இன்று முஹம்மதியப் புத்தாண்டாம், வருடத்தின் முதல் நாளாம்... ஆனாலும் சில நாடுகளில் இரண்டாம் திகதி ஆகிவிட்டது, இன்னும் சில நாடுகள் இன்னுமும் கடந்த வருடத்தின் கடைசி நாளிலேயே இருக்கலாம், இதுதான் உலகத்தைப் படைத்த எல்லாம் அறிந்த அல்லாஹ்வின் வழிகாட்டலின் கோமாளித்தனம். ஒரே அல்லாஹ், ஒரே ஜிப்ரயீல், ஒரே வேதம், ஒரே நபி (ஆனால் அவருக்கு மட்டும் பல பொண்டாட்டிகள்), ஒரே தஜ்ஜால், ஒரே ஷைத்தான் என்று பாட்டுப் பாடுவார்கள், ஆனால் இஸ்லாமிய நாட்காட்டியின் திகதிகள் ஆளாளுக்கு, கூட்டத்திற்குக் கூட்டம், நாட்டுக்கு நாடு முன்னப் பின்னே குழம்பிக் ஆகிக்கொண்டே இருக்கும் கோமாளித்தனம் அல்லாஹ்வின் கலண்டரில் மட்டும்தான் நிகழும்.
தங்களது தலைவர், இறைதூதர் உயிருக்குப் பயந்து ஊரை விட்டு ஒழிந்து அகதியாக ஓடிப்போனதை புது வருடமாக வைத்து கொண்டாடும் (அல்லது நினைவுகூரும்) ஒரு கூட்டம் இந்த உலகத்தில் இருக்கும் என்றால் அது இஸ்லாமியர்களாக மட்டுமே இருக்கும். (உண்மையில் அதுதானா கதை என்பதை முழுமையாக வாசிக்கும் பொழுது புரிந்து கொள்வீர்கள்.)
கி.பி. 622 –ல் முஹம்மது மக்காவிலிருந்து யஸ்ரிப் என்ற மதீனாவிற்கு புலம்பெயர்ந்தார். இதை ஹிஜ்ரத் என்றும், அன்றிலிருந்து புதிய சகாப்தத்துடன், இஸ்லாமியக் காலக்கணக்கு துவங்குவதாக கூறுவதையும் நாம் அறிவோம். புதிய சகாப்தம் என்று அவர்கள் கூறுவதில் உண்மை இருக்கிறது. ஆம், முஹம்மதின் வாழ்கை, ஹிஜ்ரத்திற்கு முன், ஹிஜ்ரத்திற்குப் பின் என்று முரண்பட்ட இரண்டு பகுதிகளாக காணப்படுகிறது. ஹிஜ்ரத்திற்கு முன்னைய அவரது செயல்களில் கற்பனையாக உளறிக் கொண்டிருந்தது, மற்றவர்களை வசை பாடியது மற்றும் குழந்தை ஆயிஷாவைத் திருமணம் செய்தது ஆகியவற்றைத் தவிர மத ரீதியில் குற்றம் சொல்ல பெரிய விடயங்கள் என்று குறைவாகவே உள்ளன.
அல்லாஹ்வின் அனுமதி என்ற பெயரில் அவர் வன்முறையாளராக மாறி பெரும் அளவிலான குற்றச்செயல்களை நிகழ்த்தியது ஹிஜ்ரத்திற்குப் பின்னர் தான். மக்கா நகரத்து குரைஷியர்களால் (இஸ்லாத்தை ஏற்காதவர்களால்) முஹம்மது மற்றும் அவரது அடியார்களின் உயிருக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டதாலேயே ஹிஜ்ரத் நிகழ்ந்ததென்றும், அவர்களுக்கு பதிலடி கொடுக்கவே வேறுவழியின்றி தாக்குதல்களும், சூறையாடல்களும் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறும் அதேவேளையில், அல்லாஹ்வின் அறிவுறுத்தல் அல்லது ஆணை காரணமாகவே முஹம்மதும், அவரது சீடர் குலாமும், தங்களது தாயகமான மக்கா நகரை பிரிந்து செல்ல நேர்ந்தது என்று முரண்பாடகவும் கூறுவார்கள்.
இஸ்லாமியர்களின் கூற்றுப்படி, முஹம்மதிற்கு ஆதரவாக இருந்த அபூதாலிப், சீமாட்டி கதீஜா ஆகியோரின் மரணத்திற்குப் பிறகு அவரது வாழ்க்கையும், பொருளாதார நிலைமையும் கேள்விகுறியாகிறது. இன்றைய ரூபாய் மதிப்பில் சுமார் 264 ஆயிரம் கோடி மதிப்புடைய சீமாட்டி கதீஜாவின் செல்வம் முழுவதையும் முஹம்மது இஸ்லாமின் வளர்ச்சிக்காக செலவு செய்து ஓட்டாண்டியாகிவிடுகிறார் என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
முஹம்மதுவைப்பற்றி வர்ணனை செய்யும் பொழுது அவர் குறைஷிகளின் கூட்டத்திலேயே மிகச்சிறந்த பண்பாளர், நம்பிக்கையாளர் ”அல்அமீன்” என்றெல்லாம் கதையளப்பார்கள். ஆனால் குர்ஆனோ முஹம்மதிற்கு, குறைஷிகளிடையே அப்படியொன்றும் மகத்தான மரியாதை இருந்ததில்லை என்கிறது.
"இவ்விரு ஊர்களில் உள்ள மகத்தான மனிதருக்கு இந்தக் குர்ஆன் அருளப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுகின்றனர். (குர் ஆன் 43:31)
மகத்தான மனிதர் என்று குறைசிகள் ஏற்றுக்கொண்டிருந்த ஒருவராக முஹம்மது இருந்திருந்தால், அவர்கள் இப்படி ஒரு கேள்வியை கேட்டு இருக்க மாட்டார்கள், அவர்கள் கேட்டதாக குர்ஆனில் சொல்லப்பட்டும் இருக்காது.
தங்களது கடவுளர்களை தரக்குறைவாக ஏசுகிறார் என்ற முறையில் முஹம்மதின் மீது மக்கத்து குறைஷிகளுக்கு கோபமிருந்திருக்கிறது, அதை அபூதலிப்பிடம் தெரிவித்திருந்தனர். அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு மக்காவில், முஹம்மதின் உயிருக்கு உண்மையில் அச்சுருத்தல் இருந்ததா என்பதற்கு முஹம்மது தரப்பில் முன்வைக்கப்படும் ஹதீஸ்களில் இரண்டைப் பார்ப்போம்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது (அபூஜஹ்ல், உக்பா பின் அபீமுஐத் உள்ளிட்ட) குறைஷிக் குழாம் ஒன்று தங்கள் அவையில் கூடியிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன், (பொது இடத்தில் தொழும்) இந்த பகட்டுக்காரரை நீங்கள் பார்க்கவில்லையா? என்று கூறிவிட்டு, இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதன் சாணத்தையும், அதன் இரத்தத்தையும் அதன் கருவைச் சுற்றியுள்ள சவ்வையும் கொண்டுவந்து, முஹம்மத் சிரவணக்கம் செய்யும் நேரம் பார்த்து அவரது முதுகின் மீது அதை வைத்து விட வேண்டும். (யார் இதற்குத் தயார்?) என்று கேட்டான். அங்கிருந்தவர்களிலேயே படுபாதகனாயிருந்த ஒருவன் (அதற்கு) முன்வந்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்த போது அவர்களுடைய முதுகின்மீது அ(ந்த அசுத்தத்)தைப் போட்டனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியே சிர வணக்கம் செய்தவாறே இருந்தார்கள்.
(இதைப் பார்த்துக் கொண்டிருந்த குறைஷியர்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். உடனே ஒருவர் (நபி (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கிச் சென்றார்.
-அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிறுமியாக இருந்தார்கள். (செய்தியறிந்த) ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஓடோடி வந்தார்கள்.
அவர்கள் வந்து அசுத்தங்களை அவர்களை விட்டும் எடுத்தெறியும்வரை நபியவர்கள் அப்படியே சிரவணக்கம் செய்தபடியே இருந்தார்கள். அ(வ்வாறு செய்த)வர்களைப் பார்த்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏசினார்கள்... (புகாரி 520)
ஃபாத்திமா மட்டும் அங்கு வரவில்லையென்றால் மூச்சுதிணறி முஹம்மது இறந்திருப்பார் என்று கண்ணீர் மல்க மதப் பரப்புரை செய்வதை நீங்கள் அறிவீர்கள். மற்றொரு ஹதீஸையும் பார்ப்போம்.
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது? என்று நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், (ஒரு முறை மக்காவில்) உக்பா பின் அபீ முஐத் என்பவன், நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களுடைய கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை நான் பார்த்தேன்...
(புகாரி 3678)
மேலே உள்ள ஹதீஸ்களின் பிரகாரம் அபூதாலிப், மற்றும் செல்வச் சீமாட்டி கதீஜாவின் மரணத்திற்குப் பிறகு, மக்கத்து குரைஷிகளால் முஹம்மதின் உயிருக்கு பாதுகாப்பில்லாமல் இருந்ததெனக் கூறிக்கொள்வது அல்லாஹ்விற்கும், குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் நேர் எதிரானது. ஏனெனில் முஹம்மது, அல்லாஹ்வின் உயர்மட்ட பாதுகாப்பிலிருப்பவர். முஹம்மதிற்கு எதிராக சூழ்ச்சி செய்வதைக்கூட அனுமதிக்க முடியாது என்கின்றது குர்ஆன்.
… எனவே, நிச்சயமாக அவன், அவருக்கு முன்னாலும், அவருக்குப் பின்னாலும் பாதுகாவலரை நடத்துகிறான். (குர் ஆன் 72:27)
தீய காரியங்களுக்காக சூழ்ச்சி செய்தோரை பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்து விடுவான்; அல்லது அவர்கள் அறியாத விதத்தில் வேதனை அவர்களுக்கு வந்து விடும்; அல்லது தமது காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களை அவன் பிடிப்பான். (குர்ஆன் 16:45)
அபூதாலிப் அல்லது கதீஜா இருந்தாலும் இல்லையென்றாலும் அல்லாஹ்விவின் பாதுகாப்பில் எந்த மாற்றமும் இருக்க முடியாதல்லவா? ஆனால் இவர்களோ முஹம்மதிற்கு எதிராக, குறைஷிகள் கடுமையான தொல்லைகள் விளைவித்ததாகவும், கொலை செய்ய முயன்றதாகவும், அவற்றிலிருந்து தப்புவதற்காகவே மக்காவை விட்டு முஹம்மது மதீனாவிற்கு எஸ்கேப் ஆகியதாகவும் கூறுவதன் மூலம் அல்லாஹ்வை கையாலாகாத கடவுளாக மாற்றிவிட்டனர். அல்லாஹ் மக்காவில் முஹம்மதிற்கு ஏற்படுத்திக் கொடுத்து இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப்பற்றி இந்த ஹதீஸ் கூறுவதைப் பாருங்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:(மக்காவில் ஒரு முறை) அபூஜஹ்ல், "உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?'' என்று கேட்டான். அப்போது "ஆம்' என்று சொல்லப்பட்டது. அவன், "லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடரியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்'' என்று சொன்னான்.
அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான். அப்போது அவன் தன் கைகளால் எதிலிருந்தோ தப்பிவருவதைப் போன்று சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர். அவனிடம், "உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவன், "எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் பீதியையும் இறக்கைக(ள் கொண்ட வானவர்)களையும் கண்டேன்'' என்று சொன்னான்.
(இதைப் பற்றிக் கூறுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்'' என்று சொன்னார்கள். (ஸஹீஹ் முஸ்லீம்)
இங்கு, முஹம்மதைத் தாக்கும் நோக்கில், அபூஜஹ்லால், நெருங்கக்கூட முடியவில்லை, மீறி நெருங்கியிருந்தால் அவனது உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்து எடுத்திருப்பார்களாம். இதே அபூஜஹ்லும் அவரது நண்பர்களும் ஒட்டகத்தின் கருப்பை சவ்வுகளை முஹம்மதின் தோள்மீது இட்டபொழுதும், உக்பா பின் அபீமுஐத் போர்வையால் மூச்சு திணறுமளவிற்கு முஹம்மதின் கழுத்தை நெரித்த பொழுதும் அவர்களுக்கு ஏன் எதுவும் நிகழவில்லை? பாதுகாப்பிற்காக அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட மலக்கு எங்கே போனார்? டீ, காப்பி குடித்துவிட்டு, பீடி பற்றவைத்துக் கொண்டு வரலாம் என்று பக்கத்தில் எங்காவது டீக்கடைக்கு போயிருந்தாரோ? ஏனெறால் மேற்படி அநியாயங்களை செய்தவர்களது உடல் உறுப்புகள் பிய்த்தெடுக்கப்படவில்லையே ஏன்? இதற்கான பதிலை இஸ்லாமியர்கள்தான் கூறவேண்டும்.
சரி..! இப்படியொரு படுபயங்கரமான(!?) வானவர்களின் பாதுகாப்பு இருக்கையில், மக்காவை விட்டு எதற்காக தப்பி மதீனாவிற்கு ஓட வேண்டும்? ட்விஸ்ட்டு அங்கேதான் இருக்கின்றது.
மதீனாவாசிகளிடம் ஏன் தனது பாதுகாப்பு, அந்த ஒப்பந்தம், இந்த ஒப்பந்தம் என்று கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும்? இதே வானவர்கள் மதீனாவிற்கு வந்து முஹம்மதைப் பாதுகாக்கமாட்டாரா? ஹிஜ்ரத்தின் அவசியம்தான் என்ன? தனது ஏற்பாடுகளின் மீது அல்லாஹ்விற்கே நம்பிக்கையில்லையா?, அல்லது மலக்குகள் மனிதர்களைவிட மிகபலவீனமானவர்களா?
ஹிஜ்ரத்திற்கு காரணம் என்னவென்று இப்படி மண்டை பிய்த்துக் கொள்ளவேண்டியதில்லை. மதீனாவில் தனக்கு ஆதரவு பெருகியிருப்பதாக முஹம்மது கருதினார் அதனால் மதீனா சென்றுவிட்டார் அவ்வளவுதான். அந்த அதரவை எதற்காகப் பயன்படுத்தினார், அதனை வைத்து என்னென்ன செய்தார் என்பதுதான் முக்கியம்.
முஹம்மது தன்னை அல்லாஹ்வின் தூதரென்று அறிவித்துக் கொண்ட பத்தாம் ஆண்டில் தனது கொள்கைகளை மக்கா நகருக்கு வெளியிலிருப்பவர்களுக்கும் சொல்ல ஆரம்பித்தார். ஹஜ்ஜின் காலம் துவங்கியவுடன் கஃபாவை வணங்க வந்த யஸ்ரிப்வாசிகளிடமும் தனது மத வியாபாரத்தை செய்கிறார். அது அவருக்கு நல்ல பலனைக் கொடுத்தது. அதன் பயனாக தனது விற்பனைப் பிரதிநிதிகளை யஸ்ரிப் என்ற மதீனாவில் நியமித்து வியாபாரத்தை வளர்த்தெடுக்கிறார். இந்நிலையில் கல்வியறிவு இல்லாத யஸ்ரிப்(மதீனா)வாசிகளுடன் அகபாவில் ரகசியமாக சந்தித்து இரண்டு முறை ஒப்பந்தங்களையும் செய்துகொள்கிறார்.
முதல் ஒப்பந்தத்தில், தன்னைப் பற்றிய செய்தியை யஸ்ரிப்பில் பரப்ப ஏற்பாடு செய்கிறார். இதன் பயனாக முஹம்மதை ஏற்றுக் கொண்டவர்களுடன் இரண்டாம் ஒப்பந்தமும் ஏற்படுகிறது. இப்னு அப்பாஸ் அப்துல் முத்தலிப், முஹம்மதின் சார்பாக பேசுகிறார்.
“கஸ்ரஜ் கூட்டத்தினரே! முஹம்மது எங்கள் மக்களிடம் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் இருக்கிறார். எனினும் அவர் உங்களுடன் இணைந்துவும், உங்களுடன் ஒன்றிவிடவும் விரும்புகிறார். அவரது பாதுகாப்பை கவனத்தில் கொள்ளவதாக இருந்தால் நீங்கள் அழைத்துச் செல்லலாம்” என்றார். கஅப் என்பவர் மதீனாவாசிகளின் சார்பாக உறுதிமொழி அளிக்கிறார்.
(இப்ன் ஹிஷாம்)
“O people of al-khazraj (the Arabs used the term to cover both Khazraj and Aus). You know what position Muhammad hold among us. We have protected him from our own people who think as we do about him. He lives in honour and safety among his people, but he will turn to you and join you. If you think that you can be faithful to what you have promised him and protect him from his opponents, then assume the burden you have undertaken. But if you think that you will betray and abandon him after he has gone out with you, then leave him now. For he is safe where he is.” …
(Page 203, Life of Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah By A.Guillaume)
மக்காவில் முஹம்மது, தக்க பாதுகாப்புடன் தான் இருந்திருக்கிறார் என்பதை இப்னு அப்பாஸின் “முஹம்மது எங்கள் மக்களிடம் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் இருக்கிறார்” என்ற வார்த்தைகள் உறுதி செய்கின்றன. எனினும் அவர் மதீனாவுக்கு செல்வது அவரது தனிப்பட்ட ஆசை காரணமாகவே என்பதை இங்கு கவனிக்கவேண்டும். ஆனால், முஹம்மது ஹிஜ்ரத் செய்ததற்கு, அல்லாஹ் கூறும் காரணங்களை கவனித்துப் பாருங்கள்’
தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? (குர்ஆன் 9:13)
மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களுக்குப் புகலிடம் அளித்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான். (குர் ஆன் 8:26)
(தூய்மையானது என்று உணவாக எதை அழித்தான் என்று பார்த்தல் பச்சைத் தண்ணியும், பேரித்தம் பழமும் தான் அந்த தூய்மையானவை என்பதை ஆயிஷா சொல்லும் ஹதீஸில் காணலாம்.)
முஹம்மதை குறைஷிகள் என்ன செய்தனர் என்பதில் அல்லாஹ்வினால் ஒரு தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை போலும்!. மேலும் ஹிஜ்ரத்தின் பொழுது மக்காவில் 70-80 பேர்களே முஹம்மதை ஏற்றிருந்தனர்.
உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன். (குர்ஆன் 8:30)
1. மக்காவாசிகள் முஹம்மதை பிடித்து வைத்துக்கொள்ள சூழ்ச்சி செய்தனர்,
2. மக்காவாசிகள் முஹம்மதை கொலை செய்ய சூழ்ச்சி செய்தனர்,
3. மக்காவாசிகள் முஹம்மதை மக்காவிலிருந்து வெளியேற்ற சூழ்ச்சி செய்தனர்.
அல்லாஹ் கூறும் இந்த மூன்று காரணங்களும் ஒன்றுக்கொன்று முரணானவைகள்.
1. முஹம்மதை, மக்காவிலிருந்து வெளியேற்ற விரும்புபவர்கள், அவரை எதற்காக பிடித்து வைக்க வேண்டும்?
2. முஹம்மது தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக பிடித்து வைக்க சூழ்ச்சி செய்பவர்கள், எதற்காக அவரைக் கொல்வதற்காக சூழ்ச்சி செய்ய வேண்டும்?
3. முஹம்மதை கொல்ல சூழ்ச்சி செய்பவர்கள், ஊரைவிட்டு எதற்காக வெளியேற்ற சூழ்ச்சி செய்ய வேண்டும்?
இதற்கெல்லாம் மேலாக அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறானாம்! சர்வவல்லமையுடையதாக கூறிக்கொள்ளும் அல்லாஹ்விற்கு, மக்காவில் புகலிடம் அளிக்கவோ, பலப்படுத்தவோ முடியவில்லை. இதை அல்லாஹ்வின் இயலாமை என்று கூறுவதே சரியானது. இதனால்தான் அல்லாஹ்வின் திட்டப் படியே முஹம்மது மதீனா சென்றார் என்றொரு சமாளிப்பை கூறுகின்றனர். உண்மையில், முஹம்மதின் ஆதரவாளர்கள் அனைவருமே ஹிஜ்ரத் செய்வதை விரும்பினர் என்று கூறுவதற்கில்லை, அவர்களில் சிலருக்கேனும் விருப்பமில்லாமல் இருந்திருக்க வேண்டும், ஹிஜ்ரத் செய் என்று முகம்மதுடன் இருந்தவர்களை அல்லாஹ் எப்படியெல்லாம், கெஞ்சுகிறான், மிரட்டுகிறான் என்பதைப் பாருங்கள்.
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவிகள் செய்தோரும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர், ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (குர் ஆன் 8:72)
அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்பவர் பூமியில் அதிகமான புகலிடங்களையும், வசதிகளையும் பெற்றுக் கொள்வார். அல்லாஹ்வை நோக்கியும், அவனது தூதரை நோக்கியும் ஹிஜ்ரத் செய்து தன் வீட்டை விட்டு புறப்பட்டுச் செல்பவருக்கு மரணம் ஏற்பட்டால் அவருக்குரிய கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும். (குர் ஆன் 4:100)
.. உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நீங்கள் நம்பியதற்காக இத்தூதரையும், உங்களையும் (ஊரை விட்டு) அவர்கள் வெளியேற்றினார்கள். அவர்களிடம் இரகசியமாக அன்பைச் செலுத்துகிறீர்கள். நீங்கள் பகிரங்கப்படுத்தியதையும், மறைத்ததையும் நான் நன்கு அறிபவன். உங்களில் இதைச் செய்பவர் நேர்வழி தவறி விட்டார். (குர் ஆன் 60:1)
மக்காவாசிகளின் நோக்கம் என்னவாக இருந்தது என்பதைக்கூட எல்லாம் வல்ல அல்லாஹ்வால் தெளிவுபடக் கூறமுடியவில்லை. முன்னுக்குபின் முரணாக ஏதேதோ உளறுகிறான். தங்களை அடித்து விரட்டியவர்களிடம் எவனாவது இரகசியமாக அன்பைச் செலுத்துவானா? இருக்க முடியாது! அப்படியெனில் விரட்டப்பட்டதாகக் கூறுவது பொய்! குறைஷிகள் மக்காவைவிட்டு வெளியேறுபவர்களைத் தடுக்க முயன்றனர் என்பதே மெய்! ஹுதைபியா ஒப்பந்தத்திலும்கூட குறைஷிகள், தங்கள் தரப்பிலிருந்து முஹம்மதிடம் வருபவர்களை திருப்பி தங்களிடமே அனுப்பிட வேண்டுமென்ற நிபந்தனை விதித்தனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
முஹம்மதின் சீடர்களில் பெரும்பாலும், அடிமைகளும், போக்கிரித்தனமாக ஊரைச்சுற்றிக் கொண்டிருந்த சில இளைஞர்களுமே இருந்தனர்! அரேபியர்கள், அடிமைகளைத் தங்களது உடமைகளாகவே கருதிவந்தனர். உதாரணத்திற்கு, உங்களுக்குச் சொந்தமான கால்நடைகளை பகிரங்கமாக கவர்ந்து செல்லப்படுவதை நீங்கள் அனுமதிப்பீர்களா? நிச்சயமாக இல்லை! குறைஷிகள் அதையே செய்தனர். மாற்றப்படி முஹம்மது செய்து வந்த மதப் பிரச்சாரத்தைப் பற்றி யோசித்து யோசித்து தூக்கம் தொலைந்து அவரையும், சஹாபாக்களையும் கூட்டுப் படுகொலை செய்கின்ற அளவுக்கெல்லாம் கொடூரமாக இருக்கவில்லை.
முஹம்மதின் மக்கா வாழ்க்கையில் யூதர்கள் இடம் பெற்றிருக்கவில்லை, எனவே கதையில் வில்லன் தேவை என்பதால் பழி குறைஷிகளின் தலையில் போடப்பட்டது. இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது, அது என்னவென்றால் முஹம்மதிற்காக பரிந்து பேசிய அவரது பெரிய தந்தை அப்பாஸ், முஹம்மதையும், அவரது கூட்டத்தினரையும் எதிர்த்துப் போராட அபூஜஹ்லுடன் இணைந்து பத்ரு யுத்த களத்திற்கு வந்து, முஹம்மதிடம் கைதியாக மாட்டிக் கொண்டது தான். (முஹம்மதின் கதை, மிகவும் பலவீனமான திரைக்கதை! முன்னாலே சென்றால் கடிக்கிறது பின்னாலே சென்றால் உதைக்கிறது) ஆக, முஹம்மது தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் மக்காவில் இருந்தே வெளியேறி மதீனா சென்று தண்ணிப் பலப்படுத்திக்கொண்டு மக்காவாசிகளை கொள்ளை அடிக்க முயற்சி செய்ததால் தான் யுத்தம் ஏற்பட்டுள்ளது, அதனால் தான் முஹம்மதிற்கு ஒரு காலத்தில் அதரவு கொடுத்த அவரது பெரிய தந்தை தனது ஊர் மக்களையும், அவர்களது வியாபாரப் பொருட்களையும் பாதுகாக்க போருக்கு வர வேண்டியாகிவிட்டது. மக்கா வாசிகள் முஹம்மதை தாக்க வந்தார்கள் என்பதெல்லாம் விக்டிம் கார்ட் ப்ளே பண்ணுவதற்காக உருவாக்கப்பட்ட பொய் ஆகும்.
முஹம்மதியர்களிடம், ஹதீஸ்கள் ஏன் இவ்வளவு கேணத்தனமாக, முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது என்றால் அது யூதர்களின் சதி என்பார்கள். சில வாரங்களுக்கு முன், இஸ்லாமிய அறிஞர்கள் சிலருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, ”கற்றறிந்த உங்களைப் போன்ற ஆலீம்களே குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் பலவிதமாக குழப்பமாக பொருள் கூறிக்கொள்வது ஏன்?” என்றேன். அதற்கு ஒரு ஆலீம் கூறினார், “இஸ்ரேலில், குர்ஆன், மற்றும் ஹதீஸ்களை தீவிரமாக ஆய்வு செய்வதற்கென்றே தனித்துறை ஒன்று செயல்படுகிறது. அங்கு நடைபெறும் மிக முக்கியமான பணி என்னவெனில், குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் தவறான, குதர்க்கமான பொருளையும், அதை முஸ்லீம்கள் மத்தியில் கூறும் போலி ஆலீம்களை உருவாக்கி, உலகம் முழுவதிலும் பரவச்செய்து குழப்பத்தை உருவாக்கி இஸ்லாமை அழிப்பதுதான் யூதர்களின் நோக்கம்” என்றார்.
நான், ”நமது ஆலீம்களான ஜாகீர் நாயக், பீஜே, அப்துல்லா ஜமாலி, சம்ஸுதீன் காஸிமி, Dr.K.V.S. ஹபீப் முஹம்மது போன்றவர்களும் அந்த யூதர்களின் மதரஸாவில் படித்தவர்களோ?” என்றபொழுது அந்த ஆலீமின் முகத்தில் தெறித்த எரிச்சலை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்! கருத்து சொன்னால் கேட்கவேண்டும் ஆராயக்கூடாது. இதுதான் இஸ்லாம்!
இவர்கள் இப்படியே தொடந்தால், இமாம்கள் அபூஅப்தில்லாஹ், அல்ஹஜ்ஜாஜ், புகாரி, ஷாபி, அபூ ஹனீபா போன்ற பெயர்களில் வந்தவர்கள் எல்லாம் யூதர்கள் என்று விரைவில் கூறிவிடுவார்கள் என்று நம்பலாம். அல்லாஹ்வின் மற்றொரு வஹீயான ஹதீஸ்களில் விதவிதமாக கைவரிசையை காட்டிய யூதர்கள், குர்ஆனை விட்டு வைத்திருப்பார்களா? சரி, நாம் ஹிஜ்ரத்தை தொடர்வோம்.
இவ்வாறாக யஸ்ரிப்(மதீனா)வாசிகள் தங்களது உயிரைகொடுத்து பாதுகாப்போம் என்று உறுதிமொழியளித்த பின்னர், தனக்குத் தக்க பாதுகாப்பு கிடைக்கும் என்று தெளிவடைந்த பிறகுதான் முஹம்மதிற்கு ஹிஜ்ரத் செய்வதற்கு அல்லாஹ்(!)விடமிருந்தும் அனுமதி வருகிறது. (இல்லாத) அல்லாஹ் எப்படியும் தன்னை பாதுகாப்பான் என்று குருட்டுத்தனமாக முடிவெடுத்து ஓடுவதற்கு அவரென்ன அப்பாவி முஹாஜிரா?
இல்லாத எதிரியைக் கண்டு அஞ்சி நடுங்கிய முஹம்மது, ஒருவழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு, கிபி 622 செப்டம்பர் 12ல் மூளை செத்துப்போன தனது நண்பர் அபூபக்கர் துணையுடன் வீட்டிலிருந்து வெளியேறி மதீனா சென்றடைகின்றார். மதீனா வந்த பிறகும் முஹம்மதின் அச்சம் தீரவில்லை, தனது கூடாரத்தை பாதுகாக்க இரவு நேர காவலுக்கும் ஏற்பாடுசெய்து கொள்கிறார். மலக்குகளின் பாதுகாப்பு என்னவாயிற்று என்று குறுக்கு கேள்விகள் கேட்கக்கூடாது!
உண்மையில் முஹம்மது மக்காவை விட்டு மதீனாவிற்கு எஸ்கேப் ஆகியது அவரது பாதுகாப்பிற்காகவா, இல்லை வேறு ஏதாவது திட்டத்துடனா என்பதை அறிய விரும்பினால்.........
முஹம்மது மக்காவில் வாழும் பொழுது :
1. செய்த யுத்தங்கள், கொலைகள், கொள்ளைகள், கொலை முயற்சிகள், கொலை செய்ய, வன்முறையில் ஈடுபட மற்றவர்களைத் தூண்டியது போன்றவற்றின் மொத்த எண்ணிக்கை = பூச்சியம்.
2. வைத்திருந்த பாலியல் அடிமைகளின் எண்ணிக்கை = பூச்சியம்
3. ஒரே தடவையில் வாழ்ந்த மனைவிகளின் எண்ணிக்கை = ஒன்று மட்டுமே
முஹம்மது மதீனா சென்ற பின்னர் :
1. செய்த யுத்தங்கள், கொலைகள், கொள்ளைகள், கொலை முயற்சிகள், கொலை செய்ய, வன்முறையில் ஈடுபட மற்றவர்களைத் தூண்டியது போன்றவற்றின் மொத்த எண்ணிக்கை = எழுபத்தைந்திற்கும் மேல்
2. வைத்திருந்த பாலியல் அடிமைகளின் எண்ணிக்கை = பல (கணக்கில் கூட ஒற்றுமையான எண்ணிக்கை கிடையாது)
3. ஒரே தடவையில் வாழ்ந்த மனைவிகளின் எண்ணிக்கை = பத்து அல்லது அதற்கும் மேல்.
இப்பொழுது புரிந்திருக்கும், முஹம்மது தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மதீனாவுக்கு அகதியாக சென்றாரா இல்லை வேறொரு நோக்கத்துடன் சென்றாரா என்பது.
தங்களது தலைவர் (இறைதூதர்) உயிருக்குப் பயந்து ஊரை விட்டு ஒழிந்து அகதியாக ஓடிய நிகழ்வைத்தான் முஸ்லிம்கள் உண்மையில் புது வருடமாக கொண்டாடுகின்றார்களா என்றால் இல்லை என்பதே பதில். மாறாக தங்களது தலைவர் (இறைதூதர்) ஒரு அமைதியான வேடத்தில் இருந்து வன்முறையாளராக, கொள்ளைக்காரனாக, கொலைகாரனாக விஸ்வரூபம் எடுத்த நிகழ்வையே புத்தாண்டு என்று கொண்டாடுகின்றார்கள் (அல்லது நினைவுகூருகின்றார்கள்.)
(இறையில்லாத இஸ்லாம் வலைத்தள பதிவாளரும், ‘ஆரம்பத்தை நோக்கி’ நூலாசிரியருமான தஜ்ஜால் அழிப்பவன் அவர்களின் பதிவு சில மாற்றங்களுடன் அனுமதி பெற்று நன்றியுடன் பகிரப் படுகின்றது.)