இரவின் இருட்டில் நிகழ்ந்த முஹம்மது நபியின் விண்வெளிப் பயணம் - மிஃராஜ்!

 தனது முதல் மனைவியான கதீஜா மரணித்ததன் பின்னர் தனது முதல் காதலி ஃபகிதா பின்த் அபூதாலிப் (உம்மு ஹனியா) உடைய வீட்டில் இராத்தங்கி விட்டு, காலையில் எழும்பி வந்து தான் அந்த இரவில் விண்வெளிக்குப் (மிஃராஜ்) போய் விட்டு திரும்பி வந்ததாக முஹம்மது நபி கதை விட்டார். மிஃராஜ் போனதாக சொல்லப்படும் அந்த இரவில் முஹம்மது நபி யாருடைய வீட்டில் இராத்தங்கியிருந்தார் என்பதை எந்த மெளலவிகள் முஸ்லிம்களுக்கு ஒரு போதுமே சொல்லித்தர மாட்டார்கள், அதனை வசதியாக மறைத்து விடுவார்கள். யாரவது ஒரு மெளலவி அடுத்த தடவை மிஃராஜ் குறித்து பயான் செய்யும் பொழுது முஹம்மது நபி யாருடைய விட்டில் படுத்திருக்கும் பொழுது மிஃராஜ் நடைபெற்றது என்று மறக்காமல் அவரிடம் கேட்டுப் பாருங்கள்.


பெண்ணுடைய முகத்தைக் கொண்ட, அரபு மொழியில் பேசக் கூடிய, கழுதை போன்ற உடலைக் கொண்ட, பறவை போல சிறகுகள் கொண்ட புராக் எனும் ஒரு உயிரினத்தின் முதுகில் ஏறி உட்கார்ந்து விண்வெளிக்குப் போனாராம் முஹம்மது நபி. அதிலே ஏறிப் பறந்து பறந்து மேலே போனதும் முதலாவது வானம் வந்ததாம், அதற்குக் கதவும், கதவிற்குக் காவல்காரர்களும் இருந்தார்களாம், கதவைத் தட்டி, காவல் காரர்களின் கேள்விக்கு சரியாக பதில் சொன்ன பின்னர் தான் உள்ளே நுழைவதற்கு அனுமதிக் கிடைத்ததாம், இப்படியாக ஏழு வானங்களிலும் கதவுகளைத் தட்டி மேலே சென்று அல்லாஹ்வைச் சந்தித்து முஸ்லிம்கள் தினமும் ஐந்து நேரம் தொழும் தொழுகையை பெற்று வந்தாராம். அதுவும் 50 நேரத் தொழுகையாக அல்லாஹ் கொடுக்க, அல்லாஹ்வுடனேயே பேரம் பேசி கடைசியாக 90% டிஸ்கவுண்டு பெற்று 5 நேரத் தொழுகையைக் ஏற்றுக் கொண்டாராம்.

 

'வானம் என்றால் என்ன, வானத்திற்கே கதவா, கதவுக்கு காவற்காரர்களா, ஏழு வானங்கள் எப்படி இருக்க முடியும், புராக்கின் முதுகிலே ஏறி மேலே போகின்றவருக்கு சுவாசிக்க ஒட்சிசன் எப்படிக் கிடைக்கும்' போன்ற சாதாரண கேள்விகளையும், 'வானத்திற்கு கதவுகள் இருக்கும், அவற்றிற்கு காவல் காரர்கள் இருக்கின்றார்கள், அங்கே போகின்றவர் கதவைத் தட்டினால் "யாரு வந்திருக்கீங்க" என்று கேட்பது போல கேட்டு, கேள்விகளுக்கு பதில் சொன்ன பின்னர்தான் கதவைத் திறந்து விடுவார்கள், வானத்தின் கதவிற்கு வெளியில் நிற்பது யார் என்று பார்க்கும் CCTV போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம் அல்லாஹ்விற்குத் தெரியாது' போன்ற இஸ்லாமிய நகைச்சுவைகளையும் ஒரு பக்கம் வைத்துவிட்டு புராக்கில் ஏறிப் போன பயணம் பற்றி மட்டுமே சுருக்கமான வகையில் சிந்தித்துப் பார்ப்போம்.

சாதரணமாக விமானம் ஏறி தொழிலுக்காக, கல்விக்காக, சுற்றுலாவுக்காக, வியாபாரத்திற்காக என்று வெளிநாட்டுக்குப் போகின்றவர்களே நண்பர்கள், அயலவர்கள், தெரிந்தவர்களிடம் சொல்லிவிட்டுப் பயணம் போகும் பொழுது, யாருமே செய்திருக்காத ஒன்றை செய்ததாக சொல்லிக் கொண்ட முஹம்மது நபி மட்டும் ஏன் இரவின் இருட்டில் இரகசியமாக இராத்திருடர்கள் தொழிலுக்கு போவது போல விண்வெளிக்குப் போய் விடிவதற்கு முன்னர் இருட்டிலேயே திரும்பி வர வேண்டும்? மக்காவாசிகள் அனைவரையும் காலை நேரத்தில் ஓரிடத்திற்கு அழைத்து, அவர்களின் முன்னாலேயே அந்த புராக்கில் ஏறி விண்வெளிக்கு பறந்து சென்று இருக்கலாமே? ஏன் செய்யவில்லை? எதற்காக யாருக்கும் தெரியாமல் இருட்டில் போய்விட்டு இருட்டு வெளிர்ப்பதற்கு முன்னரே திரும்பியதாக கதையளக்க வேண்டும்? முஹம்மது நபி மிஃராஜ் சென்றது உண்மை என்றால் அதனை பகலின் வெளிச்சத்தில், மக்களின் முன்னிலையில் நேர்மையாக சென்று இருந்திருந்தால் பலரும் பார்த்து இருப்பார்கள், கண்ணால் கண்ட சாட்சிகள் இருந்திருக்கும், தூரப் பிரதேசங்களில் உள்ளவர்களும் கூட கண்டு இருப்பார்கள், கண்டவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டும் இருப்பார்கள். ஆனால் இவை எதுவுமே நடக்கவில்லை.

ஹிஜ்ரத் முதல் ஜிஹாத் வரை மற்ற மனிதர்களின் உதவி தேவைப்படுகின்ற அனைத்து செயல்களையும் முஹம்மது நபி மற்றவர்களுக்கு முன்னாலேயே செய்து இருக்கின்றார். மக்காவில் இருந்து புராக்கில் அவரால் மதீனாவிற்குப் போக முடியவில்லை, தாயிப்பில் கல்லடி கிடுத்த பொழுது அதிலிருந்து தப்ப புராக்கில் ஏறி ஓட முடியவில்லை, உஹது போரில் காலித் இப்னு வலீதின் படைகள் முஹம்மது நபியின் பல்லு உடைய அடி கொடுத்த பொழுது ஜிப்ரயீல் வந்து அவரைத் காப்பாற்றவும், புராக் வந்து ஏற்றிச் செல்லவும் இல்லை, அதே போல எந்த ஒரு யுத்தத்தையும், கொள்ளையையும் தனியாக மலக்குகளுடன் சென்றோ, புராக்கில் சென்றோ அவரால் மேற்கொள்ள முடியவில்லை, எல்லாவற்றிற்கும் சஹாபாக்களின் துணை, சஹாபாக்களின் பணம், குருதி, உயிர், உடைமைகள் என்று அனைத்துமே அவருக்கு மற்ற மனிதர்களிடம் இருந்து தேவைப்பட்டன, ஆனால் விண்வெளிக்குப் போனேன், ஜிப்ரயீலை சந்தித்தேன், அல்லாஹ்வோடு பேசினேன் என்று கதையளக்கும் பொழுது மட்டும் அவை எல்லாமே அவர் தனியாக இருக்கும் பொழுது நிகழ்ந்து இருக்கின்றனவாம். முன்னாள் (முதல்) காதலியில் வீட்டில் போய் படுக்க வேண்டியது, காலையில் எழும்பி ‘விண்வெளிக்குப் போனேன்’ என்று கதையளக்க வேண்டியது, இதையெல்லாம் இன்னுமும் நம்பிக்கொண்டு இருக்கின்றது ஒரு பெரும் கூட்டம், ஆனாலும் அப் பெரும் கூட்டத்தில் ஒரு தளம்பல், ஒவ்வொருவராக கழண்டு பகிரங்கமாகவும், இரகசியமாகவும் சிந்திக்கக் கூடிய மக்கள் வெளியேறிக்கொண்டு இருக்கின்றார்கள், தொடர்ந்தும் வெளியேறுவார்கள், நேற்று வெளியேறியவர்களின் ஒருவனாக நான் இருக்கின்றேன், அடுத்து வெளியேறப் போவது நீங்களாகக் கூட இருக்கலாம்.

முஸ்லிம்களே, ஒவ்வொரு முறையும் தொழுகைக்காக தக்பீர் கட்டி நிற்கும் பொழுதும், சுஜுதிற்காக தலையைக் கொண்டுபோய் தரையில் முட்டும் பொழுதும் இவற்றை கட்டாயம் சிந்தனை செய்யுங்கள். நீங்கள் தொழும் பொழுது இந்த சிந்தனைகள் நிச்சயம் உங்களுக்குள் வரும், கஷ்டப்பட்டு அவற்றைத் தடுக்காமல் இயல்பாக சிந்தியுங்கள். சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இவற்றில் நிச்சயமாக படிப்பினைகள் உள்ளன.


றிஷ்வின் இஸ்மத்
03.07.2021

பின்னிணைப்பு : மிஃராஜ் தொடர்பில் முஹம்மது நபி அவிழ்த்து விட்டவற்றில் சிறிதளவு பொய்களை சொல்லும் ஒரு சில ஹதீஸ்களை மட்டும் பார்ப்போம் : நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் 'திற' என்றார்கள். அவ்வானவர், 'யார் அவர்?' என்று வினவியதற்கு 'நானே ஜிப்ரீல்' என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், 'உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். அதற்கு வானவர் 'அவரை அழைத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் 'ஆம்' என்றார்கள். வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார். இந்நிலையிலுள்ள அவர் 'நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!' என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். 'இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்' என்று கூறினார்கள். பின்னர், ஜிப்ரீல்(அலை) என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தில் காவலரிடம் 'திற' எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்விகளைப் போன்றே இவரும் கேட்டுவிட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ்(ரலி), 'வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். முதல் வானத்தில் ஆதம்(அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம்(அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை' என்று கூறினார். 'ஜிப்ரீல்(அலை) என்னை அழைத்துக்கொண்டு இத்ரீஸ்(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' என இத்ரீஸ்(அலை) கூறியபோது இம்மனிதர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் இத்ரீஸ்(அலை)' என ஜிப்ரீல்(அலை) பதில் கூறினார்கள். பின்னர் மூஸா(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர்தான் மூஸா(அலை)' என ஜிப்ரீல் கூறினார்கள். பின்னர் ஈஸா(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் ஈஸா(அலை)' என ஜிப்ரீல்(அலை) கூறினார்கள். பின் இப்ராஹீம்(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!" என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இவர் இப்ராஹீம்(அலை)' என்று கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து) "அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது 'உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது' என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள். இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன். பின்னர் ஜிப்ரீல்(அலை) என்னை 'ஸித்ரதுல் முன்தஹா' என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழந்திருந்தன. அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் புகுத்தப்பட்டேன். அதில் முத்துக்களால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ தர்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி 349)


அனஸ் பின் மாலிக் ரலி அவர்கள் கூறினார்கள்.
நான் (இறையில்லாம் கஅபா அருகில்) ஹத்தீமில்... அல்லது ஹிஜ்ரில்... படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார்.


அறிவிப்பாளர்களில் ஒருவரான அனஸ்(ரலி), 'இங்கிருந்து இது வரையில் அவர் பிளந்தார்" என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறினார்கள்.
அறிவிப்பாளர் கத்தாதா(ரஹ்) கூறினார்:
நான் என்னருகிலிருந்து (அனஸ்(ரலி) அவர்களின் நண்பர்) ஜாரூத்(ரஹ்) அவர்களிடம், 'அனஸ்(ரலி), 'இங்கிருந்துஇது வரையில்... என்று எதைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்?' என்று கேட்டேன். அதற்கு ஜாரூத்(ரஹ்), 'நபி(ஸல்) அவர்களின் நெஞ்சின் காறை யெலும்பிலிருந்து அடிவயிறு வரை... அல்லது நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து அடிவயிறு வரை... என்ற கருத்தில் அனஸ்(ரலி) கூறினார்" என்று பதிலளித்தார்கள்.


பிறகு அ(ந்த வான)வர் (ஜீப்ரீல்) என்னுடைய இதயத்தை வெளியிலெடுத்தார். பிறகுஇறை நம்பிக்கையால் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டதுஎன்னுடைய இதயம் கழுவப்பட்டு, (அதில்) அந்த இறை நம்பிக்கை நிரப்பட்டது. பிறகு பழையபடி மீண்டும் (என்னுடைய இதயம்மூடி) வைக்கப்பட்டது. பிறகு கோவேறு கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது.


-(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அனஸ்(ரலி) அவர்களிடம் ஜாரூத்(ரஹ்), 'அது புராக் எனும் வாகனம் தானே அபூ ஹம்ஸா அவர்களே!" என்று கேட்டார்கள். அதற்கு அனஸ்(ரலி), 'ஆம், (அது புராக் தான்.) அந்த வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும்" என்று
பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். என்னை ஜிப்ரீல் முதல் வானத்திற்கு அழைத்துச் சென்று அதன் கதவைத் திறக்கும்படி கூறினார். அப்போது, 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது.


 அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவரிடம் ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. அப்போது (அந்த வானத்தின் காவலர்) கதவைத் திறந்தார். நான் அங்கு சென்றடைந்தபோது அங்கு ஆதம்(அலை) அவர்கள் இருந்தார்கள். (என்னிடம் ஜிப்ரீல்) 'இவர்கள் உங்கள் தந்தை ஆதம்இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்" என்று கூறினார். அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் கூறினார்கள். பிறகுஆதம்(அலை) அவர்கள், '(என்) நல்ல மகனும்நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்று கூறினார்கள். பிறகு (என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல்) இரண்டாம் வானத்திற்கு உயர்ந்து அதைத் திறக்கும்படி கூறினார். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கஉங்களுடன் (இருப்பவர்) யார்?' என்று வினவப்பட்டது. (அதற்கு) அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார், '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்தா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. 


பிறகு (அந்த வானத்தின் காவலர் கதவைத்) திறந்தார். நான் அங்கு சென்றடைந்தபோதுஅங்கு யஹ்யா (அலை) அவர்களும்ஈசா(அலை) அவர்களும் இருந்தனர் - அவ்விருவரும் சிற்றன்னையின் மக்களாவர். இது யஹ்யா அவர்களும்ஈசா அவர்களும் ஆவர். இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்" என்று ஜிப்ரீல் கூறினார். நான் (அவர்கள் இருவருக்கும்) சலாம் சொன்னபோது அவர்கள் சலாமிற்கு பதில் கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும், 'நல்ல சகோதரரும்நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்துக்) கூறினர். பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு மூன்றாம் வானத்திற்கு உயர்ந்தார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (இருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவர் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. 


பிறகு (அந்த வானத்தின் கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் சென்றடைந்தபோது அங்கு யூசுஃப்(அலை) அவர்கள் இருந்தார்கள். 'இவர்கள் தாம் (இறைத்தூதர்) யூசுஃப் இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்" என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்களும் எனக்கு பதில் சலாம் கூறினார்கள். பிறகு, 'நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்தும்) கூறினார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் ஐந்தாம் வானத்திற்கு வந்து சேர்ந்து அதைத் திறக்கும்படி கூறினார். 'யார் அது" என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (இருப்பவர்) யார்?' என்று வினவப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வருமாறு) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவர் வரவு நல்வரவாகட்டும். அவர் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. 


நான் அங்கு சென்றடைந்தபோது ஹாரூன்(அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். 'இவர்கள் தாம் ஹாரூன் இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்" என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் கூறினார்கள். பிறகு அவர்கள், 'நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்துச்) கூறினார்கள். பிறகு என்னுடன் அவர் ஆறாம் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படிக் கூறினார். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். (அந்த வானத்தின் காவலர்,) 'அவர் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்துச்) கூறினார். அங்கு சென்றடைந்தபோது மூஸா (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். 'இவர்கள் தாம் மூஸா இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்" என்று ஜிப்ரீல் கூறினார். 


நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் கூறினார்கள். பிறகு, 'நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்துச்) கூறினார்கள். நான் (மூஸா - அலை - அவர்களைக்) கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'தங்கள் அழுகைக்கு என்ன காரணம்?' என்று அவர்களை நோக்கிக் கேட்கப்பட்டது. அவர்கள், 'என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள்எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் புகுவார்கள் என்பதால் தான் அழுகிறேன்" என்று பதிலளித்தார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் ஏழாவது வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி ஜிப்ரீல் கூறினார். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று வினவப்பட்டபோது அவர், 'முஹம்மது" என்று பதில் கூறினார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். (அந்த வானத்தின் காவலர்,) 'அவரின் வரவு நல்வரவாகட்டும்அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்துச்) கூறினார். 


நான் அங்கு சென்றடைந்தபோதுஇப்ராஹீம்(அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். 'இவர்கள் தாம் உங்கள் தந்தை. இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்" என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் உரைத்தார்கள். அவர்கள், 'நல்ல மகனும்நல்ல இறைத் தூதருமான இவரின் வரவு நல்வரவாகட்டும்" என்று வாழ்த்துக் கூறினார்கள். பிறகு, (வான எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹாஎன்னும் இடத்திற்கு நான் கொண்டு செல்லப்பட்டேன். அதன் (இலந்தைப்) பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜர்என்னுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகள் போலிருந்தன. 'இதுதான் சித்ரத்துல் முன்தஹா" என்று ஜிப்ரீல் (அறிமுகப்படுத்திக்) கூறினார். அங்கு (அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து ஓடி வருகின்ற) நான்கு ஆறுகள் இருந்தன. இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. 


'ஜிப்ரீலே! இவ்விரண்டு ஆறுகள் எவை?' என்று கேட்டேன். அவர், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ள (ஸல்ஸபீல்கவ்ஸர் ஆகியவை)வையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' (எனும் 'வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும் இறையில்லம்') எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. பிறகு என்னிடம் ஒரு பாத்திரத்தில் மதுவும்ஒரு பாத்திரத்தில் பாலும் இன்னொரு பாத்திரத்தில் தேனும் கொண்டு வரப்பட்டது. நான் பாலை (தேர்ந்து) எடுத்தேன். (பிறகு அதைக் குடித்தேன்.) அப்போது ஜிப்ரீல், 'இதுதான் நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இருக்கும் (இஸ்லாம் எனும்) இயற்கை நெறியாகும்" என்று கூறினார்கள். பிறகு என் மீது ஒவ்வொரு தினத்திற்கு ஐம்பது (வேளைத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. 


நான் திரும்பி வந்தபோது மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், 'உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது?' என்று கேட்டார்கள். 'ஒவ்வொரு நாளும் ஐம்பது (வேளைத்) தொழுகை (கட்டாயக் கடமையாக நிறை வேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது" என்று நான் பதிலளித்தேன். உங்கள் சமுதாயத்தார் ஒரு தினத்திற்கு ஐம்பது வேளைத் தொழுகையைத் தாங்க மாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுக்கு முன் மக்களிடம் அனுபவப்பட்டுள்ளேன்" பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். எனவேஉங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் உங்கள் சமுதாயத்தினருக்காக (தொழுகையின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்று கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். (இறைவனிடம் குறைத்துத் தரும்படி கேட்டேன்) இறைவன் (ஐம்பதிலிருந்து) பத்தை எனக்குக் குறைத்தான். 


நான் மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். முன் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். அப்போது (நாற்பதிலிருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போதும் முன் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும் படி) கூறினார்கள். நான் (இறைவனிடம்) திரும்பிச் சென்றேன். எனக்குக (முப்பதிலிருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் முன்போன்றே (குறைத்து கேட்கும்படி) கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். எனக்கு (இருபதிலிருந்து பத்து குறைக்கப்பட்டு) தினந்தோறும் பத்து (வேளைத்) தொழுகைகள் (தொழும்படி) உத்தரவிடப்பட்டது. நான் (மூஸா - அலை - அவர்களிடம்) திரும்பி வந்தேன். அப்போதும் அவர்கள் முன் போன்றே கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். ஒவ்வொரு நாளும் ஐந்து (வேளைத்) தொழுகைகள் (நிறைவேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது 'உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது?' என்று கேட்டார்கள். ஒவ்வொரு நாளைக்கும் ஐந்து (நேரத்) தொழுகைகள் எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று சொன்னேன். 'ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரத்) தொழுகைகளை உங்கள் சமுதாயத்தினர் தாங்கமாட்டார்கள். உங்களுக்கு முன்பே மக்களுடன் பழகி நான் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். எனவேஉங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று உங்கள் சமுதாயத்தினருக்காக இன்னும் குறைத்துத் தரும்படிக் கேளுங்கள்" என்று கூறினார்கள். 


அதற்கு நான், '(கடமையான தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைத்துத் தரும்படி பலமுறை இறைவனிடம்) எனக்கே வெட்கமேற்படும் வரையில் நான் கேட்டு விட்டேன். எனவேநான் திருப்தியடைகிறேன்; (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொள்கிறேன்" என்று கூறினேன். பிறகு (அந்த இடத்தை) நான் கடந்தபோது, (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) 'நான் என் (ஐந்து நேரத்தொழுகை எனும்) விதியை நடைமுறைப்படுத்திவிட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து நேரமாகக் குறைத்துக் கடமையை) எளிதாக்கி விட்டேன்" என்று ஒரு குரல் ஒலித்தது.
(சஹீஹுல் புகாரி : 3887)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். 


நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்றார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். 


அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்" என்றார்கள். பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள். 


பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார். 


பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று வாழ்த்தினார்கள். 


நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்" என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். 


அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்" என்றார்கள். பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்" என்றார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. 


அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்றார்கள். 


நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது. 
(சஹீஹுல் புகாரி : 3207)
அபூ தர்(ரலி) அறிவித்து வந்ததாக அனஸ்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை (முகடு) பிளக்கப்பட்டது. (அங்கிருந்து வானவர்) ஜிப்ரீல் அவர்கள் இறங்கி (வந்து) என் நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை, 'ஸம்ஸம்' தண்ணீரால் கழுவினார்கள். பிறகு, நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத்தட்டு ஒன்றைக்கொண்டு வந்து என் நெஞ்சில் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு, என் கையைப் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வானத்திற்கு ஏறினார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்கு வந்தபோது வானத்தின் காவலரிடம், 'திறங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அவர், 'யார் அது?' என்று கேட்டார். ஜிப்ரீல் அவர்கள், 'இதோ ஜிப்ரீல்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், 'உங்களுடன் வேறெவராது இருக்கிறரா?' என்று கேட்டார். 


அவர்கள், 'என்னுடன் முஹம்மத் அவர்கள் இருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், '(அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா?' என்று கேட்க, ஜிப்ரீல் அவர்கள், 'ஆம், திறவுங்கள்" என்று கூறினார்கள். (முதல் வானத்தின் கதவு திறக்கப்பட்டு) நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒருவர் இருந்தார். அவரின் வலப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தன்னுடைய வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தன்னுடைய இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) 'நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!" என்று கேட்டேன். அவர், 'இவர் ஆதம்(அலை) அவர்கள்; அவர்களின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அவர்களின் சந்ததிகள். அவர்களில் வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப்பக்கத்தில் இருப்பவர்கள் நரக வாசிகள். எனவே, தான் அவர்கள் வலப்பக்கம் (சொர்க்கவாசிகளான) தம் மக்களை பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப்பக்கம் (நரக வாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது (வேதனைப்பட்டு) அழுகிறார்கள்" என்று பதிலளித்தார்கள்.பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் (இன்னும் உரயத்திற்கு) ஏறிச் சென்றார்கள். பிறகு, இரண்டாம் வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், 'திறவுங்கள்" என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின்னர் வாயிலைத்) திறந்தார்.


அனஸ்(ரலி) தொடர்ந்து கூறினார்கள்:
"நபி(ஸல்) அவர்கள், வானங்களில் இத்ரீஸ்(அலை), ஈசா(அலை) இப்ராஹீம்(அலை) ஆகியோரைக் கண்டதாகக் கூறினார்களே தவிர அவர்களின் இருப்பிடங்கள் எங்கிருந்தன என்று அவர்கள் எனக்குக் குறிப்பிட்டுக் கூறவில்லை. அவர்கள் ஆதம்(அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம்(அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே கூறினார்கள்" என்று அபூ தர்(ரலி) கூறினார்.


அனஸ்(ரலி) மேலும் கூறினார்கள்:
"ஜிப்ரீல்(அலை) அவர்கள் இத்ரீஸ்(அலை) அவர்களைக் கடந்து சென்றபோது, 'நல்ல இறைத் தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!" என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், 'இவர் இத்ரீஸ் என்று கூறினார்கள். பிறகு மூஸா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக" என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அவர்கள், 'இவர் மூஸா" என்று கூறினார்கள். பிறகு நான், ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!" என்று கூறினார்கள். பிறகு நான் ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!" என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், '(இவர்) ஈசா" என்று பதிலளித்தார்கள். பிறகு நான் இப்ராஹீம் அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், 'நல்ல நபியே, வருக! நல்ல மகனே, வருக!" என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு, 'இவர் இப்ராஹீம்" என்று ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி), அபூ ஹய்யா(ரலி) ஆகிய இருவரும் அறிவித்ததாக இப்னு ஹஸ்கி(ரலி) கூறினார்


' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு மேலே சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்திற்கு வந்தபோது அங்கு நான் (வானவர்கள் விதிகளை எழுதிக் கொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.


இப்னு ஹஸ்கி(ரஹ்) அவர்களும் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களும் கூறினார்கள்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அப்போது அல்லாஹ் என்மீது (என் சமுதாய்யத்தாருக்காக) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான். அதைப்பெற்றுக் கொண்டு நான் திரும்பியபோது மூஸா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது மூஸா அவர்கள், 'உங்கள் சமுதாயத்தவர் மீது என்ன கடமையாக்கப்பட்டது" என்று கேட்டார்கள். நான், 'அவர்களின் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அவர்கள், 'அப்படியானால் உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று (சற்று குறைத்துக் கடமையாக்கும்படி) கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது" என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி) கேட்டேன். 


அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூஸா அவர்களிடம் திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறி முன்பு போல் ("உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது") என்று கூறினார்கள். (நான் அவ்வாறே திரும்ப இறைவனிடம் சென்று இன்னும் குறைக்கும்படி கோர) அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூஸா அவர்களிடம் மீண்டும் கூறியபோது, 'உங்களுடைய இறைவனிடம் திரும்பச் சென்று இன்னும் குறைத்துக் கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் அதற்கு சக்தி பெறமாட்டார்கள்" என்று கூற, நான் திரும்பிச் சென்று, என் இறைவனிடம் (இன்னும் சற்று குறைக்கும்படி) கேட்டேன். அதற்கு அவன், 'அவை ஐந்து (வேளைத் தொழுகைகள்) ஆகும். அவையே (பிரதிபலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். (ஒரு முறை சொல்லப்பட்ட சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை" என்று கூறினான். உடனே, நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், 'உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். நான், 'என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்" என்று பதிலளித்தேன். பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு (வானுலகின் எல்லையான) 'சித்ரத்துல முன்தஹா'வுக்குச் சென்றார்கள். அப்போது அவையென்னவென்று நான் அறிய முடியாத படி பல வண்ணங்கள் அதைச் சூழ்ந்து மூடியிருந்தன. பிறகு நான் உள்ளே அனுமதிக்கப்பட்டேன். அப்போது அங்கே முத்தாலான கூடாரங்களைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் வீசும்) கஸ்தூரியாக இருந்தது. 
(சஹீஹுல் புகாரி : 3342)