"முஹம்மது நபியை எமது உயிரை விட மேலாக நேசிக்கின்றோம்" - எல்லா முஸ்லிம்களும்

 


ஒருவரை நேசிப்பதாக இருந்தால் அவர் யார், எத்தகையவர், எப்படிப்பட்டவர் போன்ற குறைந்தபட்ச அடிப்படைத் தகவல்களையாவது தெரிந்துகொள்ள வேண்டாமா? ஒருவரை தமது உயிரை விட மேலாக நேசிப்பது என்பது எந்த அளவு அறிவுபூர்வமானது என்பது ஒரு புறம் இருக்கட்டும், உயிரையும் விட மேலாக ஒருவரை நேசிப்பதற்கு அவர் குறித்த உண்மைகளையாவது தெரிந்துகொள்ள வேண்டாமா?

யார் இந்த முஹம்மது? எங்கே வாழ்ந்தார், எப்படியான வாழ்க்கை வாழ்ந்தார், அவரது வாழ்க்கையால், போதனைகளால், செயற்பாடுகளால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டன, உண்மையில் அவர் நல்லவரா, கெட்டவரா என்பவற்றையாவது தெரிந்துகொள்ள வேண்டாமா? முஹம்மதை உயிரிற்கும் மேலாக நேசிப்பதாக சொல்பவர்கள் அவ்வாறு தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்து இருக்கின்றர்களா?

எனதன்பின் முஸ்லிம்களே, உலகத்திலேயே வாழ்ந்த மிகச் சிறந்த முன்மாதிரி மனிதன் முஹம்மது மட்டும்தான், முழுமையாகப் பின்பற்றப்படுவதற்கு தகுதியானவர் அவர் மட்டும்தான், அவரை உயிரிற்கும் மேலாக நேசித்தால் தான் உண்மையான முஸ்லிம் ஆகலாம் என்றெல்லாம் நானும் ஒரு காலத்தில் நம்பவைக்கப்பட்டுத்தான் இருந்தேன். அவரது வாழ்க்கை குறித்து, செயற்பாடுகள் குறித்து குரானிலும், ஹதீஸிலும் இருந்து கற்று நடுநிலையாக சிந்திக்க ஆரம்பித்த பொழுது முஹம்மது தொடர்பாக கட்டிவைத்திருந்த மிகப்பெரிய புனிதப் பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்க ஆரம்பித்தது. இப்படிப்பட்ட ஒரு மனிதனையா நான் இறைதூதர், உலகம் அழியும் வரை வாழப்போகும் அனைத்து மனிதர்களுக்கும் வழிகாட்ட வந்தவர் என்றெல்லாம் நம்பவைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டேன் என்று நினைக்கும் பொழுது வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது.


மொட்டைத்தனமாக, கண்மூடித்தனமாக, யாரோ சிறிய வயதில் சொல்லித் தந்தார்கள் என்பதற்காக "முஹம்மது நபியை உயிரிற்கும் மேலாக நேசிக்கின்றோம்" என்று சொல்லிக்கொண்டு வெறிபிடித்தவர்கள் போன்று இருட்டிலே இருக்காமல், வன்முறைகளில் இறங்காமல், மற்றவர்களை தூசிக்காமல், இஸ்லாமிய மூலாதாரங்களான குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றில் இருந்து அவரை குறித்து நடுநிலையான மனநிலையுடன், ஆய்வு ரீதியாக படியுங்கள்.


முஹம்மது குறித்து சுருக்கமாக அறிந்துகொள்ள http://www.allahvin.com/2020/10/cartoon.html ஐ வாசித்துப் பாருங்கள், இதில் உள்ள விடயங்கள் உண்மையா என்று ஆய்வு செய்து பாருங்கள். முஹம்மது குறித்து கலந்துரையாட விரும்பினால், ஓய்வு நேரத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் என்ற அடிப்படையில் நாகரீகமாக இணையம் மூலம் கலந்துரையாட நான் தயாராக இருக்கின்றேன்.

யாரையும் கண்மூடிப் பின்பற்றாமல் இருப்போமாக. அனைத்தையும் கற்று, ஆராய்ந்து முடிவு செய்வோமாக.