ஜிஹாதிகளின் 72 கன்னிகளும், இஸ்லாத்தின் இரத்த வெறியும்!

 

இஸ்லாம் குறித்தும், அதில் உள்ள விடயங்கள் குறித்தும் முஸ்லிம்களே வெட்கமடைந்து வருகின்றார்கள். 53 வயதில் முஹம்மது நபி திருமணம் செய்த ஆயிஷாவின் வயதை 6 என்பதில் இருந்து 13, 17, 18, 19, 21, 28 என்று தமக்குத் தமக்குத் தெரிந்த, முடிந்த விதமாக மாற்றியாவது முஹம்மது நபியை நல்லவராக சித்தரிக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. அதாவது, ஆயிஷாவே அறிவிக்கும் ஹதீஸின் படி முஹம்மது நபி செய்த செயல் கேவலமானது, வெட்கக் கேடானது என்பதை முஸ்லிம்களே ஏற்றுக் கொள்வதன் வெளிப்பாடுதான் ஆயிஷாவின் வயதை மாற்றியமைக்கும் அண்மைய முயற்சிகள் ஆகும். இவ்வாறாக இஸ்லாத்தின் பல விடயங்களை மறைக்கும் அல்லது மாற்றியமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.



ஜிஹாதிகளுக்கு சுவர்க்கத்தில் 72 கன்னிகளை தருவதாக இஸ்லாத்தில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை என்றெல்லாம் சொல்லி இஸ்லாத்தை நாகரீகமான மதமாக சித்தரிக்க இஸ்லாமியவாதிகள் கடும் முயற்சி செய்து வருவதை அண்மைக்காலமாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் உத்தியோகபூர்வ வெளியீடான "அல்ஹஸனாத்" மாதாந்த சஞ்சிகையில் ஜிஹாதிகளுக்கு சுவர்க்கத்தில் 72 கன்னிகளை அல்லாஹ் வழங்குவார் என்பது குறிப்பிடப்பட்டு அதற்கான இஸ்லாமிய மூலாதாரமும் அதியப்பட்டு உள்ளது.


அத்துடன் இஸ்லாமிய மதம் இரத்தத்தால் மட்டுமே வளரும் என்பது கட்டம் போட்டு விசேடமாகக் குறிப்பிடப்பட்டு இஸ்லாம் உண்மையிலேயே ஒரு பயங்கரவாத மதம்தான் என்கின்ற கருத்தும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பத் தரப்பினர் எச்சரிக்கையுடன் இருப்பதால் தற்பொழுது தற்காலிகமாக இத்தகைய விடயங்களைப் பேசாமல் அடக்கி வாசிக்கின்றார்கள் இஸ்லாமியவாதிகள்.