முஸ்லிம் மாணவிகளை முகமற்றவர்களாக்கிய கேவலமான ஆணாதிக்க சக்தியை அம்பலப்படுத்துவோம்!

பேராதனை பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸின் நடப்பாண்டு நிர்வாகக் குழுவின் புகைப்படங்களில் முஸ்லிம் மாணவிகளின் புகைப்படங்களை மட்டும் தவிர்த்தமை தொடர்பான சர்ச்சை சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றது. முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் மட்டும் மறைக்கப்படுவதும், இருட்டடிப்பு செய்யப்படுவதும் இதுதான் முதல் தடவை அல்ல. பல ஆண்டுகளாகவே இத்தகைய பாகுபாடுகள், இருட்டடிப்புகள் நடைபெற்று வருகின்றன. 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவிகளின் புகைப்படங்கள் கூட இப்படி இருட்டடிப்பு செய்யப்பட்டதாக ஞாபகம் உள்ளது. முஸ்லிம் பெண்களின் துறைசார் அடைவு தொடர்பான செய்திகளை பிரசுரிக்கும் பொழுது சில முஸ்லிம் ஊடகங்கள் கூட அவர்களின் புகைப்படங்களை மறைத்து பிரசுரிப்பதுண்டு.


முஸ்லிம் மாணவிகளின் முகங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள், நியாயப்படுத்தல்கள் பொதுப் பரப்பில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மாணவிகள் சுய விருப்பின் பிரகாரம் புகைப்படங்களை வழங்காமல் விட்டார்களா அல்லது பிறரால் நிர்ப்பந்திக்கப் பட்டார்களா, அவற்றிற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்கின்ற வகையில் நியாயப்படுத்தல்கள், வாதங்கள், பதில் வாதங்கள், கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன.


'முஸ்லிம் பெண்களும், முஸ்லிம் மாணவிகளும் மட்டும் தமது புகைப்படங்களை வெளியிட தயங்குவதற்கு காரணம் முல்லாயிசம், தலிபானிசம், சஹ்ரானிசம் போன்றவை தான்' என்று இஸ்லாமிய முற்போக்குவாதிகளாக தம்மை அடையாளப் படுத்துகின்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் இவர்கள் 'இஸ்லாம் மிகவும் முற்போக்கான மதம், முஹம்மது நபி மிகச் சிறந்த பெண்ணியவாதி, பெண்களை அடக்கும் ஆணாதிக்கம், பிற்போக்குத்தனம், முல்லாயிசம், தலிபானிசம், சஹ்ரானிசம் போன்றவை இஸ்லாத்துடன் தொடர்பற்றவை' என்ற விதமான விளக்கத்தை பொதுவெளியில் முன்வைத்து வருகின்றனர்.


முஸ்லிம் பெண்கள் மட்டும் இவ்வாறான நிலைக்கு தாமாக விரும்பியோ, விரும்பாமலோ உள்ளாவதற்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கலாம், அதில் முஸ்லிம் ஆண்களின் அழுத்தம் இருந்தால் அவ்வாறு அழுத்தத்தை பிரயோகிக்க அவர்களை தூண்டும் காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்பதை அறியவேண்டி உள்ளது. அதற்காக இந்த விடயத்தில் இஸ்லாத்தின், முஹம்மது நபியின் உண்மையான நிலைப்பாடுகளை அறிவதற்காக இஸ்லாத்தில் இருந்து சில விடயங்களை பார்ப்போம்.

'உங்களது மனைவிகள் உங்களுக்குரிய விளை நிலங்களாகும். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்.' (குர்ஆன் 2:223)

பெண்கள் விளை நிலங்களாம், விரும்பியவாறு செல்லலாமாம். சரி, ஆண் சென்றதும் விளைநிலம் அவர் விரும்பியவாறு நடந்து கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

‘ஒருவர் தனது மனைவியை உடலுறவுக்காக அழைத்து, அதற்கவள் மறுத்து, கணவன் அவள் மீது கோபித்த நிலையில் இரவைக் கழித்தால், அதிகாலை வரை அவளை மலக்குமார்கள் சபித்துக் கொண்டிருக்கின்றனர் என நபி அவர்கள் கூறினார்கள்.’ (ஸஹீஹ் முஸ்லிம் : 1436)

‘அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு உடன்பட மறுத்தால் வானிலுள்ளவன் (அல்லாஹ்) அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள் மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை.’ (ஸஹீஹ் முஸ்லிம் : 2830)

ஒரு முஸ்லிம் பெண் எத்தனை விடயங்களுக்கு பயப்பட வேண்டி இருக்கின்றது என்று பார்த்தீர்களா? அல்லாஹ், நரகம், கொரோனா வைரஸ், விசப்பாம்பு, வெறி நாய், கரப்பொத்தான், கபுருடைய வேதனை போன்றவற்றிற்கு மட்டுமல்ல, கணவனின் ஆண்குறிக்கும் பயப்பட வேண்டி உள்ளது.

இன்னும் நிறைய இருக்கின்றன..........

'எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; அவர்களை அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டு விட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.' (குர்ஆன் 4:34)

கணவனுக்கு வழிப்பட வேண்டுமாம், எப்படி எல்லாம் வழிப்பட வேண்டும் என்று தெரியமா?

'"ஒரு கணவனுக்கு தலை முதல் கால் வரை புண் ஏற்பட்டு சீழ் பிடித்து இருந்து, அவர் மனைவி தனது வாயினால் நக்கி அதனை சுத்தம் செய்தாலும், அவள் தனது கணவனுக்கு முழுமையாக நன்றி உள்ளவள் ஆக மாட்டாள்” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.' (அஹ்மத் : 12153; ஸஹிஹ் அல் ஜாமி : 7725)

பெண்களுக்கு இஸ்லாம் கொடுத்துள்ள சிறப்புகள் புரிகின்றதா? ஒவ்வொரு பெண்ணையும் இஸ்லாம் MBBS வைத்திய கலாநிதிகளாக கெளரவிக்கின்றது.

இப்பொழுது யாரைப் பார்த்து பிற்போக்குத்தனம், ஆணாதிக்கம், முல்லாயிசம், தலிபானிசம், சஹ்ரானிசம் என்றெல்லாம் கூச்சல் போடப் போகின்றீர்கள்? இல்லாத அல்லாஹ்வைப் பார்த்தா? எப்பொழுதோ இறந்துபோய் விட்ட தூதரைப் பார்த்தா? இல்லை அனைத்தையும் மூடி மறைத்துவிட்டு முற்போக்கு முகமூடி அணிந்துகொண்டு இஸ்லாத்திற்கு வெள்ளை அடிப்பவர்களைப் பார்த்தா?

பெண்கள் குறித்த அல்லாஹ்வினதும், அவரது திருத் தூதரினதும் திருவாய் மலர்ந்தருளல்கள் இவ்வளவுதான் என்று நினைக்க வேண்டாம், நிறையவே உள்ளன, எனினும் மேலும் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

'உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் கிடைக்கா விட்டால் சாட்சி என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும் மேலும் இரண்டு பெண்களையும் ஆக்கிக் கொள்ளுங்கள்! அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாகக் கூறினால் மற்றொருத்தி நினைவுபடுத்துவாள்.' (குர்ஆன் 2 :282)


'அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
“பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் (பெண்களை நோக்கிக்) கேட்டார்கள். அவர்கள், “ஆம் (பாதியளவு தான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்” என்று கூறினார்கள்.' புகாரி (2658)


அறிவில் குறைபாடு உள்ளவர்களைக் கூட வாயினால் புண்களை சுத்தம் செய்யும் MBBS வைத்திய கலாநிதிகளாக மாற்றும் சக்தி இஸ்லாத்திற்கு மட்டுமே உள்ளது, பார்த்தீர்களா?

சொத்துப் பங்கீட்டிலும் ஆணிற்குக் கிடைப்பதில் பாதிதான் பெண்ணுக்கு வழங்கப்படும்.

'உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள்' (குர்ஆன் 4:3)


இரண்டு, மூன்று, நான்கு என்று மணக்கும் படியும், அதில் சிரமம் இருந்தால் மட்டுமே ஒருத்தியை மணக்கும் படியும் இஸ்லாம் சொல்கின்றது, அது போதாது என்று வலக்கரங்களுக்கு சொந்தமாக்கிக்கொண்ட பெண் என்ற பெயரில் போரில் பிடிக்கும் சுதந்திரமான பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்து (உச்ச எண்ணிக்கை கிடையாது) அனுபவிக்க சொல்கின்றது. போரில் பிடிக்கும் பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கி விந்தை உள்ளே செலுத்துவிட்டு நல்ல விலைக்கு விற்பனை செய்ய சொல்லும் ஹதீஸ்கள் கூட உள்ளன, ISIS காரர்கள் அவற்றைத்தான் நடைமுறைப் படுத்தினார்கள்.

இவை மட்டுமா, இல்லை இல்லை இன்னுமும் இருக்கின்றன.....


'“தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (புகாரி : 4425)

'"ஒருவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால், கணவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு மனைவிக்குக் கட்டளையிட்டிருப்பேன். முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! ஒரு பெண் தன் கணவருக்குச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றாத வரை தன் இறைவனின் கடமையை நிறைவேற்றியவள் ஆகமாட்டாள். ஒட்டகத்தின் சேணத்தில் அவள் அமர்ந்திருக்கும்போது அவளை அவர் (உடலுறவுக்குக்) கேட்டாலும் அவள் மறுக்கலாகாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (இப்னுமாஜா, அஹ்மத், தீர்மிதீ : 1079)


நரகத்தில் அதிகமாக இருப்பதும் பெண்கள் தானாம்.

'"எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்" என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, "இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?" எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், "கணவனை நிராகரிக்கிறார்கள்" என்று கூறினார்கள்.' (புகாரி : 29, புகாரி : 1052, முஸ்லிம் 1659)

'நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்."' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


இஸ்லத்தின் இறை தூதர் என்றும், உலக மக்கள் அனைவருக்குமான மிகச் சிறந்த முன்மாதிரி என்றும் கூறப்படும் முஹம்மது நபி அவர்கள் தனது வாழ்க்கையில் பல திருமணங்கள் செய்தார், தனது மனைவி அல்லாத பெண்ணைக் கூட கர்ப்பமாக்கினார். (மனைவியல்லாத பெண்ணை கர்ப்பமாக்கினார் என்பதை நம்ப மறுக்கும் முஸ்லிம்கள், முஹம்மது நபியின் மகன் இப்ரஹீமின் தாய் யார் என்பதை தேடி அறிந்துகொள்ளவும்.)

'நபியின் மனைவிகளே! நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் பெண்கள் வெளியே சென்றது போல நீங்கள் வெளியே செல்லாதீர்கள்.' (குர்ஆன் 33:33)

வீட்டிற்குள்ளே தான் இருக்க வேண்டும், வெளியே செல்லவும் கூடாதாம்.

‘அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள் “நான் நரகத்தில் வேதனை செய்யப்படும் பெண்களை கண்டேன், தலைமுடியினால் தொங்கவைக்கப் பட்டு வேதனை செய்யப்படும் பெண்கள் தங்கள் தலைமுடியை அந்நிய ஆண்களுக்கு முன்னால் மறைக்காமல் இருந்தவர்கள் ஆவார்கள், நாக்கினாலே தொங்கவிடப்பட்டு வேதனை செய்யப்படும் பெண்கள் தமது கணவனை வார்த்தைகளால் நோகடித்தவர்கள் ஆவார்கள், மார்பகங்களால் தொங்கவிடப்பட்டு வேதனை செய்யப்படும் பெண்கள் தங்கள் கணவன் படுக்கைக்கு அழைத்தும் அதனை புறக்கணித்தவர்கள் ஆவார்கள், தமது பாதங்களால் தொங்கவிடப்பட்டு வேதனை செய்யப்படும் பெண்கள் தமது கணவனின் அனுமதியில்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்கள் ஆவார்கள்’” ( கிதாப் அல் கபாயிர், முஸன்னப் அல் கிந்தி)
(இந்த ஹதீஸின் தரம் குறித்து கருத்து வேறுபாடு உள்ளது)


தலைமுடியை வெளியில் காட்டினாலும் நரகத்தில் வேதனை என்று முஹம்மது நபி பெண்களை அச்சுறுத்துகின்றார். இவற்றையெல்லாம் இறைவனின் வார்த்தைகள் என்று நம்பவைக்கப்படும் முஸ்லிம் பெண்கள் “ஹிஜாப் எமது தெரிவு, முகம் மூடுவது எமது தெரிவு, யாரும் எம்மை நிர்ப்பந்திக்கவில்லை” என்றெல்லாம் சொல்வதில் என்ன ஆச்சரியம் இருக்கப் போகின்றது? இப்படியெல்லாம் போதனை செய்து நம்ப வைத்துவிட்டாலே போதுமே, இதனை விட பெரிய நிர்ப்பந்திப்பு வேறென்ன வேண்டும்? இன்னொருவர் வந்து பக்கத்தில் நின்று கையில் பொல்லை வைத்துக்கொண்டு ‘செய்’ என்று சொல்லி நிர்ப்பந்திக்கத்தான் வேண்டுமா? (ஹிஜாப் திணிப்பு ஏன் எதிர்க்கப்பட வேண்டும் என்பது புரிகின்றதா? ஹிஜாப் திணிப்பா? தெரிவா? சொல்லுங்கள்?)


இவ்வளவுதான் என்று நினைத்து விடாதீர்கள், இன்னும் இருக்கின்றது, இருந்தாலும், இதற்கு மேலும் பதிவை பெரிதாக்க விரும்பாததனால் முஹம்மது நபி திருவாய் மலர்ந்தருளிய மிக முக்கியமான பெண்ணுரிமைப் பிரகடனத்தை முன்வைத்து பதிவை நிறைவிற்குக் கொண்டுவர முயற்சிக்கின்றேன்.


'"ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்கிறது. ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சபைக்குச் சென்றால் அவள் விபச்சாரம் செய்பவள்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (திர்மிதி 2710)

'"தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால் அவள் விபச்சாரி" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர். (நஸாயீ 5036)


பெண்களே, இதற்கு மேலும் உங்களுக்கு சிறந்த உரிமைகளை, கெளரவத்தை வேறு யாருக்குத்தான் தர முடியும்?

இப்பொழுது சொல்லுங்கள், முஸ்லிம் மாணவிகள் மற்றும் முஸ்லிம் பெண்கள் தமது புகைப்படங்களை வழங்க முன்வரவில்லை அல்லது அவர்கள் மீது அக்கறையும், பாசமும் கொண்ட ஆண்கள் அவற்றை பிரசுரிக்க அனுமதிக்கவில்லை என்றால் அவற்றிற்கான காரணம் முல்லாயிசம், தலிபானிசம், சஹ்ரானிசம் ஆகியவற்றின் ஒரே முன்னோடியான முஹம்மது நபியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?


இஸ்லாமிய முற்போக்கு முகமூடி அணிந்தவர்களே, அவர்களை ஆதரிப்பவர்களே, இவ்வளவு கொடுமைகள், கேவலங்கள், அடக்குமுறைகளை உள்ளே வைத்துக்கொண்டு வேறு எதையோ கற்பனையில் ஆணாதிக்கம், பிற்போக்குவாதம், முல்லாயிசம், தலிபானிசம், சஹ்ரானிசம் என்று அழைப்பதில் அர்த்தமில்லை, அவை அத்தனையும் ஒன்றாக சேர்ந்ததுதான் முஹம்மதிசம் அல்லது இஸ்லாம்.

இப்பொழுது மீண்டும் தலைப்பிற்கு செல்லுவோம், முஸ்லிம் மாணவிகளை முகமற்றவர்களாக்கிய அந்த கேவலமான ஆணாதிக்க சக்தியை அடையாளம் கண்டு கொண்டீர்களா?



ஒரு பழைய பதிவை இங்கே பகிர்ந்து இதனை நிறைவு செய்கின்றேன்.

"முஹம்மது நபி பெண்களுக்கு பல உரிமைகளை வழங்கினார், தெரியுமா ப்ரோ"

"ஓஹ் அப்படியா? அப்படி என்னதான் புதுசா உரிமைகள் வழங்கினார் ப்ரோ?"

"இரத்தக் காயம் வராமல் கணவனிடம் அடிவாங்கும் உரிமை, பருவமடையாத சிறுமிகள் கூட தமது தாத்தா வயதில் உள்ளவர்களுடன் திருமணத்தை, விவாகரத்தை (குர்ஆன் 65:4), ஏன் உடலுறவைக் கூட (33:49) அனுபவிக்கும் உரிமை, நறுமணம் பூசிக்கொண்டு வெளியே சென்றால் 'விபச்சாரி' எனும் சிறப்புப் பட்டம் பெறும் பாக்கியம், மேலும் மூன்று பெண்களுடன் சேர்ந்து ஒரே கணவரை சமவுடமைத் தத்துவத்தின் படி நான்கு பெண்கள் பகிர்ந்துகொள்ளும் உரிமை, போரில் பிடிக்கப்பட்டு அடிமை ஆக்கப்பட்டால் தமது எஜமானர்களால் செக்ஸ் வல்லுறவிற்கு உள்ளாக்கப்படும் கெளரவம் (அதாவது அடிமைப் பெண் என்று சொல்லி ஒதுக்கி வைக்காமல், செக்ஸ் ஐக் கூட அனுபவிக்க இஸ்லாம் வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்), அடிமையாகவோ, மனைவியாகவோ பாலியல் உறவிற்கு உள்ளாக்கப்படும் பொழுது பெண்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்ற சிரமத்தை இல்லாமல் செய்தமை, நரகத்தில் ஆண்களை விடவும் அதிக எண்ணிக்கையில் இருக்கும் சிறப்பு சலுகை என்று நிறைய உரிமைகள் ப்ரோ"
(இப்போ 'ங்காத்தா, ங்கொம்மா' என்ற பாணியில் பெண்களை மேலும் கெளரவப் படுத்திக் கொண்டு முஹம்மது நபியின் ரசிகர்கள் இங்கே வரக் கூடும்.)