பச்சைப் பயங்கரவாதம் - கண்ட இடத்தில் கொல்லக் கட்டளையிடும் இஸ்லாம்

இந்தப் பதிவை முஹம்மது நபி அவர்களின் போதனையுடன் ஆரம்பிகின்றேன்.


صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ يَأْتِي فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ حُدَثَاءُ الأَسْنَانِ، سُفَهَاءُ الأَحْلاَمِ، يَقُولُونَ مِنْ خَيْرِ قَوْلِ الْبَرِيَّةِ، يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، لاَ يُجَاوِزُ إِيمَانُهُمْ حَنَاجِرَهُمْ، فَأَيْنَمَا لَقِيتُمُوهُمْ فَاقْتُلُوهُمْ، فَإِنَّ قَتْلَهُمْ أَجْرٌ لِمَنْ قَتَلَهُمْ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏‏.‏

மொழிபெயர்ப்பு :

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள்: அவர்கள் இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச் பேசுவார்கள். அவர்கள், வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எய்த) அம்பு (அதன் உடலுக்குள் பாய்ந்து மறுபுறமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அவர்களின் இறை நம்பிக்கை(யும் மார்க்க விசுவாசமும் அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயம் வரை) செல்லாது. அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அது மறுமையில் (மரணத்தின் பின்னர்) நற்பலனாக அமையும்’


ஆதரங்கங்கள் :

சஹீஹுல் புகாரி ஹதீஸ் 3611, கிதாபுல் மனாக்கிப் பாபு அலாமத்தின் நுபுவ்வத்தி, சஹீஹுல் புகாரி ஹதீஸ் 5057 பாபு இத்மி மன் ராஆ பி கிராஅத்தில் குர்ஆன் கிதாபு பழாஇலில் குர்ஆன், சஹீஹுல் புகாரி ஹதீது எண்: 6930 பாபு கத்லில் கவாரிஜி கிதாபு இஸ்த்திதாபத்தில் முர்த்தத்தீன் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 342 ஹதீது எண்: 1066-154, அபூதாவூது ஹதீது எண்: 4767, இப்னு மாஜாஹதீது எண்: 168


மேலே குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமிய மூலாதார நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ள முஹம்மது நபியின் இந்தக் கட்டளை இஸ்லாம் மதத்தில் இருந்து வெளியேறுகின்றவர்களைப் பற்றி, அல்லது வெளியேறுகின்றவர்களில் இளைஞர்களாக இருக்கின்ற ஒரு கூட்டத்தினரைப் பற்றி பேசுகின்றது. குறித்த கூட்டத்தினரை அல்லது குறித்த நபர்களைக் கண்ட இடத்திலே கொலை செய்யச் சொல்கின்றது அமைதியின் மார்க்கம் இஸ்லாம். இந்த ஹதீஸ் இலங்கை அரசின் இஸ்லாம் பாட வழிகாட்டிப் புத்தகத்தில் கூட இன்றும் இடம்பெற்றுள்ளது. கண்ட இடத்தில் கொலை செய் என்று குரூரமான பயங்கரவாதத்தை போதனையாக சொல்லி இருக்கின்றார் முஹம்மது நபி. இங்கே குற்றச்சாட்டு, விசாரணை, வழக்கு, சாட்சி, நீதிபதி, தீர்ப்பு, தண்டனை என்று எதுவுமே இல்லை, மாறாக ‘இஸ்லாத்தை விட்டு வெளியேறிச் செல்லும் அந்தக் இளைஞர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள், உங்களுக்கு சுவர்க்த்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்’ என்று போதிக்கின்றது இஸ்லாம். குறித்த போதனை ‘யுத்த களத்தைப் பற்றிப் பேசுகின்றது’ என்று சில வக்காலத்து வாங்கிகள் உருட்டக் கூடும், ஆனால் உண்மையில் அங்கே அப்படி எதுவுமே இல்லை. ‘கண்ட இடத்தில் கொல்லு’ என்று சாதாரண முஸ்லிமைக் கூட பயங்கரவாதியாக மாறத் தூண்டும் பயங்கரவாத போதனை ஹதீஸில் தெளிவாக உள்ளது.இங்கே فَأَيْنَمَا لَقِيتُمُوهُمْ فَاقْتُلُوهُمْ என்ற அரபு வாசகமே இடம்பெற்றுள்ளது, இதன் அர்த்தத்தில் யுத்த களம் என்றோ, விசாரணைக்குப் பின் என்றோ எதுவுமே இல்லை. لَقِي (லகிய) என்ற அரபுச் சொல் ‘காணுதல்’ என்பதைக் குறிக்கும், அதாவது இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கண்டால் கொன்று விடுங்கள் (எங்கு கண்டாலும் கொல்லுங்கள்) என்று போதிக்கின்றது இஸ்லாம். இது தற்காலத்திற்கு உரியது அல்ல, இறுதிக் காலத்திற்கு மட்டுமே என்று வக்காலத்து வாங்கிகள் சிலர் உருட்டலாம். இறுதிக் காலம் என்பது எப்பொழுது என்று கேட்டால், முஹம்மது பிறந்தது முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கும் உள்ள காலமே இறுதிக் காலம் என்பதை பின்வரும் ஹதீஸ், குர்ஆன் வசனங்கள் தெளிவாக சொல்லிவிடுகின்றன.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டி இறுதி நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம்'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி),
(சஹீஹுல் புகாரி 4936, 5301, 6503)


இறுதிக் காலத்திற்கான ஆறு அடையாளங்களில் ஒன்றாக முஹம்மது நபி தனது மரணத்தை குறிப்பிட்டுள்ள விடயம் சஹீஹுல் புகாரி 3176 ஆவது ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.


அந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது. (குர்ஆன் 54:1)
(*குறிப்பு : சந்திரனை முஹம்மது பிளந்ததாகச் சொல்லப்படும் கதையை இது குறிப்பிடுகின்றது, அந்த நேரம் நெருங்கி விட்டது என்பது இறுதி நாள் நெருங்கிவிட்டது என்பதை குறிக்கின்றது.)


ஆக, மேற்படி விதமாக கண்ட இடத்தில் கொலை செய்யச் சொல்வது இன்றைய காலத்திற்கான கட்டளைதான் என்பதை மேலே தரப்பட்டுள்ள ஆதாரங்களில் இருந்து அறியலாம். என்னதான் சப்பைக் கட்டுக்கள் கட்டி நியாயப்படுத்த முயன்றாலும் கூட, அது யாரையாக இருந்தாலும், எந்தக் காலத்திலாக இருந்தாலும் ஒரு மனிதனை அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டான் என்பதற்காக ‘கண்ட இடத்தில் கொல்லுங்கள்’ என்று கட்டளையிடுவது பயங்கரவாதமே அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?


முஸ்லிம்களே, நீங்கள் ‘இஸ்லாம் அமைதியின் மார்க்கம்’ என்று குருட்டுத்தனமாக நம்பி தொடர்ந்தும் ஏமாற்றப் படாதிருங்கள், சுயமாக சிந்தியுங்கள். இஸ்லாம் அமைதியின் மார்க்கம் அல்ல, அதன் ஒரு பகுதி அது பச்சைப் பயங்கரவாதம் ஆகும்.


முஸ்லிம்களே,
நீங்கள் உண்மையில் அமைதியை விரும்புகின்றவர்களா? சமாதானத்தை விரும்புகின்றவர்களா? மனிதர்களை நேசிக்கின்றவர்களா? பயங்கரவாதத்தை எதிர்க்கின்றவர்களா? நீங்கள் நேர்மையானவர்களா?
மேற்படி கேள்விகளுக்கு உங்கள் உளப்பூர்வமான பதில் “ஆம்” என்பதாக இருந்தால் நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதுதான் ஒரே வழி.


-றிஷ்வின் இஸ்மத்
18.09.2021