூதர் – அது முஹம்மது நபிதான், ஆகவே அந்தப் பங்கு அவருக்கு நேரடியாகவே சென்று விடுகின்றது. இதில் ஆராய்வதற்கு ஒன்றுமில்லை.


3. அவருடைய பந்துக்கள் – அதாவது நபியுடைய சொந்தங்கள், ஆக இந்தப் பங்கும் முஹம்மது நபிக்குத்தான் செல்கின்றது.


4. அநாதைகள் – முஹம்மது நபியே ஒரு அநாதை என்று தான் இஸ்லாமிய வரலாறுகள் குறிப்பிடுகின்றன. அத்துடன் அல்லாஹ்வும் (தனக்கு பொண்டாட்டி இல்லை, பிள்ளை குட்டிகள் இல்லை என்று புலம்பும்) இன்னொரு பெரிய அநாதை என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஆகவே இந்தப் பங்கும் முஹம்மது நபிகே சேர்ந்து விடுகின்றது.


5. ஏழை -
‘எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். ‘என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்?’ என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) ‘பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம்‘ என விடையளித்தார்.
அறிவிப்பவர் : உர்வா (ஸஹீஹுல் புகாரி : 2567)
‘நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை’ என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார். (ஸஹீஹுல் புகாரி : 5374)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(ஸஹீஹுல் புகாரி : 5416, 6454, 5374)
ஆக ஏழை என்ற அடிப்படையில் ஏழைகளுக்கான பங்கும் முஹம்மது நபிக்கே சென்று விடுகின்றது.


6. வழிப்போக்கர் -
நபி (ஸல்) அவர்கள் “எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு வழிப்போக்கருக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது” எனக் கூறினார்கள்.
(திர்மிதி : 2299)
இப்பொழுது வழிப்போக்கர் யார் என்பதும் தெளிவாகி விட்டது, ஆக அந்தப் பங்கும் கூட முஹம்மது நபிக்கே சென்று விடுகின்றது.“ஆள்தோட்ட
பூபதி நானடா அந்த அமரதோட்ட
பூபதியும் நானடா”
ஸ்டைலில் அல்லாஹ், தூதர், அவருடைய பந்துக்கள், அநாதை, ஏழை, வழிப்போக்கர் என்று எல்லாமும் தானாகி 20% த்தையும் தானே சுருட்டிக் கொள்கின்றார் மிஸ்டர் டுவண்டி பெர்சன்ட் என என்பாக அழைக்கப்படும் முகம்மது நபி.

சுளையாக தனக்கு 20% கேட்கின்ற ஒருவரால் எப்படி மற்றவர்களுக்கு சமனாக தன்னை ‘தோழர் (சஹாபி)’ ஆக்க முடியும்? ஆகவே முஹம்மது நபி மற்றவர்களுடன் ஒரு இடைவெளியை பேணியே வந்துள்ளார், அதனால் தான் யாரும் இவரைத் ‘தோழர்’ என்று அழைக்க முடியவில்லை, அத்துடன் இவரால் டுவண்டி பெர்சன்ட் ஆட்டையைப் போடவும் முடிந்து இருக்கின்றது.


ஜிஹாத் என்பது முஹம்மது நபி வயிற்ருப் பசிக்கும், காமப் பாசிக்கும், கொள்ளை அடிப்பதற்கும் உருவாகிய ஒன்றாகும் என்பதை இஸ்லாமிய மூலாதாரங்களில் இருந்தே அறிய முடியுமாக உள்ளது. முஸ்லிம்களே, இன்று பசியால் செத்துவிடாதபடிக்கு உங்களுக்கு உணவு இருக்கின்றது, உங்களுக்கான வாழ்க்கைத் துணை இருக்கின்றது, அல்லது தேடிக் கொள்வதற்கான வசதிகள் இருக்கின்றன ஆகவே இஸ்லாமியவாதிகளின் பொய்களை நம்பி உங்கள் வாழ்க்கையை ஜிஹாத் என்று சொல்லி நாசமாக்கிக் கொள்ளாதீர்கள்.


முஹம்மது நபிக்கு தின்னக் கொடுக்கவே வக்கில்லாத அல்லாஹ்வா மரணித்த பின்னர் உங்களுக்கு சுவர்க்கத்தைத் தரப் போகின்றார்? ஆகவே ஜிஹாதில் மரணித்த பின்னர் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தருவார் என்று நம்பி உங்கள் பொன்னான வாழ்க்கையை மண்ணாக்கி விடாதீர்கள். இஸ்லாமியவாதிகள் சொல்வதையெல்லாம் நம்பி 'இஸ்லாத்திற்காக உயிர்த் தியாகம் செய்கின்றேன்' என்று உங்கள் வாழ்வையும் இழந்து, உலக அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்தாதீர்கள். முஹம்மது நபி கொள்ளை அடிப்பதற்காகவும், வயிற்ருப் பசியைப் போக்குவதற்காகவும், பெண்களை அடிமைகளாக பிடித்து ஜல்சா பண்ணிவிட்டு நல்ல விலைக்கு விற்பதற்காகவும் உருவாக்கிய பொய்களை நம்பி உங்கள் அழகான வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்ளாதீர்கள், மற்றவர்களின் அமைதியான வாழ்க்கையையும் நாசம் செய்யாதீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே தவிர சாகுவதற்கோ, கொல்லுவதற்கோ அல்ல, ஆகவே வாழு, வாழவிடு.


-றிஷ்வின் இஸ்மத்
05.11.2021