உங்களை நரகத்திற்காகவே படைத்துள்ளேன் – இப்படிக்கு அன்புள்ள அல்லாஹ்

அனைத்தையும் படைத்த, மிக்க இரக்கமுள்ளவரான, நிகரற்ற அன்புடையவரான அல்லாஹ்வின் நரகம் இந்தப் படத்தில் இருப்பதை விட பல ஆயிரம் மடங்குகள் கேவலமானதாகவும், கொடூரமானதாகவும் இருக்கும் என்று சொல்லி சாந்தி மார்க்கம் இஸ்லாம் நம்மை பயம் காட்டப் பார்க்கின்றது என்பதை குரான், ஹதீஸை வாசித்தால் புரிந்துகொள்ளலாம். 





 وَلَـقَدْ ذَرَاْنَا لِجَـهَنَّمَ كَثِيْرًا مِّنَ الْاِنْسِ‌
(குரான் 7:179 )
"நிச்சயமாக நாம் மனிதர்களிலிருந்து அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்" என்று மிக்க இரக்கமுள்ளவரான அல்லாஹ் பாசம் பொங்கி வழியும் படியாக குர்ஆனில் சொல்லி இருக்கின்றார். (மூலப் பிரதியில் மனிதர்களுடன், (  الْجِنِّ) ஜின்களையும் சேர்த்துத்தான் சொல்லப்பட்டு இருக்கின்றது, ஆனால் அப்படி ஒரு உயிரினம் இருப்பதற்கான எந்த ஒரு நம்பத்தகுந்த ஆதாரமும் இல்லை என்பதால், அதனை அரபியிலும், தமிழிலும் தவிர்த்து விட்டேன், காரணம் - குரான் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டாமா?)



ஒரு மனிதன் மீது அவனது தாயை விட 70 மடங்கு அன்பு வைத்திருப்பதாக பீலா விடும் அல்லாஹ், தனது குர்ஆனில் இப்படி சொல்லி மனிதர்கள் மீது அன்பைப் பொழிகின்றார் என்றால், காருண்ய நபி கண்ணுமணி அவர்கள் தனது பங்கிற்கு என்ன சொல்கின்றார் என்று தெரியுமா?



நான் (மிஃராஜ் சிறகு வைத்த குதிரையில் விண்வெளிக்கு போன பயணத்தின் போது) நரகத்தை எட்டிப் பார்த்தேன். அதில் வேதனை செய்யப்படுவோரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்”. என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி- 3241, 5198)


ஆக, அல்லாஹ்வும் நபியும் சேர்ந்து எப்படியும் நரகத்தை நிறைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றார்கள்.



அல்லாஹ்வே ஷைத்தானை படைப்பாராம், அவரே மனிதனையும் படைப்பாராம், ஷைத்தானை மனிதனுக்கு சுஹூது செய்ய சொல்வாராம் (ஷைத்தானை தனக்கு சுஜுது செய்யும்படி சொல்லு என்று எந்த மனிதனாவது அல்லாஹ்வைக் கேட்டானா?), பின்னர் அல்லாஹ்விற்கும் ஷைத்தனுக்கும் இடையில் "நீயா - நானா" என்ற ஈகோ பிரச்சினை வந்து சண்டையில் சட்டை எல்லாம் கிழியுமாம்.  அந்த ஈகோ முத்திப் போய், அதன் விளைவாக மனிதர்களை எல்லாம் வழிகெடுக்க அல்லாஹ்வே ஷைத்தானுக்கு பூரண அனுமதி கொடுப்பாராம். பின்னர் அதனை வைத்தே அப்பாவி மனிதர்களில் அனேகமானவர்களை நரகத்திலே தள்ளி அங்கே நெருப்பில் சுட்டு, தணலில் வாட்டி வாட்டி பார்பிக்யூ போடுவாராம்.

அல்லாஹ்வுக்கும், ஷைத்தானுக்கும் பிரச்சினை என்றால் அவர்கள் ரெண்டுபேரும் உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டியதுதானே? இதுகூடத் தெரியாதா? இல்லை ஆளுக்கொரு வாளை அல்லது வெடிகுண்டை எடுத்துக்கொண்டு அல்லாஹு அக்பர் என்று ஜிஹாத் செய்து செத்துத் தொலைய வேண்டியதுதானே? அதைச் செய்யாமல் மனிதரை வழிகெடுக்க ஷைத்தானுக்கு பூரண அனுமதி கொடுத்து அதை காரணமாக வைத்து மனிதர்களில் அதிகமானவர்களில் நரகத்தில் போட்டு BBQ பண்ணுவதில் அல்லாஹ்வுக்கு என்ன ஆத்தலோ? கேட்டாலே இது கேவலமான காமடி மாதிரி தெரியவில்லையா
? இதனையெல்லாம் சிந்தித்து பார்க்கும் பொழுது அல்லாஹ் என்பவர் 'எல்லாம் வல்ல, மிக்க இரக்கமுள்ள, நிகரற்ற அன்புடைய' கடவுளாக தெரிகின்றாரா, இல்லை வலிமலக்கழிப்பு (Constipation) பிடித்த கொடிய சர்வாதிகாரியை விடவும் கேவலமாகத் தெரிகின்றாரா? நெஞ்சைச் தொட்டுச் சொல்லுங்கள் முஸ்லிம்களே!



-றிஷ்வின் இஸ்மத்


#இஸ்லாத்தை_சிந்திப்போம் 03