முஹம்மது நபியின் உருவப்படங்கள் வரையப்பட்டிருந்தால் இஸ்லாம் வீழ்ச்சி அடைந்திருக்கும்

இந்த உலகில் தற்பொழுதும் இருக்கும் மதங்கள், கொள்கைகளை உருவாக்கியவர்களில் ஒரே ஒருவரைத் தவிர வேறு யாருடைய உருவப்படங்களையும் வரைவதற்கு அவர்கள் உருவாக்கிய மதங்களோ, கொள்கைகளோ, அவற்றை பின்பற்றுகின்றவர்களோ தடை விதிக்கவில்லை. இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றவர்கள் மட்டுமே முஹம்மது நபியின் உருவப்படங்களை வரைவதை தடை செய்து வருகின்றார்கள்.
முஹம்மது நபி தன்னை வரைய வேண்டாம் என்று நேரடியாக எங்கேயும் விசேட தடை விதித்து இருப்பதாக அறிய முடியாவிட்டாலும், முஹம்மது நபியின் உருவப்படங்களை வரைவதை முஹம்மதிற்குப் பின் வந்தவர்கள் தடை செய்து இருப்பது உண்மையில் இஸ்லாத்தை பாதுகாப்பதற்கான ஒரு தந்திரமான முயற்சி என்று சொல்வதற்கான நியாமான காரணங்கள் உள்ளன.முஹம்மது எப்படி வாழ்ந்தார், என்ன செய்தார், எப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் போன்றவற்றை விபரிக்கின்ற ஹதீஸ்களையும், அவற்றுடன் தொடர்பான குரான் வசனங்களையும் நடுநிலையான சிந்தனையுடன் வாசிக்கின்றவர்கள், ‘முஹம்மது ஒரு இறைதூதராக இருந்திருக்கவே முடியாதுஎன்கின்ற உண்மையை உணர்ந்து, அவர் இறைதூதர், மிகவும் நல்ல மனிதர்என்று சிறு வயது முதல் ஊட்டப்பட்டு இருந்த நம்பிக்கையை துணிந்து தூக்கி எறிந்து விட்டு அதிலிருந்து விடுதலையாவதை காணக்கூடியதாக இருக்கின்றது.


முஹம்மது குறித்த ஹதீஸ்களை, குரான் வசனங்களை மட்டும் படித்துவிட்டு, நியாயமாக சிந்திக்கும் முஸ்லிம்களே இப்படியாக அவரைஇவரெல்லாம் ஒரு இறைதூதராக எப்படியுமே இருக்க முடியாதுஎன்று நிராகரிக்கும் பொழுது, குரான் ஹதீஸ்களுடன் சேர்த்து அவரது உண்மையான தோற்றத்தையும், அவரது நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தும் உருவப்படங்களும் வரையப்பட்டு இருந்திருக்குமேயானால் பெரும் எண்ணிக்கையான சாதாரண முஸ்லிம்களே "இந்த கேவலம் கெட்ட நபரையா நாம் பின்பற்ற வேண்டும், இவரா இறைதூதர், ஒருபோதும் இருக்க முடியாது" என்று சொல்லி, உண்மையை உணர்ந்து இஸ்லாத்தை விட்டு விலகியிருப்பார்கள் என்பதுதான் உண்மை. ஆதாரபூர்வமான ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு முஹம்மதை சித்திரமாக வரையும் பொழுது முஸ்லிம்கள் கடும் கோபம் கொள்ளத் தூண்டப்படுவதையும், வன்முறையில் ஈடுபட தூண்டப்படுவதையும் காண்கின்றோம். இதற்கான முக்கிய காரணம், ‘எமது நபி இப்படி இருந்திருக்க மாட்டார்என்கின்ற முஸ்லிம்களின் பிழையான நம்பிக்கையே.முஹம்மது நபி தனது ஐம்பது வயதுகளில் வெறும் ஆறே வயதான சிறுமி ஆயிஷாவை திருமணம் செய்தமை, பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்த ஒன்பது வயது சிறுமியுடன் செக்ஸ் வைத்துக்கொண்டாமை, கணவன், சகோதரன், தந்தை ஆகியோரை கொலை செய்துவிட்டு 17 வயது ஸபிய்யாவை தனதாக்கிக்கொண்டு உடலுறவு கொண்டமை, கொள்ளையடிப்பதற்காக யுத்தங்கள் செய்தமை, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் தனக்கு விசேடமாக 20% பங்கு கேட்டமை போன்ற விடயங்களே பெரும்பாலும் சித்திரமாக வரையப்பட்டிருக்கின்றன. இத்தகைய சித்திரங்கள் மீதும், வரைந்தவர்கள் மீதும், பிரசுரித்தவர்கள் மீதும் முஸ்லிம்கள் கோபம் கொள்ள வைக்கப்பட்டுள்ளார்கள்.இன்று இருக்கும் முக்கியமான மதங்களின் ஸ்தாபகர்களின் உருவங்களை வரைவதற்கு எத்தகைய தடைகளும் இல்லை, மாறாக இஸ்லாத்தின் ஸ்தாபகர் முஹம்மது நபியை வரைவதற்கு மட்டும்தான் தடை இருக்கின்றது என்றால், அதற்கென்று ஒரு விசேட காரணம் இல்லாமலில்லை. புத்தர், இயேசு போன்றவர்களைப் போலல்லாமல் முஹம்மது நபி அவர்கள் 28 இற்கும் அதிகமான யுத்தங்கள், கொள்ளைகள், படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கின்றார், அத்துடன் பத்துப் பெண்கள், ஒரு சிறுமி என்று பதினொரு பேரை திருமணம் செய்துள்ளதுடன், பல பாலியல் அடிமைகளையும் வைத்து இருந்திருக்கின்றார் இவற்றை இஸ்லாமிய புனித நூல்களே சொல்கின்றன. இத்தகைய காரணங்களால் முஹம்மது நபியின் உண்மையான உருவப்படங்கள் வரையப்படுவதை தடை செய்வதற்கான தேவை இஸ்லாத்தை காப்பாற்ற துடிக்கின்றவர்களுக்கு இருக்கின்றது. எனினும் முஹம்மது நபி ஈடுபட்டது போன்ற மோசமான செயல்களில் மற்ற மதங்களின் ஸ்தாபகர்கள் ஈடுபடாத காரணத்தால், அவர்களின் உருவப்படங்களை வரைவதை தடை செய்வதற்கான விசேட தேவை எதுவும் மற்ற மதங்களுக்கோ, அவற்றை பின்பற்றுகின்றவர்களுக்கோ இல்லாமலிருக்க வேண்டும்.  முஹம்மது நபி வாழ்ந்த காலத்தில் வீடியோ வசதி இருந்திருந்து, அவரது வாழ்க்கையின் நிகழ்வுகள் வீடியோ பதிவின் மூலம் கிடைத்து இருந்திருக்குமேயானால், இன்று உலகில் முஸ்லிம் என்று சொல்வதற்கு யாருமே இல்லாமல் இருந்திருப்பார்கள். இதனை உணர்ந்துகொள்வதற்கு முஹம்மது நபி தொடர்பான அனைத்து ஹதீஸ்கள், குரான் வசனங்களை நடுநிலையான சிந்தனையுடன் படிப்பதே போதுமானது.

Comments

  1. 22 மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனைவிட்டு நீங்காது.

    நீதிமொழிகள் 27
    34 விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.

    மத்தேயு 12

    ReplyDelete

Post a Comment

கருத்துக்கள், மறுப்புக்கள், மாற்றுப் பார்வைகள் வரவேற்கப்படுகின்றன.