மனிதனுக்கு உள்ள மகத்தான ஆற்றல்தான் அவனது சிந்தனா சக்தி
ஆகும். கேள்வி, பார்வை போன்ற
புலன்கள் மனிதனின் சிந்தனை சக்தியின் கூர்மைக்கு வலுச்சேர்க்கின்றன. இஸ்லாம்
நமக்கு அறிமுகம் செய்து தரும் எல்லாம்
வல்ல ஏக இறைவனாம் அல்லாஹ்விடமிருந்து மனித சமூகத்திற்கு வழிகாட்டுவதற்காக
வழங்கப்பட்ட, பிழைகள் தவறுகள்
முரண்பாடுகள் அற்ற மிக உன்னதமான வழிகாட்டல் தொகுப்பே குர்ஆன் என்பது உறுதியான இஸ்லாமிய நம்பிக்கை ஆகும். اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ
اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا என்று குர்ஆனின் 47 ஆவது அத்தியாயமான ‘முஹம்மது‘ உடைய 24 ஆவது வசனம் அமைந்துள்ளது.
இஸ்லாமிய நம்பிக்கைப்படி எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வினால்
அனுப்பப் பட்ட இறுதித் தூதர் முஹம்மதுவின் பெயரிலேயே அமைந்துள்ள அந்த
அத்தியாத்தின் (சூராவின்) 24 ஆவது வசனத்தின்
மொழிபெயர்ப்பாக “அவர்கள் இந்தக்
குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது
பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?” என்பது அமைந்திருக்கின்றது.
படைத்த எல்லாம் வல்ல இறைவனே குர்ஆனை ஆராய்ந்து பார்க்க
வேண்டாமா என்று ஆசையாகக் கேட்கும் பொழுது, இறைவனின் இறுதி வேதம் என்று சொல்லப்படும் இஸ்லாத்தையே
ஆராய்ந்து பார்ப்பதில் இறைவனுக்கு எந்த பிரச்சினைகளும். ஆட்சேபனைகளும் இருக்கப்
போவதில்லை என்பதுடன், முஸ்லிம்களும் அதனை மனதார வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இஸ்லாத்தை ஆராய்ந்து பார்க்கும் பணிக்கு இந்த இணையத்தை
அர்ப்பணம் செய்கின்றேன்.
அல்லாஹ்வே சிந்திக்க, ஆராய சொல்லும் பொழுது, சிந்திக்காமல், ஆராயாமல் குருட்டுத்தனமாக பக்தி என்ற வெறி ஊட்டப்பட்டு வெறுமனே இஸ்லாத்தை பின்பற்றுவது ஒரு முஸ்லிமிற்கு பொருத்தமான ஒன்றாக இருக்காது. எல்லாம் வல்ல இறைவனிடம் இருந்து இஸ்லாம் வந்திருந்தால், தான் படைக்கும் மனிதனின் சிந்தனைக்கு முன்னால் கூனிக் குறுகி நிற்கும் படியான பலவீனமான நிலையில் அதே இறைவன் அதனது இறுதி வேதத்தை அனுப்பி வைத்திருக்க மாட்டார் என்று உறுதியாக நம்பலாம்.
தான் அனுப்பிவைத்த வேதத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்கின்ற அல்லாஹ்வின் ஆசையை முடிந்தவரை நிறைவேற்றும் வகையில் அமையப்பெறவுள்ள இத்தளத்திற்கு “அல்லாஹ்வின் ஆசை” என்று பெயரிடப்பட்டுள்ளது. இணைய வடிவமைப்பில் எனக்கு அனுபவங்கள் இல்லை. நண்பர்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. வடிவமைப்பிற்கு உதவி செய்த நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
பதிவுகளை விரைவில் எதிர்பாருங்கள்.
- றிஷ்வின் இஸ்மத்
#இஸ்லாத்தை_சிந்திப்போம்
01அல்லாஹ்வே சிந்திக்க, ஆராய சொல்லும் பொழுது, சிந்திக்காமல், ஆராயாமல் குருட்டுத்தனமாக பக்தி என்ற வெறி ஊட்டப்பட்டு வெறுமனே இஸ்லாத்தை பின்பற்றுவது ஒரு முஸ்லிமிற்கு பொருத்தமான ஒன்றாக இருக்காது. எல்லாம் வல்ல இறைவனிடம் இருந்து இஸ்லாம் வந்திருந்தால், தான் படைக்கும் மனிதனின் சிந்தனைக்கு முன்னால் கூனிக் குறுகி நிற்கும் படியான பலவீனமான நிலையில் அதே இறைவன் அதனது இறுதி வேதத்தை அனுப்பி வைத்திருக்க மாட்டார் என்று உறுதியாக நம்பலாம்.
தான் அனுப்பிவைத்த வேதத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்கின்ற அல்லாஹ்வின் ஆசையை முடிந்தவரை நிறைவேற்றும் வகையில் அமையப்பெறவுள்ள இத்தளத்திற்கு “அல்லாஹ்வின் ஆசை” என்று பெயரிடப்பட்டுள்ளது. இணைய வடிவமைப்பில் எனக்கு அனுபவங்கள் இல்லை. நண்பர்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. வடிவமைப்பிற்கு உதவி செய்த நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
பதிவுகளை விரைவில் எதிர்பாருங்கள்.
- றிஷ்வின் இஸ்மத்