முஹம்மது நபியின் தற்கொலை முயற்சிகள் – முஸ்லிம்கள் அறியாத முஹம்மது நபி!

 

‘தற்கொலை’ என்று சொன்ன உடனேயே சாதாரண முஸ்லிம்கள் ஒட்டுமொத்த குரலில் சொல்வது “தற்கொலை இஸ்லாத்தில் தடை” என்பதுதான். அதிலும் ‘முஹம்மது நபியே தற்கொலை செய்துகொள்ள போனார்’ என்பதை சொன்னால் எப்படி இருக்கும்?


முஸ்லிம்களில் அதிகமானாவர்கள் இஸ்லாத்தை சுய புத்தியுடன் கற்பதில்லை, முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதில்லை, புஹாரியை மட்டுமல்ல, குர்ஆனின் மொழிபெயர்ப்பைக் கூட ஒரு தடவையாவது முழுமையாக வாசிப்பதில்லை, இதனால் அவர்களுக்கு இஸ்லாத்தினதும், முஹம்மது நபியினதும் உண்மை நிலை தெரியாமலே போய்விடுவதால் இஸ்லாம் குறித்தும், முஹம்மது நபி குறித்தும் மிகப் பெரிய புனிதக் கற்பனையில் மிதக்கின்றார்கள். இஸ்லாம் குறித்த உண்மைகளையும் முஹம்மது நபி பற்றிய உண்மைகளையும் இஸ்லாமிய மூலாதாரங்களில் இருந்தே அம்பலப் படுத்தும் பொழுது அவற்றை ஜீரணிக்கவும் முடியாமல், அவற்றிற்கு மறுப்பும் சொல்லவும் தெரியாமல் போவதால் “ஒங்காத்தா, ஒங்கம்மா, டேய் நாயே, தே, பு, பா, உன்னை கொல்லுவேன்” என்று சலவாத்து சொல்லி நபி புகழ் பாட ஆரம்பித்து விடுகின்றார்கள்.


வரகா பின் நவ்பல் கிருஸ்துவராக இருந்தார். அவர் இப்ரானி (ஹிப்ரூ) மொழியை அறிந்தவர்; இன்ஜீல் வேதத்தைக் கற்றவர். அவர் முஹம்மது நபியின் முதல் மனைவி கதீஜாவின் மைத்துனர். அவருக்கு இருந்த வேத அறிவைப் பற்றி சஹீஹுல் புகாரி முதல் பாகம், முதல் கிதாபின் 3 ஆவது ஹதீஸ் فَانْطَلَقَتْ بِهِ خَدِيجَةُ حَتَّى أَتَتْ بِهِ وَرَقَةَ بْنَ نَوْفَلِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ الْعُزَّى ابْنَ عَمِّ خَدِيجَةَ ـ وَكَانَ امْرَأً تَنَصَّرَ فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ يَكْتُبُ الْكِتَابَ الْعِبْرَانِيَّ، فَيَكْتُبُ مِنَ الإِنْجِيلِ بِالْعِبْرَانِيَّةِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكْتُبَ، وَكَانَ شَيْخًا كَبِيرًا قَدْ عَمِيَ என்று குறிப்பிடுகின்றது. அதாவது வரகா பின் நவ்பல் இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்திலேயே கிறித்தவத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதும் திறமை உள்ளவராகவும், இஞ்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று விரும்புகின்ற அளவுக்கு எழுதக் கூடிய ஆற்றல் உள்ள திறமைசாலியாகவும் இருந்தார் என்கின்ற விடயத்தை குறித்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது.



முஹம்மது நபி தனக்கு வஹி (இறை செய்தி) வருகின்றது, அல்லாஹ் தன்னுடன் ஜிப்ரயீல் மூலம் பேசுகின்றார் என்று கூறி அரேபியாவின் மக்கா நகரில் தன்னை இறைதூதராக சுயபிரகடனம் செய்து இஸ்லாமிய பிரச்சாரத்தை ஆரம்பித்த சில காலத்திலேயே இந்த வரகா பின் நவ்பல் இறந்து போக முஹம்மது நபிக்கு வஹி வருவதே நின்று போகின்றது. இது தொடர்பில் சஹீஹுல் புகாரியின் 9 ஆவது பாகம் 87 ஆவது கிதாபின் 111 ஆவது ஹதீஸ் (ஹதீஸ் 6982) என்ன குறிப்பிடுகின்றது என்பதை பார்ப்போம். “வரகா பின் நவ்பல் குறுகிய காலத்தில் இறந்துவிட்டார். இத்துடன் வஹி வருவது சில காலம் நின்றுவிட்டது. அதனால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். மலை உச்சியிலிருந்து கீழே குதித்துவிட பலமுறை முனைந்தார்கள்.”


முஹம்மது நபி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தமை தொடர்பான ஹதீஸை முழுமையாக மூல (அரபி) மொழியில் வாசிக்க விரும்பின் https://www.facebook.com/photo/?fbid=10224832678427422&set=a.1802996037828
முஹம்மது நபியின் தற்கொலை முயற்சி குறித்த விபரங்கள் புகாரியில் மட்டுமின்றி கிதாப் இப்னு இஷாக்கில் “நான் மலை மீது ஏறி கீழே பாய்வேன், அதன் மூலம் நான் இறந்து போவேன்” என்று முஹம்மது நபி அவர்களே சொன்னதாக குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் தபரியின் 76 ஆவது பக்கத்திலும் இது குறிப்பிடப் பட்டுள்ளது.


மலை உச்சியிலிருந்து முஹம்மது நபி குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போன விடயம் முஸ்லிம்களில் எத்தனை பேருக்கு இதற்கு முன்னர் தெரியும்? நபியை உயிருக்கு மேலாக நேசிக்கின்றோமேன்று சொல்கின்றவர்களுக்கு அவர் யார், எப்படி வாழ்ந்தார், என்ன செய்தார் போன்ற விடயங்களே தெரியாமல் இருக்கின்ற பரிதாப நிலையை காணலாம். மேலும் பைபிளின் சுவிசேஷங்களை ஹீப்ரு மொழியிலேயே எழுதும் அளவுக்கு திறமை படைத்தவரான வரகா பின் நவ்பல் இறந்ததும் முஹம்மது நபிக்கு வஹி (இறை செய்தி) வருவது ஏன் நின்று போக வேண்டும் என்றும் முஹம்மது நபி ஏன் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று யாரவது சிந்தித்து இருக்கின்றீர்களா?


வரகா பின் நவ்பலின் மரணத்திற்கும், இறை செய்தி வராமல் நின்று போவதற்கும், முஹம்மது நபி தற்கொலை செய்யப் போனதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? “நிச்சயமாக சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதிலே தகுந்த அத்தாட்சிகள் இருக்கின்றன.” (குர்ஆன் 16:12)
-றிஷ்வின் இஸ்மத் 07.12.2020
பொறுப்புத்துறப்பு:
எனது பதிவுகள், இடுகைகள், பகிர்வுகள், பின்னூட்டங்கள் மற்றும் பதில்களின் கீழே பதியப்படும் கருத்துக்களில் மிகவும் காத்திரமான கருத்துக்கள் மட்டுமே கவனத்திற் கொள்ளப்பட்டு பதிலளிக்கப்படும், அல்லது அவற்றிற்கான பதில்கள் முக்கியத்துவம் கருதி தனிப் பதிவாக இடப்படும். அர்த்தமற்ற புலம்பல்கள், நேரம் மற்றும் வளங்களை விரயமாக்கும் நோக்கில் அமைந்த கருத்துக்கள் மற்றும் கேள்விகள், ஆரோக்கியமற்ற கருத்துக்கள், விடய அறிவு இன்றி முன்வைக்கப்படும் கருத்துக்கள், பதிவுடன் எவ்விதத்திலும் தொடர்பற்ற கருத்துக்கள், காழ்ப்புணர்வின் காரணமாக வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படமாட்டது. அத்துடன் மோசமான மொழிநடையில் அமையும் கருத்துக்கள் காணப்பட்டால் அவை அவ்வப்பொழுது நீக்கப்படும். முறையற்ற கருத்துக்களை தொடர்ந்து பகிரும் கணக்குகள் Block செய்யப்படும்.