முஹம்மது நபியை நேரில் பார்த்தவர்கள் யாரும் உயிருடன் இல்லை என்பதால் அவரை எப்படி வரைய முடியும் என்று ஒரு கேள்வி எழும். அவரை நேரில் பார்த்தவர்கள் உயிருடன் இல்லை என்றாலும், அவரை நேரில் பார்க்காமல், அவரை கனவில் பார்த்த பல இஸ்லாமிய அறிஞர்கள் உள்ளனர். முஹம்மது நபியை ஒரு தடவையாவது கனவில் கண்டுவிட வேண்டும் என்ற போராவலுடன் அலையும் பல இஸ்லாமியர்கள் உள்ளனர். ஆகவே நேரில் ஒருவரை பார்க்கவில்லை என்பதற்காக அவரை வரைய முடியாது என்கின்ற வாதம் வலுவற்றுப் போகின்றது.
Mohamed Raseeth பாயீ முஹம்மதை நேரடியா பார்க்காமல் வரைய கூடாது என்பது லாஜிக் என்றால் முஹம்மதை நேரடியாக பார்க்காமல் எப்படி ஸல'வாத்து ' எப்படி உயிருக்கு மேலாக ஈமான் கொள்வதெல்லாம்? லாஜிக் இல்லையே பாயீ அப்புறம் திர்மிதீயிலே முஹம்மதின் வர்ணனை உண்டே மூக்கு இப்படி இருக்கும் கன்னம் இப்படி கண் இப்படி வாய் இப்படி உயரம் இப்படி மசுருலே வெள்ளை இத்தனை என்றெல்லாம் இருக்கே அதை வைத்து ஒரு வடிவத்தை கொடுக்க முடியாதா?"
முஹம்மது நபியை நேரில் கண்டிருக்காத ஷேய்க் அப்துல்லாஹ் கதானி, ஷேய்க் அப்துல் ஹக் முஹத்தித் தஹ்லவி, அஷ்ரப் அலி தானவி உட்பட பல இஸ்லாமிய அறிஞர்கள் அவரை கனவில் கண்டதாக கூறி இருக்கின்றார்கள். இதல்லாமல் மிக முக்கியமாக சஹீஹுல் புகாரியை தொகுத்த இமாம் புகாரி அவர்கள் முஹம்மது நபி கனவில் வந்து சொன்னதனால் தான் ஹதீஸ்களை தொகுக்க ஆரம்பித்தேன் என்று குறிப்பிட்டு இருக்கின்றார். இமாம் புகாரியும் முஹம்மது நபியை நேரில் கண்டவர் அல்ல. இமாம் புகாரி சொன்னதை நம்பாவிட்டால், முழுமையாக புகாரி ஹதீஸ்களையே நிராகரிக்க வேண்டி வரும், ஏனென்றால் ஒரு பொய்யரால் அவை தொகுக்கப்பட்டவை என்றாகிவிடும்.
முஹம்மது நபி எவ்வாறு இருந்தார் என்பதை ஹதீஸ்கள் மிகவும் தெளிவாக வர்ணிக்கின்றன, எந்த அளவுக்கு என்றால், அவரது தாடியில் எத்தனை நரைத்த முடிகள் இருந்தன என்று எண்ணிக் குறிப்பிடுகின்ற அளவுக்கு அவரைப் பற்றிய வர்ணனைகள் உள்ளன. ஆகவே முஹம்மது நபியை சித்திரமாக வரைந்தால் எப்படியான உருவம் வரும் என்று அறிய இந்த இணைப்பை அழுத்துங்கள் : https://youtu.be/VfXzz68OJwI
அல்லாஹ்வை வரைவது எப்படி என்பதை நாம் இப்பொழுது பார்க்க தேவையில்லை, ஏனென்றால் அல்லாஹ்விற்கு இரண்டு கைகள் உள்ளன, இரண்டுமே வலது பக்கமே உள்ளன என்று ஹதீஸ்கள் ( وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ ஆதாரம் : நஸாயி 5379) குறிப்பிடுகின்றன, ஆகவே வலது பக்கம் மட்டும் இரண்டு கைகள் உள்ள, இடது பக்கம் ஒன்றுமே இல்லாத அல்லாஹ் விகாரமான தோற்றத்தில் இருப்பது நிச்சயம். மேக்கப் இல்லாத பொழுது சிலர் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவது இல்லை என்பது போல, முஹம்மது நபி கற்பனை செய்த அல்லாஹ் விகாரமான தோற்றத்தில் இருப்பதால் சிலை வைக்க தடை செய்து இருக்கலாம்.
குறிப்பு : முஹம்மது நபியை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்பதால், அவரை மதிக்கும் முகமாக முஸ்லிம்களைப் போன்று சல்லால லாலஹு எல்லாம் போட முடியாது என்பதால் திரு.முஹம்மது நபி என்று மரியாதை கொடுத்து இருக்கின்றேன்.