பலருக்கு சுவர்க்கத்தைக் காட்டிய மொஹ்ஸீன் கான் காலமானார்

 

1927 ஆம் ஆண்டு லாஹுருக்குத் தெற்கே கஸூரில் பிறந்த கலாநிதி முஹம்மது மொஹ்ஸீன் கான் கடந்த புதனன்று தனது 94 ஆவது வயதில் சவூதி அரேபியாவின் மதீனா நகரில் காலமானார். குர்ஆனை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்களில் முக்கியமான ஒருவரான மொஹ்ஸீன் கான், இஸ்லாத்தின் மூலாதாரங்களில் ஒன்றான 'புகாரி' ஹதீஸ் தொகுப்பு நூலை முதன் முதலாக ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் என்ற வகையில் தனிச் சிறப்புப் பெறுகின்றார்.


இஸ்லாம் என்றால் என்ன என்ற உண்மை தெரியாமல், யாரோ முல்லாக்கள் சொல்லும் பொய்களை உண்மை என்று நம்பிக்கொண்டு, அரபில் மந்திரம் ஜெபித்துக்கொண்டு முஸ்லிம்களாக வாழ்ந்த மக்களுக்கு, உண்மையான இஸ்லாத்தையும், முஹம்மது நபியின் உண்மையான வாழ்க்கையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு புகாரியை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்ததன் மூலம் மொஹ்ஸீன் கான் உதவியுள்ளார்.


பெண்ணடிமைத்தனம், முஹம்மது நபி புரிந்த யுத்தங்கள், கொள்ளைகள், யுத்தத்தில் பெண்களைப் பிடித்து அடிமைகளாக்கி பாலியல் வன்புணர்வு செய்து விந்தையும் உள்ளே செலுத்திவிட்டு நல்ல விலைக்கு விற்பது, பருவமடையாத சிறுமியை முஹம்மது நபி திருமணம் செய்தமை, வளர்ப்பு மகனின் மனைவியை  முஹம்மது நபி திருமணம் செய்தமை, வரகா பின் நவ்பல் இறந்ததும் முஹம்மது நபியால் புதிய குர்ஆன் வசனங்களை சொல்ல இயலாமல் போகவே அவர் மனமுடைந்து தற்கொலை செய்ய முயற்சித்தமை போன்ற இஸ்லாத்தின் மோசமான அத்தியாயங்களை உலகம் அறிந்துகொள்ள இவரின் மொழிபெயர்ப்புக்களும் (குறிப்பாக புகாரி) மற்றும் இவரது வழியைப் பின்பற்றி மற்றவர்கள் மேற்கொண்ட மொழிபெயர்ப்புகளும் பாரிய அளவில் உதவியுள்ளன.


'இஸ்லாத்திலே நல்ல விடயங்கள் தானே சொல்லப்பட்டுள்ளன' என்று அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டு, உலகத்தில் உள்ள அனைவரையும் இஸ்லாத்திற்கு மதம் மாற்ற வேண்டும் என்று துடித்துக்கொண்டு இருந்த பலரும் சிந்தித்து உண்மையை உணர்ந்து இஸ்லாத்தை விட்டே வெளியேற இவரது மொழிபெயர்ப்புகள் ஆரம்பத் தூண்டுகோலாக அமைந்துள்ளன என்றால் மிகையாகாது. அந்த வகையிலே தமது வாழ்க்கையை  நரகமாக்கிக்கொண்டு, மற்றவர்களின் வாழ்க்கையயும் நரகமாக்கத் துடித்துக்கொண்டு இருந்த பலர் இஸ்லாத்தில் இருந்து வெளியேறி தமது வாழ்க்கையை சுதந்திரமான, சந்தோசமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள உதவியதன் மூலம் பலருக்கு சுவர்க்கத்தைக் காட்டியவர் என்று கலாநிதி முஹம்மது மொஹ்ஸீன் கான் அவர்களைக் குறிப்பிடலாம்.

மொஹ்ஸீன் கான் அவர்களைப் போலவே மேலும் பலரும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்துள்ள இஸ்லாமிய மூலாதார நூல்களை படித்து நேர்மையாகச் சிந்திப்பதன் மூலம் அதிகமான பக்தர்கள் மதத்தில் இருந்து சுதந்திரம் பெற்று தம்மைத் தாமே விடுதலை ஆக்கிக்கொள்ள முடியும். கலாநிதி முஹம்மது மொஹ்ஸீன் கான் அவர்களுக்கு நன்றிகள், அத்துடன் மதத்தில் இருந்து விடுதலையாகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


றிஷ்வின் இஸ்மத்
16.07.2021