புதிய முஸ்லிம்களால் உண்மையில் இஸ்லாம் வேகமாக வளர்கின்றதா?

 



“இஸ்லாம் வேகமாக வளர்கின்றது, பில்லியன் கணக்கில் மேற்கு நாட்டவர்கள் தினமும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள், தினமும் லட்சக்கணக்கான  விஞ்ஞானிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள்” போன்றவாறான நகைப்பிற்கிடமான கற்பிதங்கள் முஸ்லிம்களின் மனதில் விதைக்கப்பட்டு உள்ளன, முஸ்லிம்களில் அதிகமானவர்கள் அவற்றையெல்லாம் உண்மை என்று நம்பவைக்கப்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் அது உண்மையில்லை என்பதே உண்மை ஆகும்.


இஸ்லாத்தில் இருக்கின்றவர்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றார்கள், இஸ்லாத்திற்கு வந்தவர்களும் கூட அதனை விட்டுவிட்டு ஓடுகின்றார்கள். இஸ்லாத்தை கற்று, முஹம்மது நபியின் வாழ்க்கயைப் படித்து நியாயமாக, நேர்மையாக சிந்திக்க ஆரம்பிக்கும் பொழுது முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஆரம்பிக்கின்றார்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, அது சரியான மதம் என்று வாதங்களை முன்வைத்த, முன்னாள் முஸ்லிம்களுடன் கூட வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டு வந்த ஒருவர் தற்பொழுது இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார். அவரைப் பற்றித் தெரிந்திருக்காவிட்டால், தெரிந்துகொள்ள https://youtu.be/yU5TdSmAgKU இணைப்பை அழுத்துங்கள், அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியதைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.


நீங்கள் இன்னுமும் ஒரு முஸ்லிமா? அப்படியானால் அடுத்து வெளியேறப் போவது நீங்களாகக் கூட இருக்கலாம், ஆனால் ஒரு நிபந்தனை, உங்களுக்குச் சுயமாக சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டும், அவ்வளவுதான்.

ஏற்கனவே போட்ட ஒரு பதிவு :

ஒரு பிரபலமான பொய் :

"ப்ரோஉங்களுக்கு தெரியுமா, உலகம் இஸ்லாத்தை நோக்கி விரைவாக வந்து கொண்டு இருக்கின்றது, லட்சக் கணக்கான மக்கள் தினமும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள்."

"அப்படியா? சரி, கடந்த வருடத்தில் உங்கள் ஊரில் எத்தனை ஆயிரம் பேர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்?"

"ஹ்ம்ம்ம்... எங்கட ஊரில் என்றால் யாருமில்லை."

"😂😂😂"

===================

முஸ்லிம்களே, உங்கள் ஊரில் எப்படி? கடந்த ஒரு வருடத்தில் எத்தனை ஆயிரம் பேர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்உரிய ஆதரங்களுடன் பதில்களை முன்வையுங்களேன் பார்க்கலாம்.