அனைத்தையும் படைத்த, யாவற்றையும் நன்கறிந்த இறைவன் என்று இஸ்லாம் கூறும் அல்லாஹ்விற்கே சூரிய, சந்திர கிரகணங்கள் எப்படி ஏற்படுகின்றன என்கின்ற சாதாரண நிலை அறிவியல் தகவல்கள் தெரியாமல் போய்விட்டது என்றால் ஆச்சரியாமாக இல்லையா?
யாவற்றையும் படைத்த, யாவற்றையும் நன்கறிந்த (இன்னுமின்னும் பலப் பல பில்டப்புகள் கொடுக்கப்பட்டுள்ள) அல்லாஹ்வின் இறுதித் தூதர் என்று தன்னை சொல்லிக்கொண்ட முஹம்மது அவர்கள் சூரிய, சந்திர கிரகணங்களை எப்படி நோக்கினார் என்பதை இப்பொழுது இஸ்லாமிய புனித நூல்களில் இருந்து பார்ப்போம்.
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் உலகமுடிவு நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்றவர்களாக எழுந்து பள்ளிக்குச் சென்றார்கள். நிலை, ருகூஉ, சஜ்தா ஆகியவற்றை நீண்ட நெடிய நேரம் செய்து தொழுதார்கள். நான் ஒரு போதும் அவர்கள் அவ்வாறு செய்யக் கண்டதில்லை. (தொழுகை முடிந்ததும்), அல்லாஹ் அனுப்பிவைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் ஏற்படுவனவல்ல. எனினும் அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார்கள்.
நூல் : ஸஹீஹுல் புஹாரி, ஹதீஸ் இலக்கம் : 1059
அரபியில் ஒரிஜினல் ஹதீஸ் கேட்பவர்களுக்காக அறிவிப்பாளர் வரிசையுடன் :
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ خَسَفَتِ الشَّمْسُ، فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَزِعًا، يَخْشَى أَنْ تَكُونَ السَّاعَةُ، فَأَتَى الْمَسْجِدَ، فَصَلَّى بِأَطْوَلِ قِيَامٍ وَرُكُوعٍ وَسُجُودٍ رَأَيْتُهُ قَطُّ يَفْعَلُهُ وَقَالَ " هَذِهِ الآيَاتُ الَّتِي يُرْسِلُ اللَّهُ لاَ تَكُونُ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلَكِنْ يُخَوِّفُ اللَّهُ بِهِ عِبَادَهُ، فَإِذَا رَأَيْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَافْزَعُوا إِلَى ذِكْرِهِ وَدُعَائِهِ وَاسْتِغْفَارِهِ "
மேலும் இதனைப் போன்று உள்ள பல ஹதீஸ்களில் ஒரு சில :
'சூரிய, சந்திர கிரகணங்கள் இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை. எனவே இவற்றை நீங்கள் கண்டால் அவை உங்களைவிட்டு விலக்கப்படும் வரை தொழுங்கள்! [ஸஹீஹுல் புஹாரி, ஹதீஸ் இலக்கம் : 1212 ]
இதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விடும்படியாக முஹம்மது பண்ணிய மாபெரும் காமடியை கீழே உள்ள ஹதீஸில் காணலாம்.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அதற்காகத் தொழுதார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க முயன்றுவிட்டுப் பின்வாங்கினீர்களே?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். 'எனக்குச் சுவர்க்கம் எடுத்துக் காட்டப் பட்டது. அதிலிருந்து ஒரு பழக்குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். [ஸஹீஹுல் புஹாரி, ஹதீஸ் இலக்கம் : 748 ]
( ராமன் முஸ்லிம், ராவணன் முஸ்லிம், MGR முஸ்லிம், காசியப்பன் முஸ்லிம், சீகிரியாக் கோட்டை இலங்கையின் பண்டைய ஜும்மாப் பள்ளிவாசல் என்றெல்லாம் பீலா விடுகின்றவர்களுக்கு பீலா விடுவதில் யார் முன்னோடி என்று புர்கிகின்றதா? )
சிந்திக்கக் கூடிய நண்பர்களே, முஸ்லிம்களே, கிரகணங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பது இன்று வாழும் சாதாரண மனிதனுக்குக் கூட தெரிந்து இருக்கின்றது, ஆனால் அனைத்தையும் படைத்த எல்லாம் வல்ல, யாவற்றையும் நன்கறிந்த இறைவனுக்கு தெரிந்து இருக்கவில்லை என்றால் நம்பவா முடியும்? இந்த இஸ்லாமிய மதம் உண்மையிலேயே அனைத்தையும் படைத்த, யாவற்றையும் நன்கறிந்த இறைவனிடம் இருந்து வந்திருக்க முடியுமா என்பதை சற்று சுயமாக சிந்தியுங்கள். அன்று பாலைவனத்தில் வாழ்ந்த மனிதனின் அறிவு மட்டம்தானா எல்லாவற்றையும் படைத்த இறைவனின் அறிவு மட்டம்?
மேலும் “எனக்குச் சுவர்க்கம் எடுத்துக் காட்டப் பட்டது. அதிலிருந்து ஒரு பழக்குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்” என்று பச்சை பச்சையாக பீலா விட்டு தன்னை நம்பிய கல்வியறிவற்ற மக்களை எப்படியெல்லாம் முஹம்மது நபி முட்டாள் ஆக்கியிருக்கின்றார் என்பதாவது உங்கள் சுய சிந்தனைக்கு புரிகின்றதா?
உண்மையில் அனைத்தையும் படைத்த இறைவனிடம் இருந்து இந்த வேதம் வந்து இருக்குமானால், அந்த இறைவனது இறுதித் தூதர் கிரகணங்களை கண்டு உலகம் அழியப் போகின்றது என்று பயப்பட்டு, தட்டுத் தடுமாறி இருக்க மாட்டார். அப்படித்தான் முஹம்மது தடுமாறி இருந்தாலும் கூட, முஹம்மதின் பொண்டாட்டிகளுடனான பிரச்சினைகளில் எல்லாம் வஹி (இறைசெய்தி) அனுப்பி முஹம்மதிற்கு விருப்பமான முறையில் பஞ்சாயத்து செய்துவைத்த அல்லாஹ், “முஹம்மதே, நீர் கிரகணத்தை கண்டு வீணாக பயந்துவிட்டீர், அது பூமி, சந்திரன், சூரியன் ஆகியவற்றின் நகர்வுப் பாதைகளின்பால் உள்ள சாதாரண நிகழ்வே” என்று சொல்லி, முஹம்மதை அவரது மடத்தனத்தில் இருந்து அல்லாஹ் மீட்டெடுத்து இருக்க வேண்டாமா? ஆனால் அப்படிச் செய்வதற்குக் கூட அல்லாஹ்விற்குத் தெரியாமல் போய்விட்டது. ஆனாலும் கூட அந்த எல்லாம் வல்ல அல்லாஹ், முஹம்மது பயந்து போய். உலகம் அழியப் போகின்றது என்று தொழுகையில் வீழ்ந்த பொழுது நரகத்தையும், சுவர்க்கத்தையும், பழக்குலையையும் காட்டி முஹம்மதுடன் தமாஸு பண்ணி இருக்கின்றார் என்றால், அல்லாஹ் எந்த மாதிரியான அறிவாளி என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
கவலயுடன் இங்கே சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் என்னவென்றால், 7 ஆம் நூற்றாண்டில் பாலைவனத்தில் வாழ்ந்த, பூமி தட்டை, பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் உதிக்கின்றன, இரவில் சூரியன் அல்லாஹ்வின் கதிரைக்குக் கீழே சென்று சிரம் தாழ்த்தி வணக்கம் செய்துகொண்டு இருக்கின்றது, தூண் இல்லாமல் வானம் கூரை மாதிரி நிற்பாட்டப் பட்டுள்ளது, நட்சத்திரங்கள் வானத்தில் LED மாதிரி போடப்பட்டுள்ள சிறு வெளிச்சங்கள், ஒன்றிற்கு மேல் ஒன்றாக ஏழு வானங்கள் உள்ளன, ஒவ்வொரு வானங்களுக்கும் கதவு உள்ளது, தட்டினால் "வந்திருப்பது யாரு" என்று கேட்டுவிட்டு கதவை திறப்பார்கள், பெண் முகம் கொண்ட சிறகு வைத்த பேசும் கழுதையில் ஏறி வானத்திற்கு சென்று கதவைத் தட்டலாம் என்றெல்லாம் நம்பிய முஹம்மது சொன்னதை இன்றைக்கும் கூட அப்படியே தூக்கிப் பிடித்துக்கொண்டு, கல்வி அறிவு பெற்ற லட்சக்கணக்கான மக்கள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் கூட தங்கள் சிந்தனையை சிறைவைத்துவிட்டு கிரகணத்தொழுகை என்று தங்கள் அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான்.