இறந்த குழந்தை ஒருபுறம், நபியின் துஆவோடு பெற்றோரின் சல்லாபம் மறுபுறம்


 (நன்றி : Saadiq Samad )


இஸ்லாமிய அபத்தங்கள்!

இஸ்லாமிய ஆண்களில் சில முன்னோடிகள் இருப்பதுப்போல் இஸ்லாமிய பெண்களிலும் சில முன்னோடிகள் வழிகாட்டிகள் இருக்கிறார்கள் என்று இஸ்லாம் சொல்கின்றது. இந்த பதிவில் அப்படிப்பட்ட வழிகாட்டிகளில் ஒருவரானா உம்மு ஸுலைம் பற்றித்தான் படிக்கப்போகிறோம் இந்த சம்பவங்கள் புஹாரி, முஸ்லிம் ஆகிய இஸ்லாமிய மூலாதரப் புனித நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


சரி நாம் சம்பவத்திற்கு செல்வோம்.........

அபூதல்ஹா, உம்மு ஸுலைம் என்ற தம்பதியருக்கு ஓர் ஆண் குழந்தையிருந்தது. அது மிக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தது. நம்ம அபூதல்ஹா வியாபாரக்காரணமாக வெளியூர் சென்று இரவு நேரம் வீடு திரும்புகிறார். என்ன வியாபாரம் என்றெல்லாம் குறுக்கு விசாரணை செய்யக்கூடாது "வியாபாரம் என்றால் வியாபாரம்” அவ்வளவுதான்....

அவரு வீடு திரும்பும் முனனரே நோய்வாய்ப்பட்டிருந்த அவர்களின் ஓரே குழந்தை இறந்து விட்டது. அப்போதான் நம்ம உம்மு ஸுலைம் யோசிக்குது.....  வெளியிலிருந்து வரும் கணவருக்கு உடனடியாகத் தெரிவித்து கவலையையும், வருத்தத்தையும் உருவாக்கக் கூடாது என்று தன் ஒரே குழந்தை இறந்ததை கணவனிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார் உம்மு ஸுலைம் .

கணவர்..................... தன் நோய்வாய்ப்பட்ட குழந்தையைப் பற்றி விசாரிக்கிறார் அதற்கு “குழந்தை முன்னரை விட நிம்மதியாய் உள்ளது” என்றார் மனைவி உம்மு ஸுலைம். வியாபாரத்திற்கு போய் இரவில் வீட்டிற்கு வந்த தந்தை தனது குழந்தையை தொட்டு தூக்கவில்லை, அதனை கொஞ்சவில்லை, அவ்வளவு ஏன், குழந்தையை பார்க்கக் கூட இல்லை.... ஏன்னா குழந்தை மீது அம்புட்டு பாசம்.....

உம்மு ஸுலைம் கணவனுக்கு உணவு பரிமாறிவிட்டு, பாயை போட்டார். அபூ தல்ஹாவிற்கு குழந்தையை பார்க்கக் கூட அக்கறையில்லை, தெரிந்ததெல்லாம் சாப்பாடு, அது முடிந்தால் சல்லாபம். அன்றிரவு இருவரும் தாம்பத்ய இன்பம் அனுபவித்துவிட்டு பின்னர் தம்பதிகள் இரவில் நிம்மதியாய் உறங்கினர்.

கவனிக்க அங்கே தன் குழந்தை பிணமாக கிடக்கிறது, ஆனால் தாய் தன் கணவனுடன் சல்லாபத்தில்
.... சாப்பாடு, செக்ஸ் எல்லாம் முடிந்துதான் மனைவி குழந்தை இறந்த செய்தியை கணவனுக்கு சொல்கின்றார், புல்லை மேலே அம்புட்டு அக்கறை... உடனே “அடி பாவி இரவு குழந்தை இறந்து விட்டது அதை என்னிடம் சொல்லாமல் எப்படி என்னுடன் உறவில் ஈடுப்பட்டாய் சீ நீயெல்லாம் ஒரு தாயா” ....என்றெல்லாம் அந்தத் தந்தை கொந்தளிக்கவில்லை, மாறாக தாயாகிய நீயே பொறுமை காக்கும் போது நானும் பொறுமை காக்கிறேன் எனக் கூறி குழந்தையை அடக்கம் செய்யும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள்

மேலே நடந்த அனைத்து செய்திகளும் முஹம்மதுக்கு சொல்லப்படுகிறது சொல்லப்பட்டது. உடனே முஹம்மது ஆத்திரத்துடன் “சீ, கெட்ட கேட்டிற்கு உனக்கு செக்ஸ் தான் ஒரு கேடா” என்று உம்மு ஸுலைமை கண்டிக்கவில்லை இரவு முழுக்க இறந்த குழந்தையை விட்டு விட்டு உறவு கொண்டாயா? என்று சிலாகித்து அத்தம்பதிகளுக்காக துஆச் செய்தார்கள்.

துஆ செய்தது முஹம்மது ஆச்சே அல்லாஹ் சும்மா இருப்பாரா... உடனே அவர் தன்னோட பங்கிற்கு தனது அருளை அள்ளிக் கொட்டினார்.


தம்பதியரின் பொறுமை, நபியின் துஆ என எல்லாமுமாகச் சேர்ந்து அத்தம்பதியரின் வாழ்வில் ஒளி பிறந்தது. அன்றிரவு செய்த சல்லாபத்தின் காரணமாக அல்லாஹ்வின் நாட்டத்துடன் அவர்களுக்கு ஆண் குழந்த பிறந்தது. அதன் பெயர் அப்துல்லாஹ். அக்குழந்தை மிகப்பெரும் ஆலிமாகவும், அதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தது. அனைவரும் ஹாபிழாக, ஆலிமாக விளங்கினார்கள் அறிஞராக,  மார்க்கம் பேணும் பிஜை, ஜாகீர், அல்தாஃபி, பாக்கர் போல் மகத்தான ஒழுக்க சீலர்களாய் பரிணமித்து இருப்பார்கள் என நம்பலாம்

சரி கதை கேட்டாச்சு, இப்ப கேள்வி என்னான்னா  உம்மு ஸுலைம் போன்ற முன்மாதிரி முஸ்லிம் ஒருத்தி இன்று இருந்து, குழந்தை இறந்து, அதை கணவனிடம் கூறாமல் அந்த இரவு சல்லாபத்தில் திளைக்கலாமா?
எத்தனை முஸ்லிம் உம்மாக்கள் இதனை ஒரு முன்மாதிரி என்று ஏற்றுக் கொள்வார்கள்?

இந்த ஹதீஸ் கதைகளிலிருந்து வெளிப்படும் உண்மைகள்

1)நோயான குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லத்தேவையில்லை. (முஹம்மதுவுக்கு மருத்துவம் தெரியும் என்பதால்தானே “நபிவழி மருத்துவம்” உருவாக்கி இருக்கின்றார்கள்.)

2)குழந்தை இரவில் இறந்தால் கணவனே உடன் இருந்தாலும் அவனிடம் உடனே சொல்லவேண்டிய தேவை இல்லை.

3) இறந்த குழந்தையின் பிணத்தை அருகில் வைத்துக்கொண்டே கணவனுடன் சல்லாபத்தில் ஈடுபடலாம்.

4) மனைவியின் தவறை கணவன் கண்டுக்கொள்ள தேவையில்லை

5) மத தலைவருக்கு இவ்விஷயம் தெரிந்தாலும். குழந்தை பிணத்தின் அருகில் கலவியில் ஈடுபட்டதை அங்கிகரித்து துஆ செய்யலாம்.

6) முக்கியமாக இஸ்லாம் பகுத்தறிவான மார்க்கம் என்பது இதன் மூலம் நிருபிக்கப்பட்டு விட்டது


#இஸ்லாத்தை_சிந்திப்போம் 04

======================================================

புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்

புஹாரி :
5470 அறிவிப்பவர்  அனஸ் :
 (என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூதல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா (ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூதல்ஹா (ரலி) திரும்பி வந்தபோது என் மகன் என்ன ஆனான்?’ என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), ‘அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா (ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா (ரலி) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?’ எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா (ரலி), ‘ஆம்என்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாகஎன்று பிரார்த்தித்தார்கள். பின்னர் உம்முசுலைம் (ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா (ரலி), ‘குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டு செல்என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். என்னிடம் உம்மு சுலைம் (ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, ‘இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?’ என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளனஎன்று பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு அப்துல்லாஹ்எனப் பெயர் சூட்டினார்கள்.