ஆணுறுப்பின் மகிமை - கோவிக்கும் அல்லாஹ்வும், சாபமிடும் மலக்குகளும்!


உலகில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன, மக்கள் தினம் தினம் இறக்கின்றார்கள், கொவிட் 19 ஒரு புறம் பாடாய்ப் படுத்துகின்றது, இன்னொரு புறம் வறுமை, பஞ்சம், பசி, பட்டினிச் சாவுகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள், வன்முறைகள், LGBTQIA+ இற்கு எதிரான வன்மங்கள், புறக்கணிப்புகள், ஜிஹாதிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் என்று கட்டுக் கட்டாக இருக்கின்ற பிரச்சினைகளுக்காக எதுவுமே செய்யாத அல்லாஹ்வும், அல்லாஹ்வின் உத்தம பணியாட்களான மலக்குகளும் (வானவர்களும்) ஒரு விடயத்திற்காக அதிக அக்கறை காட்டுகின்றார்கள் என்றால், அந்த அளவு முக்கியமான விடயம் என்ன என்று அறியும் ஆவல் உங்களுக்கும் இருக்குமல்லவா, ஆகவே தொடர்ந்து வாசித்து அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பற்றி அதிகம் அதிகம் தெரிந்து கொண்டு அல்லாஹ்வுக்கு அதிகம் அதிகமாக நன்றி செலுத்துங்கள்.


ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால், காலை விடியும் வரை வானவர்கள் அவளைச் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.” (ஸஹீஹுல் புகாரி : 3237)

 

எது எதெற்கெல்லாம் மலக்குகள் சாபமிடுகிறார்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், சிந்திக்கக் கூடிய மக்களுக்கே குர்ஆன் நல்வழி காட்டும். இஸ்லாத்தில் பெரும்பாலனவை சாபங்களாகவே உள்ளன, குர்ஆனைச் சற்று புரட்டிப் பாருங்கள், சாபங்களும், அச்சுறுத்தல்களும் நிறைந்திருக்கும். கணவன் தாம்பத்தியத்துக்கு அழைத்து மனைவி மறுத்தால் அன்றிரவு பூராக வானவர்கள் மனைவியை சாபமிட்டுக் கொண்டே இருப்பார்களாம். இதெற்கென்றே வானவர்களுக்கு ஸ்பெஷல் டியூட்டி போட்டு வைத்து உள்ளார் அன்புள்ள அல்லாஹ்.

 

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு உடன்பட மறுத்தால் வானிலுள்ளவன் (அல்லாஹ்) அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள் மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை.’ (ஸஹீஹ் முஸ்லிம் : 2830)

 

மலக்குகளை ஸ்பெஷல் டியூட்டி போட்டு வைத்ததோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று அல்லாஹ் மட்டும் சும்மா இருந்து விடவில்லை, அவரும் தன் பங்கிற்கு 😡😡 மூஞ்சியை உம்மென்று வைத்துக்கொண்டு, பற்களை நறநற என்று கடித்துக்கொண்டு குறித்த மனைவி மீது கோபத்தில் இருப்பாராம்,  எதுவரை என்றால், அந்தக் கணவனின் கோபம் குறையும் வரை....... அல்லாஹ்வும், அவளது கணவனும் ஒருவரா என்றெல்லாம் கேட்கக் கூடாது, மாறாக ஒரு கேடுகெட்ட ஆணாதிக்க வாதிக்குத்தானே இன்னொரு கேடுகெட்ட ஆணாதிக்க வாதியின் தேவைகள் புரியும் என்கின்ற அறிவியல் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆகவே கணவனின் கோவம் குறைந்து விட்டால் தான் அல்லாஹ்வின் கோபமும் குறையுமாம்...... அனைத்தையும் படைத்த அல்லாஹ், எத்தனையோ பேர் பசி பட்டினியில் வாட, எத்தனயோ சிறுவர்கள் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பொழுது அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப் படாமல், அதற்காகவெல்லாம் கோபம் கொள்ளாமல் ஒரு கணவன் கூப்பிட்டு மனைவி போகவில்லை என்றதும் அந்தப் பெண்ணோடு கோபம் கொள்வதற்கும், அவளை சபிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்து வானவர்களோடு வந்து டென்ட் அடித்து உட்கார்ந்து கொள்கின்றார் என்றால் ஒவ்வொரு அடாவடிக்கார ஆணாதிக்க கணவனும் பெருமையாக சொல்லிக் கொள்ள வேண்டிய பஞ் டயலாக் “அல்லாஹ்வே நம்ம ஆளுதாண்டா, சுபஹானல்லாஹ்” என்பதாகும். அதுமட்டுமில்லை, மனைவிக்கு அடிக்கவும் கணவர்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கின்றார் இரக்கமுள்ள அல்லாஹ். (குர்ஆன் 4:34)

 

ஒரு ஆணின் பாலுறுப்பின் மீது அல்லாஹ்வுக்கும், அவரது மலக்குகளுக்கும் எவ்வளவு அக்கறை என்று பாருங்கள், சிந்தித்துப் பார்த்தால் அல்லாஹ்வின் அறிவு எந்த அளவு உன்னதமானது என்று புரிந்து கொள்வீர்கள். இதுதான் உலக மக்களுக்கு உலகம் அழியும் வரை வழிகாட்ட எல்லாவற்றையும் படைத்த இறைவன் அனுப்பிய வழிகாட்டலாம், நம்புங்க மக்களே, நம்பினாத்தான் சுவர்க்கம். சுயமாக சிந்தித்தால் நரகத்தில் போட்டு அல்லாஹ் உங்களை பார்பிக்யூ பண்ணிடுவாரு. (எச்சரிக்கை : சிந்திப்பது ஆபத்தானது, அது உங்கள் ஈமானை பாதிப்பிற்கு உள்ளாக்கும்.)

 
உலகத்தின் முதல் பெமினிஸ்ட் எங்கள் கண்மணி பொன்மணி மானே தேனே முஹம்மது (ஸல்லுலூலு) நாயகம் அவர்கள் கொண்டுவந்த இறுதி வேதத்தில் பெண் என்பவள் ஆணுக்காக உருவாக்கப்பட்ட ஒரு வெறும் போகப் பொருள் என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் அறிவுள்ள மக்களுக்குத் தேவையில்லை. பெண்களுக்கு உடல் ரீதியாக உள ரீதியாக எத்தனயோ இன்னல்கள், இயலாமைகள் வரலாம், ஆனால் அதைப் பற்றியெல்லாம் அல்லாஹ்வுக்கு கவலை இல்லை, கணவனுக்கு காம மூட் வந்துவிட்டால் மாதவிடாய் ஏற்பட்டு இருந்தாலும் நீ போய்த்தான் ஆக வேண்டும் என்பது தான் அல்லாஹ்வின் உன்னதமான கட்டளை. பெண் மாதவிடாயில் இருந்தால் அதற்கு ஏற்ற விதமாக, நபி தனது மனைவிகளுடன் மேற்கொண்டது மாதிரியான செயலுக்கு செல்ல வேண்டும்.(நபியின் மனைவிகளான) எங்களில் ஒருத்திக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் தடவி ஆணைத்துக் கொள்ள நபி (ஸல்) அவர்கள் விரும்பினால் இடுப்பிற்குக் கீழே கச்சைத் துணியால் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டு விட்டு அவரை தடவி ஆணைத்துக் கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களின் இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தன்னுடைய இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்?“ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹுல் புகாரி :
302)( 09 வயதிலிருந்து முஹம்மது நபியோடு மட்டுமே வாழ்ந்த ஆயிஷாவுக்கு மற்ற ஆண்கள் தமது இச்சையை எப்படிக் கட்டுப் படுத்துகின்றார்கள் என்கின்ற விடயம் எப்படித் தெரியும் என்று யாரும் சிந்தக்கவோ
, கேட்கவோ கூடாது – முற்றாகத் தடை. ஷைத்தான் மாதிரி சிந்திப்பது ஹராம், ஹராம், ஹராம்.)

 

மலக்குகள் சபிக்கின்ற, அல்லாஹ் கோவம் கொள்கின்ற விடயங்கள் 'கணவனை முழுமையாக வெறுப்பவளுக்கு சொல்ல பட்டது’ என்று உருட்டுவார்கள். ஆனால் ஹதீஸில் அப்படி எந்த வாசகமும், காரணமும்  சொல்லப்படவில்லை. அவள் மறுப்பதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்பது பற்றிய கவலைகள் எதுவுமே அல்லாஹ்வுக்குக் கிடையாது, ஏனெறால் அல்லாஹ் என்பவர் 7ம் நூற்றண்டில் வாழ்ந்த ஒரு பாலைவன அரபியின் மூளையால் சிந்தித்த கற்பனைப் பாத்திரம் மட்டுமே.

 

அவன் கூப்பிட்டால் நீ போய்த்தான் ஆக வேண்டும் என்று சொல்பவர்தான் பிரபஞ்சத்தை படைத்த கடவுளாம். ஆனால் எங்கேயுமே மனைவி கூப்பிட்டு கணவன் செல்ல மறுத்தால் அவனுக்கு என்ன சாபம் கிடைக்கும் என்றவாறான விபரங்களை எங்கேயுமே காண முடியாது. ஏனெறால் இது முழுக்க முழுக்க அன்றைய பாலைவன அரபியாவில் வாழ்ந்த நெறி அறியாத, பாலின சமத்துவம் தெரியாத ஒரு பாலைவன அரபியின் உளறல்கள் மட்டுமே என்று சாமானிய புத்தியுடன் சிந்திப்பவர்களுக்கே விளங்கும்.(இஸ்லாமிஸ்ட் மைன்ட் வொயிஸ் : “இப்போ நாம என்ன செய்யலாம்
???? இதற்கு நேரடியாக பதில் சொல்ல வழியில்லை தான், ஆனாலும் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தால் மானம் போயிருமே, ஆகவே ‘உங்களில் யார் தனது மனைவிக்கு நல்லவரோ அவர்தான் உங்களில் நல்லவர்’ என்ற மாதிரியான சம்மந்தமில்லாத நான்கைந்து ஹதீஸ்களை எடுத்து உருட்ட வேண்டியதுதான்” )


கடைசியாக, அல்லாஹ் மிக்க இரக்கமுள்ளவர் - ஆணுறுப்பின் மீது!

 

(மேம்படுத்தப் பட்ட பதிவு, மூலப் பதிவு Ahmed Abdullah விற்குச் சொந்தமானது)