இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட யூத விஞ்ஞானி ரொபார்ட் கில்ஹாம் அவர்களின் பேட்டி


கருவியல் ஆராய்ச்சியாளரான யூத விஞ்ஞானி டாக்டர் ரொபார்ட் கில்ஹாம் அவர்கள் தனது ஆய்வுகளின் முடிவுகளை குர்ஆனில் கண்ட பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். டாக்டர் ரொபார்ட் கில்ஹாம் அவர்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்னர் தனது முதலாவது பேட்டியை ஜோர்தானில் இருந்து வெளிவரும் அல் கத்தபா இஸ்லாமிய சஞ்சிகைக்கு வழங்கி இருந்தார்.


நிருபர் : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ், டாக்டர், ஸலாம் கூறி இந்தப் பேட்டியை ஆரம்பிக்கலாமா?

விஞ்ஞானி டாக்டர் ரொபார்ட் கில்ஹாம் : வஅலைக்கு முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  ஆம், நிச்சயமாக ஸலாத்துடன் ஆரம்பிக்கலாம். இந்த உலகில் எனக்கு மிகவுமே பிரியமான முகமன் இந்த ஸலாம் ஆகும், இவ்வளவு அற்புதமான முகமனை இஸ்லாத்தைத் தவிர வேறு எங்குமே நான் கண்டதில்லை.



நிருபர் : உங்களைப் பற்றி, உங்கள் சிறுவயது பற்றி, இளமைக் காலம் பற்றி கொஞ்சம்  சுருக்கமாகக் கூறுங்களேன்.

விஞ்ஞானி டாக்டர் ரொபார்ட் கில்ஹாம் : நான் இஸ்ரவேலில் உள்ள ஹெப்ரோன் நகரில் யூதப் பெற்றோருக்கு பிறந்தேன். நாம் யூத மதத்தில் பக்தியுள்ளவர்களாக இருந்தோம். எனது தந்தை இராணுவத்தில் கடமையாற்றினார். தாயார் ஒரு வைத்தியர். சிறுவனாக இருந்த காலத்தில் பலகை மற்றும் கம்புகள் கொண்டு பலஸ்தீனர்கள் போன்ற உருவங்களை செய்து, விளையாட்டுத் துப்பாக்கியால் அவர்களை சுட்டு விளையாடுவது எனது பொழுதுபோக்கு. நான் எனது பாடசாலைக் கல்வியை வீட்டிற்கு அருகில் இருந்த ஷாமோகரினா கல்லூரியிலும், உயர் கல்வியை ஷாமுரிகோல்ட் உயர்நிலைக் கல்லூரியிலும் கற்றேன். பின்னர் இரண்டு வருடங்கள் கட்டாய இராணுவ சேவையில் பணி புரிந்தேன். பல்கலைக் கழகக் கல்விக்காக டெல்அவீவில் உள்ள ஜால்மூஸா கணிதவியல் பல்கலைக் கழகத்தில் நிலையியல் கணிதம் கற்பதற்காக இணைந்துகொண்டேன்.



நிருபர் : இஸ்ரவேலில் உங்கள் இளமைக்கால வாழ்க்கை எப்படி இருந்தது? முஸ்லிம்கள் குறித்தும், இஸ்லாம் குறித்தும் என்ன வகையான செயற்பாடுகளை மேற்கொண்டீர்கள்?

விஞ்ஞானி டாக்டர் ரொபார்ட் கில்ஹாம் : காலையிலும், மாலையிலும் யூதர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். இஸ்லாத்தை, குரானை படிப்போம், பின்னர் அவற்றில் மாற்றங்கள் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக எப்படி சதி செய்வது என்று கலந்துரையாடுவோம், ஆய்வுகள் செய்வோம், திட்டங்கள் தீட்டுவோம். முஸ்லிம்களின் பெயரில், இஸ்லாத்தின் பெயரில் எப்படி குண்டு வெடிப்புகளை, பயங்கரவாத செயல்களை மேற்கொண்டு இஸ்லாத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவது என்று திட்டங்கள் தீட்டுவோம். இறுதியில் எமது ஆய்வுகளை மொஸாட் உளவுப் பிரிவிற்கும், அரசிற்கும் அனுப்புவோம், அதிலே சிறந்த சதித் திட்டங்களுக்கு பரிசில்கள், பணத் தொகைகள் ஆகியவற்றை அரசு வழங்கும்.



நிருபர் : நீங்கள் பங்குபற்றி போட்டுக்கொடுத்த சதித் திட்டங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திட்டங்கள் ஏதாவது உள்ளனவா?

விஞ்ஞானி டாக்டர் ரொபார்ட் கில்ஹாம் : ஆம், எனக்கு அப்படியான ஒரு திட்டம் ஞாபகத்தில் உள்ளது, அந்தத் திட்டத்திற்கு எமக்கு பரிசு கூடக் கிடைத்தது. ஹஜ்ஜின் பொழுது சைத்தானுக்கு கல்லெறியும் நிகழ்வில் பட்டாசுகளை வெடிக்க வைக்க திட்டம் தீட்டிக் கொடுத்தோம். ஹாஜிகள் சைத்தானுக்கு கல்லெறியும் இடங்களில் பட்டாசுகளை கொளுத்திவிட்டு, அவை வெடிக்கும் பொழுது முஸ்லிம்கள் போன்று இருக்கும் எமது உளவாளிகள்யா அல்லாஹ், குண்டு வெடிக்கின்றதுஎன்று சத்தமாக கத்துவார்கள், அப்பொழுது உயிர்ப் பயத்தில் விரண்டு ஓடும் முஸ்லிம்கள் நெரிசலில் ஒருவரை ஒருவர் ஏறி மிதித்து பாரிய இழப்புகளுக்கு உள்ளாவார்கள், அதன் மூலம் ஹஜ்ஜுக்கு வந்தவர்களைக் கூட காப்பாற்ற முடியாததால் அல்லாஹ் இல்லை என்பது நிரூபணமாகும் என்று திட்டம் போட்டுக் கொடுத்தோம். எனினும் குறித்த அந்த வருடம் ஹஜ்ஜின் பொழுது மழை பெய்ததால் இஹ்ராமிற்குள் மறைத்து வைத்திருந்த பட்டாசுகள் நீரில் நனைந்து விட்டன. எனினும் மழை காரணமாக பல பேர் இறந்து போனார்கள்.



நிருபர் : நீங்கள் இஸ்ரவேலில் வாழ்ந்த காலத்தில், இஸ்லாத்தை ஏற்கும் முன்னர், இஸ்லாம் குறித்த ஹிதாயத் கிடைக்கும் முன்னர் அல்லாஹ் குறித்த உங்கள் எண்ணம் எப்படியாக இருந்தது?

விஞ்ஞானி டாக்டர் ரொபார்ட் கில்ஹாம் : அல்லாஹ் என்று ஒரு கடவுள் இருப்பதாக நான் ஒரு பொழுதுமே நம்பி இருக்கவில்லை, ஏனென்றால் நாம் எப்பொழுது நினைத்தாலும் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்ய முடியுமாக இருந்தது. உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தும் கூட மிகவும் சிறிய கூட்டத்தினராகிய எங்களிடம் இருந்து அவர்களால் தப்பவே முடியாமல் இருக்கின்றது, ஆகவே அல்லாஹ் இருப்பது உண்மை என்றால் அவன் இப்படியெல்லாம் கையாலாகத் தனமுள்ள ஒருவனாக இருக்க முடியாதே என்று சிந்தித்தேன், ஆகவே அல்லாஹ் இருப்பதை நான் ஏற்றுக்கொண்டு இருக்கவில்லை. அல்லாஹ் என்பது முஹம்மது நபி தனது தேவைகளை அடைந்துகொள்ள உருவாக்கிய ஒரு கற்பனைக் கடவுள் என்று தான் நினைத்து இருந்தேன். நான் மட்டுமல்ல, இஸ்ரவேல் நாட்டில் பொதுவாக அனைவருமே இப்படித்தான் சிந்திக்கின்றார்கள்.



நிருபர் : நீங்கள் எப்படி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டீர்கள் என்பதை கேட்பதற்கு முன்னர், ஜால்மூஸா கணிதவியல் பல்கலைக் கழகத்தில் நிலையியல் கணிதம் கற்ற நீங்கள் எப்படி மருத்துவத் துறை சார்ந்த கருவியல் ஆராய்ச்சியாளராக மாற்றம் பெற்றீர்கள்?

விஞ்ஞானி டாக்டர் ரொபார்ட் கில்ஹாம் : அது ஒரு சுவாரசியமான விடயம் என்றுதான் சொல்ல வேண்டும். ஜால்மூஸா கணிதவியல் பல்கலைக் கழக விடுதியில் சக மாணவர்களுடன் தங்கியிருந்த காலத்தில் ப்ளூ பில்ம் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. பெற்றோரின் கண்காணிப்பு இல்லாததால் சக மாணவர்களுடன் இணைந்து நிறைய செக்ஸ் படங்களை பார்க்க ஆரம்பித்தேன். அவற்றில் வரும் பெண்களின் உறுப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும், அதிலே எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஒவ்வொரு விதமான உறுப்புகளையும், அவற்றின் வித்தியாசங்களையும் கவனமாக பார்ப்பேன். அவற்றிலே எனக்கு அதீத ஆர்வம் ஏற்பட்டதால், கணிதத் துறைக் கல்வியை இடை நிறுத்திவிட்டு மருத்துவத் துறையில் இணைந்து பட்டம் பெற்ற பின்னர் பெண்ணுறுப்புகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்காக கருவியல் துறையை தெரிவு செய்தேன். அல்லாஹ் அதில் தான் எனக்கு ஹிதாயத்தை நாடி இருந்தான்.



நிருபர் : நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நிகழ்வு எப்படி இடம்பெற்றது?

விஞ்ஞானி டாக்டர் ரொபார்ட் கில்ஹாம் : ப்ளூ பில்ம் பார்க்கும் பொழுது ஒரு விடயத்தை கவனமாக நான் அவதானித்தேன், உடலுறவிற்கு முன்னரும், பின்னாரும் பெண்ணுறுப்பில் நுண்ணிய மாற்றங்கள் நிகழ்வதை நான் அவதானித்தேன், அது குறித்து ஆராய முடிவு செய்தேன். அதன் பின்னாரே பெண்ணுறுப்பில் ஆணுறுப்பின் காரணமாக பதியும் ரேகைகள் குறித்து அறிந்து கொண்டேன். அவை பற்றி அறிந்தாலும், அவை பெண்ணுறுப்பில் இருந்து மறைவதற்கு எடுக்கும் காலம், குர்ஆனில் அல்லாஹ் சொல்லியிருக்கும் இத்தாவுடைய காலத்திற்கு சமனானது என்பதை தெரிந்துகொள்ள எனக்கு பல வருடங்கள் ஆனது, அதன் பின்னரே அல்லாஹ்வின் அருளின் காரணமாக எனக்கு நேர்வழி கிடைத்தது, நான் முஸ்லிமாக மாறினேன். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. இப்பொழுது நான் ஐந்து நேரம் தொழுகின்றேன், திங்கள் வியாழன் கிழமைகளில் நோன்பு நோற்கின்றேன். விரைவில் உம்ரா செல்ல நிய்யத்து வைத்துள்ளேன்.



நிருபர் : யூத விஞ்ஞானியான நீங்களே இஸ்லாத்தை உண்மை என்று அறிந்து ஏற்றுக் கொண்டு இருக்கின்றீர்கள், ஆனால் முஸ்லிமாக பிறந்த பலர் இப்பொழுது எக்ஸ் முஸ்லிம் (முன்னாள் முஸ்லிம்) என்று சொல்லிக்கொண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறிச் செல்கின்றார்களே, அது குறித்து என்ன சொல்ல விரும்புகின்றேர்கள்?

விஞ்ஞானி டாக்டர் ரொபார்ட் கில்ஹாம் : இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றவர்களுக்கு இஸ்ரவேல், அமேரிக்கா போன்றவை கோடிக்கணக்கான பணத்தை கொடுக்கின்றன, அதன் காரணமாகவே அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றார்கள், இதுதான் காரணாம் என்பதை பல முஸ்லிம்கள் நம்புகின்றார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


நிருபர் : உங்களை மிகவும் கவர்ந்த குரான் வசனம் ஏதாவது உள்ள்ளதா? அப்படியாயின் காரணம் என்ன?

விஞ்ஞானி டாக்டர் ரொபார்ட் கில்ஹாம் : சூரத்துல் அஃராப் உடைய 179 ஆவது வசனமே என்னை மிகவுமே கவர்ந்த வசனமாகும். அந்த வசனம் என்ன என்பதை முஸ்லிம்களாகிய நீங்கள் இப்பொழுதே உடனடியாக பார்த்துவிட்டு வாருங்கள், குரானின் 7: 179 வசனத்தை இப்பொழுதே பாருங்கள். அல்லாஹ் எந்த அளவு மகத்தான இறைவன், அறிவாளி, இரக்கமுள்ளவன் என்று அனைத்தையுமே இரத்தினச் சுருக்கமாக சொல்லும் அற்புதமான வசனம் அது. இப்படியான ஒரு வசனத்தை வேறு எந்த மத நூல்களிலுமே காண முடியாது, அப்படி ஒரு அற்புதமான வசனம் அது. இந்த வசனத்தை ஒவ்வொருவருமே சிந்தித்து, அல்லாஹ் எத்தகையவன் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நியாயமாக சிந்திக்கக் கூடிய அறிவுள்ள மக்களுக்கு அதில் நல்லுபதேசம் உள்ளது. இஸ்லாம் என்ன என்று அறிந்து கொள்ள இந்த ஒரு வசனம் போதும், புத்தியுள்ள மனிதனுக்கு.


நிருபர் : சரி, அனைவரும் அந்த வசனத்தை பார்த்துவிட்டு பேட்டியை தொடர்ந்து வாசிப்பார்கள் என்று நம்புவோம் டாகடர். இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்ட முன்னாள் முஸ்லிமான றிஷ்வின் உங்களது பேட்டியை தயாரிக்க என்ன காரணம் என்று நினைக்கின்றீர்கள்?

விஞ்ஞானி டாக்டர் ரொபார்ட் கில்ஹாம் :  விஞ்ஞான ஆய்வு செய்துதான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்கின்ற நிலை இல்லை. உலகத்திலே இருக்கின்ற முஸ்லிம்கள் எந்த அளவு முட்டாள்களாக, இஸ்லாத்தின் பெயரால் சொல்லக்கூடிய பொய்களை கொஞ்சமும் ஆராயாமல் நம்பக் கூடியவர்களாக, கண்மூடிப் பின்பற்றக் கூடியவர்களாக இருக்கின்றார்கள் என்பதை உணர்த்துவதற்காகவே இந்தப் பேட்டியை அவர் தயாரித்து இருக்கின்றார். முஹம்மது சிறகு வைத்த கழுதை போன்ற மிருகத்தின் முதுகில் ஏறி ஒரே இரவில் விண்வெளிக்கும் அப்பால்மிஹ்ராஜ்- சென்றுவிட்டு திரும்பி வந்தார் என்பதையே கண்மூடித்தனமாக ஈமான் கொள்ளும் முஸ்லிம்கள், உண்மையிலேயே இல்லாத நான் இஸ்லாத்தை ஏற்றதாக சொல்லப்படுகின்ற பொய்யை நம்புவதிலும், அதனை பரப்புவதிலும், அதனை நம்பி புளகாங்கிதம் அடைவதிலும், அதற்கு ஆயிரம் மாஷா அல்லாஹ் சொல்வதிலும் ஆச்சரியம் இல்லை அல்லவா?

நிருபர் : என்ன சொல்கின்றீர்கள்? நீங்கள் உண்மையிலேயே இல்லையா? விஞ்ஞானி ரொபார்ட் கில்ஹாம் என்று ஒருவர் உண்மையில் இல்லையா? அப்பொழுது இங்கே பிரசுரிக்கப் பட்டுள்ள புகைப்படம் யாருடையது?

விஞ்ஞானி டாக்டர் ரொபார்ட் கில்ஹாம் :  (சத்தமாக சிரிக்கின்றார்) இஸ்லாம் என்று வரும்பொழுது முஸ்லிம்கள் எந்த அளவு முட்டாள்களாக, சுய சிந்தனை அற்றவர்களாக, எதையுமே சுயமாக ஆராயதவர்களாக, கண்மூடித்தனமாக நம்பக் கூடியவர்களாக இருக்கின்றார்கள் என்பதற்கான சிறந்த உதாரணங்களில் ஒன்றாக நான் விளங்குகின்றேன். சந்திரனில் பாங்கோசை கேட்டது, நீல் ஆம்ஸ்ட்ராங் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது, (மொஹி புகாயி) மொரிஸ் புகைய்ல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது போன்ற பொய்களைப் போன்று யூத விஞ்ஞானி ரொபார்ட் கில்ஹாம் கதையும் ஒரு பொய்யே. நான் உண்மையும் அல்ல, அப்படி ஒரு ஆய்வும் நடக்கவில்லை, அப்படி எந்த ஒரு ரேகையும் கண்டுபிடிக்கப்படவும் இல்லை. இல்லாத அல்லாஹ்வையே இருப்பதாக நம்பிக்கொண்டு ஐந்து வேலை மண்டையை மண்ணில் முட்டும் முஸ்லிம்கள் இல்லாத வின்ஞ்ஞானி ரொபார்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார் என்று நம்புவதில் என்ன ஆச்சரியம்?  இங்கே இருப்பது மறைந்த பிரபல மேற்கத்தேய திரைப்பட இயக்குனர் செர்சியோ லியோனி அவர்களின் புகைப்படம். அற்புதமான படைப்புகள் சிலவற்றை தந்த இயக்குனர். இதுவரை கூட இந்தப் போலிப் பேட்டியை வாசிக்காமல், தலைப்பைப் பார்த்துவிட்டு பல முஸ்லிம்கள் இதனை share செய்து இருந்தால் கூட ஆச்சரியம் இல்லை.



நிருபர் : முஸ்லிம்களை இந்த அளவு முட்டாள்களாக எடை போட்டு அவர்கள் தலையில் மிளகாய் அரைத்து விட்டீர்களே, சரி கடைசியாக முஸ்லிம்களுக்கு என்னதான் சொல்ல விரும்புகின்றீர்கள்?

விஞ்ஞானி டாக்டர் ரொபார்ட் கில்ஹாம் : முஸ்லிம்கள் இஸ்லாத்தை முறையாக கற்று சுயமாக சிந்திக்காத வரை அவர்கள் முஸ்லிம்களாகவேதான் இருப்பார்கள். முஸ்லிம்கள் எப்பொழுது சுய சிந்தனையுடன், திறந்த மனதுடன் இஸ்லாத்தை கற்க ஆரம்பிக்கின்றார்களோ, அன்றைக்கு இஸ்லாம் மியூசியத்தை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும் என்பது உறுதி.



==========================================================

"யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்"
"கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்."
இப்படியாக ஒரு பதிவு, "மௌலவி .முஹம்மது கான் பாகவி, நன்றி - சமரசம்" என்னும் மூலாதாரத்துடன் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இணையத்தில், சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்கள் மத்தியில் ஆயிரக்கணக்கான "மாஷா அல்லாஹ், அல்லாஹு அக்பர்" வாழ்த்துக்களுடன் பிரபல்யமாக பகிரப்பட்டு வருகின்றது.
நீல் ஆர்ம்ஸ்ட்ரோங், ரோவன் அட்கின்சன், லோரா புஷ், மைக்கல் ஜாக்சன் போன்றவர்களையெல்லாம் முஸ்லிம் ஆக்கியவர்களுக்கு இதென்ன பெரிய வேலை என்று சும்மா இருந்தால், குரான் தொடர்பில் அண்மையில் சவால் விட்ட சோதிடன் இந்திக தொடவத்தவிற்கு பதில் சொல்கின்றேன் என்று புறப்பட்ட ஒரு முல்லாவும் இதே கதையை தனது உரையில் சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றி இருக்கின்றார்.


"ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்-கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும்.
உடலுறவின் பொழுது ஒரு பெண்ணின் பெண்ணுறுப்பில் பதிவாகியுள்ள ஆணின் ஆணுறுப்பு டி.என்.. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. இதனை குரானின் இத்தாவுடைய (2:228) வசனம் சொல்வதால் இவர் இஸ்லாத்தை ஏற்றார்" என்கின்றது அந்த பதிவு.


இது குறித்து சற்று தேடிப் பார்த்த பொழுது ராபர்ட் கில்ஹாம் என்கின்ற பெயரில் ஒரு விஞ்ஞானியோ, ஆய்வாளரோ இல்லை என்பது தெரிய வந்தது. அத்துடன் வேறு சில தளங்கில் பகிரப்பட்டுள்ள படம் எகிப்தியரான Dr. Abdel Basset Mohamed al-Sayed என்பவருடையது என்பதும் தெரிய வந்தது.


"யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்" என்கின்ற பொய்யை பரப்பிய சில இணையங்களின் இணைப்புகள்: