பெண்ணுரிமைகளுக்கு எதிராக பெண்களையே களமிறக்கும் ஆணாதிக்க மதவாதம்!

 


பாலியல் வன்புணர்வுக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்லாமிய போதகர் தாரிக் ரமழானை உடனே விடுதலை செய் என்று பிரெஞ்சு அரசைக் கேட்டு சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் ஒரு கூட்டம் ஆர்ப்பட்டம் செய்தது, பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்கும் இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்று இன்னொரு கூட்டம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளது, "சாமியார்களும், பாதிரியார்களும், இஸ்லாமிய பிரச்சாரகர்களும், பிக்குகளும் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்வதை சட்டபூர்வமாக்கு" என்று அரசை வேண்டி நாளை இன்னொரு கூட்டம் பெண்களையும் கூட்டிக்கொண்டு வந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தாலும் ஆச்சரியமில்லை. பக்தியின் பெயரால் பெண்கள் புறக்கணிக்கப் படுகின்றார்கள், அதற்கு பெண்களையே பயன்படுத்துகின்றார்கள்.


இன்று காலை கொழும்பு கோட்டை பிரதான ரயில் நிலையத்திற்கு முன்னல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் சில "அறிவுபூர்வமான 😛 " பதாதைகளும், ஆர்ப்பாட்டத்தின் காட்சிகளும் புகைப்படங்களாக......
இதில் மிகவும் கவலையான விடயம் என்னெவென்றால், "எங்களை அனுமதிக்கத் தேவையில்லை" என்று பெண்களையே தங்களுக்கான அனுமதிக்கு எதிராக பதாதைகள் தூக்கவைத்ததும், பேச வைத்ததுமாகும். பெண்களின் பிறப்புறுப்புச் சிதைப்பிற்கு ஆதரவாக இலங்கையில் சில முஸ்லிம் பெண்கள் பேச வைக்கப்பட்டுள்ளமையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது. 'ஆண்களின் மூளையால் சிந்திக்கும் பெண்கள்' என்ற ஒரு பதத்தை சமூக செயற்பாட்டளரும், எழுத்தாளருமான ஸர்மிளா செய்யத் பயன்படுத்துவது ஞாபகத்திற்கு வருகின்றது. பெண்களை வைத்தே பெண்ணுரிமைகளை நசுக்குகின்றார்கள்.


சபரிமலைக்கும், பள்ளிவாசலுக்கும் பெண்கள் போவதோ, மக்காவுக்குள் கிறிஸ்தவர்கள் போவதோ வெற்றி அல்ல, மாறாக சபரிமலைக்கோ, மக்காவிற்கோ, தேவாலையத்திற்கோ, கோயிலுக்கோ, பள்ளிவாசலிற்கோ (ஆண், பெண், மூ்றாம் பாலினத்தார் உட்பட) மனிதர்கள் யாருமே நன்மை நாடிப் போக வேண்டிய தேவையில்லை என்கின்ற அறிவு மக்களுக்கு வருவதுதான் உண்மையான வெற்றி. (புகைப்படங்கள் என்னால் நேரடியாக எடுக்கப்பட்டவை.)