இஸ்லாத்தின் பார்வையில் முன்னாள் முஸ்லிம்கள் உயிருடன் இல்லை

 


"முன்னாள் முஸ்லிம்கள் என்று யாரும் கிடையாது" - PJ மற்றும் ஏனைய முஸ்லிம்கள்.


'முன்னாள் முஸ்லிம்கள் என்றெல்லாம் யாரும் கிடையாது' என்று PJ உறுதியாக சொல்கின்றார், மத விவகாரங்களில் PJ யுடன் முரண்படும் மற்றும் உடன்படும் பல முஸ்லிம்களும் கூட அதே கருத்தை உறுதியாக வெளிப்படுத்துகின்றார்கள்.


PJ உட்பட இவர்களால் எப்படி இவ்வளவு உறுதியாக இதனை சொல்ல முடிகின்றது என்பது முஸ்லிமல்லாத பலருக்கும், இஸ்லாத்தை கற்காத முஸ்லிம்களுக்கும் ஆச்சரியமாக இருக்கலாம், எனினும் அதற்கு இஸ்லாமிய அடிப்படையில் ஆதரங்களுடன் அமைந்த காரணம் இல்லாமல் இல்லை என்பது இஸ்லாத்தை கற்றவர்களுக்கு நன்கு புரியும், அதனால் தான் இஸ்லாத்தை அறிந்த முஸ்லிம்கள் யாருமே மேற்படி கருத்தை மறுப்பதற்கு முயற்சி செய்வதில்லை.


முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள் "யார் ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றாரோ, அவரை கொலை செய்யுங்கள்" (சஹீஹுல் புகாரி, பாடம் "அல்லாஹ்வின் பாதையில் போரிடல் - அல்ஜிஹாத்- நூல் 4, ஹதீஸ் 260)


அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "அவர்கள்... இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொலை செய்பவர்களுக்கு அவர்களைக் கொலை செய்ததற்காக மறுமை நாளில் உயரிய நற்கூலிகள் கிடைக்கும்." (சஹீஹுல் புகாரி :3611)


இதல்லாமல் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொலை செய்ய வேண்டும் என்பதையே சூரத்துல் மாயிதாவின் 33 அவது வசனம் கட்டளையிடுவதாக ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி மற்றும் உஸ்தாத் மன்ஸூர் என அழைக்கப்படும் எம்.ஏ.எம். மன்ஸூர் ஆகியோரால் பெரிதும் மதிக்கப்படும், முன்னிலைப் படுத்தப்படும் சர்வதேச முன்னணி இஸ்லாமிய அறிஞரான யூஸுப் அல்கர்ளாவி குடிப்பிடுகின்றார். ( பார்க்க : https://youtu.be/huMu8ihDlVA )


ஆக, மேற்படி இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஒருவர் உடனடியாக கொலை செய்யப்பட்டு விடுவார் என்பதால், 'முன்னாள் முஸ்லிம்கள்' என்று யாருமே உயிருடன் இருக்க முடியாது, கொலை செய்யப்பட உடல்கள் மட்டுமே இருக்க முடியும் என்பதையே PJ மற்றும் அதே கருத்தில் உள்ள முஸ்லிம்களின் நிலைப்பாடு பிரதீபலிக்கின்றது.


இங்கே இணைக்கப்பட்டுள்ள https://youtu.be/9AsNAkZefG0 வீடியோவில் கூட PJ அவர்கள் பாரூக் அவர்களை மட்டுமே முன்னாள் முஸ்லிமாக ஏற்றுக்கொள்கின்றார், ஏனெனில் பாருக் ஏற்கனவே முஸ்லிம்களால் கொலை செய்யப்பட்டு விட்டார்.


ஆக, முன்னாள் முஸ்லிம்கள் என்று யாரும் இல்லை என்கின்ற கருத்து, இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றவர்கள் உடனேயே முஸ்லிம்களால் கொலை செய்யப்பட்டு விடுவார்கள், ஆகவே அப்படி யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்கின்ற உறுதியான இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததே ஆகும்.


அதனால் தான் நண்பர் சாதிக் சமது போன்றவர்களைக் கூட 'கிறிஸ்தவர்' என்று சொல்கின்றார்கள் முஸ்லிம்கள். நான் கூட கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்தான் இன்னுமும் உயிருடன் இருக்கின்றேன், அதனை புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் கடந்த மாதம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையிலும் உறுதி செய்து இருந்தார். எனக்கெதிரான கொலை முயற்சிகளில் ஒன்று கூட வெற்றி அளிக்காமல் போனதால் தான் 'முன்னாள் முஸ்லிம்கள் என்று யாருமே இல்லை' என்கின்ற கருத்திற்கு முரணாக நான் இன்னுமும் உயிருடன் இருக்கின்றேன். ஒரு கொலை முயற்சி வெற்றி அளித்திருந்தால் கூட இவர்களின் கருத்து வலுப்பட்டு இருக்கும்.

குறிப்பு : ஏற்கனவே இரண்டு தடவைகள் தமிழ்நாடு முன்னாள் முஸ்லிம்கள் சார்பிலான விடியோக்களுக்கு பதில் சொன்ன PJ, இங்கே இணைக்கப்பட்டுள்ள https://youtu.be/9AsNAkZefG0 வீடியோவிற்கு இதுவரை பதிலே சொல்லவில்லை.

பொறுப்புத்துறப்பு:

எனது பதிவுகள், இடுகைகள், பகிர்வுகள், பின்னூட்டங்கள் மற்றும் பதில்களின் கீழே பதியப்படும் கருத்துக்களில் மிகவும் காத்திரமான கருத்துக்கள் மட்டுமே கவனத்திற் கொள்ளப்பட்டு பதிலளிக்கப்படும், அல்லது அவற்றிற்கான பதில்கள் முக்கியத்துவம் கருதி தனிப் பதிவாக இடப்படும். அர்த்தமற்ற புலம்பல்கள், நேரம் மற்றும் வளங்களை விரயமாக்கும் நோக்கில் அமைந்த கருத்துக்கள் மற்றும் கேள்விகள், ஆரோக்கியமற்ற கருத்துக்கள், விடய அறிவு இன்றி முன்வைக்கப்படும் கருத்துக்கள், பதிவுடன் எவ்விதத்திலும் தொடர்பற்ற கருத்துக்கள், காழ்ப்புணர்வின் காரணமாக வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படமாட்டது. அத்துடன் மோசமான மொழிநடையில் அமையும் கருத்துக்கள் காணப்பட்டால் அவை அவ்வப்பொழுது நீக்கப்படும்.