'ஹஜ்ஜுக்கு செல்ல மாட்டோம்' - இலங்கை முஸ்லிம்களின் முக்கிய தீர்மானம்!


இந்த ஆண்டு இலங்கையில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு யாத்ரீகர்கள் செல்வதில்லை என தீர்மானிக்கப் பட்டது.
- செய்தி (மடவளை நியூஸ் : https://www.madawalaenews.com/2022/05/i_994.html )


காரணம் என்னவாக இருந்த போதும், இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் இந்த நாட்டில் எடுக்கப்பட்ட மிகச் சிறப்பான தீர்மானம் இதுவே எனலாம்.

 

மில்லியன் கணக்கில் பணத்தை செலவு செய்து அரேபியாவுக்குச் சென்று (ஆண்கள் ஜட்டி கூடப் போடாமல் உடலில் ஒரு சோடி வெள்ளைத் துணிகளை சுற்றிக்கொண்டு) ஒரு கனவுருக் கறுப்புக் கட்டிடத்தை சுற்றுச் சுற்றி ஓடுவதும், அந்தக் கறுப்புக் கட்டிடத்தின் ஒரு மூலைக்குக் கை காட்டுவதும், கை காட்டும் அதே மூலையிலேயே பதிக்கப் பட்டுள்ள கறுப்புக் கல்லுக்கு முண்டியடித்து லிஃப் கிஸ் அடிப்பதும், இரண்டு கற்பாறைகளுக்கு இடையில் மாறி மாறி ஓடுவதும், (இல்லாத) ஷைத்தானுக்குக் கல்லெறிவதாக நம்பிக்கொண்டு சவூதி அரசாங்கம் கட்டி வைத்துள்ள தூண்களுக்கு மூடர் கூட்டத்தில் நெரிச்சல் பட்டுக் கல்லெறிவதும், எவ்வித மருத்துவ பயனுமே இல்லாத ஒதோ ஒரு கிணற்றுத் தண்ணீரை ‘அற்புதம், நோய் நிவாரணி, குடிக்கின்ற நோக்கத்தை நிறைவேற்றும்’ என்றெல்லாம் வீணாக நம்பிக்கொண்டு அள்ளி அள்ளிக் குடிப்பதும், மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவன் தான் கனவு கண்டதாகச் சொல்லித் தனது மகனின் கழுத்தை வெட்டிக் கொலை செய்ய முயன்ற பைத்தியகாரத் தனமான கொலை வெறியைச் செயலைத் தியாகம் எனப் போற்றி நினைவு கூர்வதற்காக இரண்டு வயதைக் கடந்த, கொம்பு, பல் உடையாத குறிப்பிட்ட வகை ஆண் மிருகங்களின் கழுத்தை வெட்டி வகை தொகை இன்றிக் கொன்று போடுவதும், கடைசியாக (உள்ளே இருக்கும் மூளையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்தி சுயமாகச் சிந்திக்காமல் இருந்ததற்கு நன்றிக் கடனாக) மண்டையை மொட்டையடிப்பதும், மேற்சொன்ன மூடத்தனங்களை எல்லாம் செய்து முடிக்கும் வரை அந்தக் குறிப்பிட்ட நாட்களில் நகம் வெட்டாமல், அக்குள் ரோமங்களை நீக்காமல் இருப்பதும் மிகப்பெரிய முட்டாள்தனமும், மடமையும் மட்டுமல்ல குரூரமும் ஆகும். ஆகவே காரணம் என்னவாக இருந்த போதும் இலங்கையில் இருந்து எந்த ஒரு முஸ்லிமும் மேற்சொன்ன முட்டாள்த்தனங்களை, மடத்தனங்களை, குரூரங்களை செய்வதற்காக இவ்வருடம் சவூதி அரேபியா செல்லப் போவதில்லை என்பது மகிழ்ச்சியான விடயமே.


எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதார நிலை மேம்பட்ட பின்னர் இந்த முட்டாள்த்தனங்களை, மடத்தனங்களை செய்வதற்கும், கொலைவெறிக் குரூரங்களை நினைவு கூர்வதற்கும் இலங்கை முஸ்லிம்கள் மீண்டும் சவூதி அரேபியா செல்வதற்கு தமது பொருளாதார வளத்தை, காலத்தை
, உடல்வலுவை வீணாக்காமல், இலங்கையிலேயே இருக்கும் பல அழகிய இடங்களை, வரலாற்றுத் தொன்மை மிக்க பகுதிகளைப் பார்வையிடச் செல்லலாம். அதற்கு அடுத்த படியாக உலகில் இருக்கும் பல அழகான இடங்கள், நகரங்களுக்கு உல்லாசப் பிரயாணம் செல்லலாம். இவை அனைத்தையும் பார்த்து ரசித்த பின்னர், ஒரு மாறுதலுக்காக வேண்டுமானால் சவூதி அரேபியாவின் மதீனா நகருக்குச் செல்லலாம். ‘மதீனா நகருக்குச் செல்லலாம்’ என்று கூறியதன் காரணம் மிஸ்டர் டுவண்டி பெர்சன்ட் உடைய சமாதியும், பள்ளிவாசலும் அங்கே இருக்கின்றன என்பதனால் அல்ல, மாறாக ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ள மக்கா நகரத்துடன் ஒப்பிடும் பொழுது மதீனா நகரின் நவீன நிர்மாணம் அழகிய முறையில் திட்டமிடப்பட்ட ஒன்றாக உள்ளது என்பதனால் மட்டுமே ஆகும். எனினும் ஐரோப்பிய நகரங்களுடன் ஒப்பிடும் பொழுது மதீனா நகரின் திட்டமிட்ட நிர்மாணம் ஒன்றும் பெரிய விடயமே கிடையாது, ஆகவே ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கு உங்களுக்கு விஸா கிடைப்பதில் சிரமங்கள் இல்லை என்றால் மதீனாவிற்குச் செல்வதற்கு பெரிதாக முக்கியத்துவம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.


இலங்கை முஸ்லிம்களின் முன்மாதிரியை சிந்தனைக்கு எடுத்து இந்திய முஸ்லிம்களும்
, ஏனைய முஸ்லிம்களும் தமது பொருளாதார வளங்களை அர்த்தமில்லாமல் வீணடிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து சிந்திக்க வேண்டும். ஹஜ்ஜிலே கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும், கஃபாவிலே கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் என்பதெல்லாம் கலப்படமில்லாத சுத்தமான பொய்களே என்பதை ஞாபகம் வைத்துக் கொல்லுங்கள். இதுவரை காலமும் ஹஜ்ஜு, உம்ரா பிரயாணங்கள் மூலம் வருமானம் ஈட்டி வந்த ‘மத வியாபார’ பயண முகவர் நிலையங்கள், தமது பிரயாணப் பாதையை மாற்றி ஆரோக்கியமான சுற்றுலாவுக்கு மக்களை கூட்டிச் செல்வதற்கான எதிர்காலத் திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் தமது வருமானங்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.


இலங்கையில் பல அழகான கடற்கரைகள் உள்ளன
, இலங்கையின் மலைநாடு ரம்மியமானது, இலங்கையின் கலாச்சார முக்கோண வலயம் (Cultural triangle) தொன்மையான வரலாற்றுச் செறிவு மிக்கது, ஆகவே  உங்களிடம் போதிய அளவு பணம் இருந்தால், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிரமப் படுபவர்களுக்கு உதவுங்கள், அத்துடன் மேற்சொன்ன இடங்களுக்கு, பகுதிகளுக்குச் சென்று ரசிப்பதில், மகிழ்வதில் உங்கள் பிரயாணங்களை ஆரம்பியுங்கள், அதற்கு அடித்த படியாக நீங்கள் இந்தியா செல்லத் திட்டமிடலாம். சுவர்க்கம் கிடைக்கும், பாவங்கள் மன்னிக்கப்படும், பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றெல்லாம் சொல்லப்படும் பொய்களை நம்பி ஏமாந்து மக்கா சென்று மடத்தனங்களை, முட்டாள்த்தனங்களைச் செய்யாதீர்கள், ரூரங்களை நினைவுகூராதீர்கள்.


சுயமாக சிந்தியுங்கள்
, விவேகமாக செயற்படுங்கள், மகிழ்சியாக வாழுங்கள், மற்றவர்களும் மகிழ்ச்சியாக வாழ உதவுங்கள்.


-றிஷ்வின் இஸ்மத்
 01.06.2022